நாடி ஜோதிடத்தில் துல்லியமான பலன் கூறப்படுவதன் ரகசியம் என்ன தெரியுமா?

nadi-jothidam

விண்ணில் இருக்கும் நட்சத்திரங்கள், கிரகங்கள் போன்றவை பூமியில் வாழ்கின்ற மனிதர்கள் மீது ஒரு நிச்சயமான தாக்கத்தை ஏற்படுத்துவதை விஞ்ஞானிகளும் ஏற்றுக் கொள்கின்றனர். இவற்றை அக்காலத்திலேயே அறிந்த நம் முன்னோர்கள் அந்த கிரகங்கள், நட்சத்திரங்கள் போன்றவற்றை அடிப்படையாக வைத்து மனிதர்களின் எதிர்கால பலன்களை கூறும் ஜோதிடக் கலையை உண்டாக்கினர். இத்தகைய ஜோதிடக் கலையில் கை ரேகைகளைப் பார்த்து பலன் கூறுவது, ஜாதகம் பார்த்து பலன் கூறுவது போன்றவை அதிகம் பிரபலமான ஜோதிட கலைகளாக இருக்கின்றன. இவற்றில் பழங்காலத்தில் சித்தர்கள் பனை ஓலையில் எதிர்காலங்களில் பிறக்கப் போகின்ற மனிதர்களுக்கான எதிர்காலப் பலன்களை எழுதியதையே நாடி ஜோதிடம் என அழைக்கின்றனர். இந்த நாடி ஜோதிடம் என்றால் என்ன? அவை எவ்வாறு துல்லியமான பலன்களை கூற வல்ல ஒரு ஜோதிட கலையாக இருக்கிறது என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

karuvurar Siddhar

பல்வேறு கலைகளை உலகத்திற்கு அளித்த சித்தர் பெருமக்கள் ஜோதிட கலையிலும் நிபுணத்துவமும், ஞானமும் கொண்டவர்களாக இருந்தனர். சித்தர்களின் ஜோதிட கணிப்பு படி ஒரு நாள் ஏற்படும் சூரியோதயத்திலிருந்து அடுத்த நாள் ஏற்படும் சூரியோதயம் வரை இருக்கும் 24 மணி நேரத்துக்கு, மொத்தம் 60 நாழிகைகள் வரும். அந்த 60 நாழிகைகளில், ஜாதகத்தில் இருக்கின்ற 12 ராசிகளின் ஒரு சுற்று முடிவடையும். சூரியன் உதிக்கும் ராசி மேஷ ராசியானால், ஒரு தோராயமான கணக்கின் படி ஒவ்வொரு ஐந்து நாழிகையும் அடுத்தடுத்த ராசிகளுக்குரிய நாழிகையாக மாறி, அடுத்த நாள் சூரியோதயத்துக்கு முன்பு 12 ராசிகளின் சுற்றும் முடிந்துவிடும். இந்த சூரியோதய ராசிகளின் சுழற்சி மற்றும் நாழிகைகள், கிரகங்களின் நிலைகளை பற்றிய சரியான கணக்கினை அறிந்த தமிழ் சித்தர்கள் எதிர்காலங்களில் பிறக்க போகின்ற மனிதர்களுக்கான பலன்களை பனையோலையில் நாடி ஜோதிட பலன்களாக எழுதி வைத்தனர்.

ஒரு நாளில் தென்படுகின்ற 12 ராசிகளை லக்னமாக வைத்து, அதில் பிறந்தவர்களின் ஜாதகத்தைக் நாம் சுலபமாக கணித்து விட முடியும். ஒரு நாளில் 12 லக்னங்களில் பிறந்தவர்களுக்கு 12 ராசி ஜாதகங்கள் உருவாகும். ஒரு மாதத்துக்கு 12 x 30; ஒரு வருடத்துக்கு 12 x 365. இப்படி பிரபவ வருடம் தொடங்கி முதலிய 60 வருடங்களுக்கும் 12 x 365 x 60 என்ற கணக்கில் ஜாதகங்கள் உருவாகும்.

nadi jothidam

இதற்கு பிறகு மீண்டும் 60 வருடங்களுக்குக் கணித்தால், 120 வருடங்களுக்குக் ஜாதகங்கள் கிடைக்கும். உதாரணமாக, 90 வயது முதியவருக்கு அவர் பிறந்த வருடம், மாதம், தேதி, லக்னம் தெரிந்தால், நாடி ஜோதிடத்தில் சுலபமாக ஜாதகம் கிடைக்கும். லக்னங்கள் வாரியாகப் பிரித்து, துருவ நாடி ஜோதிட நூலை சென்னை ஓரியண்டல் லைப்ரரியில் சேமித்து வைத்திருக்கிறார்கள். இந்த ஜோதிட குறிப்புகளை அடிப்படையாக வைத்து எதிர்காலத்தில் பிறக்க போகிறவர்களுக்கான ஜாதகங்களை கணிக்க முடியும்.

- Advertisement -

jathagam astro

உதாரணமாக 2020-ஆம் ஆண்டு பிறக்கப் போகும் குழந்தைக்கு இப்போதே நம்மால் ஜாதகம் இயற்ற முடியும். மேலும் ஒரு நாளின் நேரத்தை வைத்து ஜாதகம் உருவாவதால், நமது கற்பனையில் 2020-ல் குழந்தை பிறப்பதாக நினைத்து வருடம், மாதம், தேதி, நேரம் ஆகியவற்றை அளித்தால் ஜாதகம் உருவாக்க இயலும். ‘எஃபிமரீஸ்’ (பஞ்சாங்கத்துக்கான தகவல் தொகுப்பு) குறிப்புகள் பின்வரும் பல வருடங்களுக்குக் கிடைக்க கூடியதாக இருக்கிறது. அதை அடிப்படையாக வைத்து எதிர் வருங்காலங்களில் பிறப்பவர்களுக்கு இப்போதே ஜாதகம் எழுதி வைத்து அவர்களை ஆச்சர்யத்திற்குள்ளாக்க முடியும். தற்போது வருட பஞ்சாங்கம் கணிப்பவர்களில் பலர் ‘எஃபிமரீஸ்’ குறிப்புகளை பயன்படுத்தி பலனடைகின்றனர்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் ஜாதகத்தில் திக் பலம் தரும் பலன்கள் என்ன

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Nadi jothidam ragasiyam in Tamil. It is also called as Nadi jothida vilakkangal in Tamil or Jothida kalai in Tamil or Jathaga palangal in Tamil or Sithargalin nadi jothidam in Tamil.