உங்கள் ஜாதகத்தில் திக் பலம் தரும் பலன்கள் என்ன தெரியுமா?

thik-balam
- Advertisement -

ஜோதிடக் கலை என்பது வானில் இருக்கும் நட்சத்திரங்களை போன்றது. அதில் நாம் முழுமையாக அறிந்து கொள்ள முடியாத பல சூட்சுமங்கள் இருக்கின்றன. எனவே தான் பல ஆண்டுகள் ஜாதகம் கணிப்பதில் அனுபவமுள்ள ஜோதிடரை அணுகி நமது ஜாதகத்தை கணிப்பது சிறந்த முறையாக பெரியோர்களால் அறிவுறுத்தப்படுகிறது. ஜாதகத்தில் கிரகங்களினால் ஏற்படும் பலன்களைப் பற்றி கணிப்பதில் பல விதிகள் இருக்கின்றன. அதில் பலரும் கேள்விப்பட்ட ஒரு விடயமாக திக் பலம் இருக்கிறது. அந்த திக்பலம் என்றால் என்ன என்பதையும் அது எத்தகைய பலன்களை நமக்கு கொடுக்கும் என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

astro wheel 1

ஜாதகத்தில் கணிக்கப்படும் திக் பலம் என்பது ஒரு கிரகம் நிற்கும் திசையைக் குறிப்பதாகும். இந்த பலத்தினை அடைந்த கிரகம் ஆட்சி, உச்சம் போன்ற வலுவான நிலைகளில் இருப்பதற்கு நிகரான பலன்களைத் தரும் என்பது உறுதி. லக்னத்தில் குரு, புதனும், நான்கில் சந்திரன், சுக்கிரனும், ஏழில் சனியும், பத்தில் சூரியன், செவ்வாயும் திக்பலம் பெறுகிறார்கள்.

- Advertisement -

மேற்கண்ட ஒன்று, நான்கு, ஏழு, பத்தில் இருக்கும் கிரகங்கள் முழு திக்பலம் பெறுகிறது. அதே நேரத்தில் திக்பலத்தினை நெருங்கும் எந்த ஒரு கிரகமும் வலுப் பெற்ற கிரகமாக மாறுகிறது. அந்த கிரகம் நெருங்கும் தூரத்தைப் பொருத்து அதன் பலம் மாறுபடும். ஸ்தான பலம் எனப்படும் எந்த ஒரு கிரகத்தின் ஆட்சி, உச்சம் போன்ற நிலைகளை அடைவதற்கு நிகராகவும் அதற்கு அடுத்ததாகவும் கூறப்படுகின்ற இந்த திக்பலம் ஜாதகத்தில் பாபக் கிரகங்களுக்கு மட்டுமே சிறப்பாகச் சொல்லப்பட்டதாக இருக்கிறது. இது திக்பலத்தை பற்றி ரிஷிகள் கூறிய சூட்சுமங்களில் ஒன்றாகும். பாபக் கிரகங்கள் ஒரு ஜாதகத்தில் நேரிடையாக ஆட்சி, உச்சம் போன்றவைகளை அடையாமல் மறைமுகமாக திக்பலத்தின் வழியாக வலுப் பெற்றால் அந்த ஜாதகருக்கு நன்மையான பலன்களே அதிகம் ஏற்படும்.

jathagam astro

எடுத்துக்காட்டாக ஜாதகத்தில் செவ்வாய் கிரகத்திற்கு திக்பல இடமான பத்தாமிடத்தில் செவ்வாய் ஆட்சி பெறுவதை காட்டிலும் அங்கே செவ்வாய் திக்பலம் பெறுவதே நன்மைகளை தரும். செவ்வாயின் இந்த நிலையை நமது ஜோதிட சாஸ்திர நூல்கள் “தசம அங்காரஹ” எனும் செவ்வாய் கிரகத்தின் சிறப்பான நிலையாக கூறுகின்றன. பொதுவாக செவ்வாய் ஜாதகத்தில் பத்தாமிடத்தில் நீசம் பெற்றாலும் அதே பத்தாமிடத்தில் தான் செவ்வாய் தனது திக்பலத்தால் நன்மைகளைச் செய்வார்.

- Advertisement -

astrology

அதே நேரம் பத்தில் செவ்வாய் ஆட்சி, உச்சம் போன்ற நேர்வலுவினைப் பெற்று திக்பலமும் பெறுவது நல்ல நிலை அல்ல என பல ஜோதிட நூல்கள் கூறுகின்றன. இதுபோன்ற நிலையில் செவ்வாய் சுபர்களான சந்திரன் அல்லது குரு கிரகத்தோடு தொடர்பு கொள்ளும் போது மட்டும் நன்மையான பலன்கள் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
சுக்கிரன் பெயர்ச்சி பலன்கள்

இது போன்று மேலும் பல ஜோதிடம் சார்ந்த தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Thik balam in astrology in Tamil. It is also called as Jothida ragasiyangal in Tamil or Jothida sutchamam in Tamil or Jathagam kanippu in Tamil or Jothida nunukkangal in Tamil.

- Advertisement -