சர்ப்ப தோஷத்தால் திருமணத்தடை, குழந்தை தடை உள்ளதா? இந்த மந்திரத்தை மட்டும் 48 நாட்கள் சொல்லி உங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்

sarpam-nagam
- Advertisement -

ராகு கேது ஆகிய இரண்டு கிரகங்களால் ஏற்படும் தோஷம் சர்ப்ப தோஷம் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. ராகு கேது ஆகிய இரண்டு கிரகங்களும் பாம்பினை குறிக்கின்றன. ராகு கேது தோஷம் இருப்பவர்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்படும், திருமண தடை உண்டாகும், குழந்தை பாக்கியம் தடை படும். இது போன்ற சர்ப்ப தோஷத்தில் இருந்து விடுபடுவதற்கு இதற்கென்று தனியாக ஆலயங்கள் இருக்கின்றன. ராகு ஸ்தலமாக நாகேஸ்வரம் உள்ளது. கேது ஸ்தலமாக ஸ்ரீ காளஹஸ்தி மற்றும் பெரும்பள்ளம் ஆகியவை உள்ளன. இரண்டு கிரகங்களையும் ஒன்றாக வணங்குவதற்கு சிறப்பு வாய்ந்த ஸ்தலமாக திருப்பாம்புரம் அமைந்துள்ளது. இந்த சர்ப தோஷத்தில் இருந்து விடுபட சிறப்பு வாய்ந்த மந்திரத்தை பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ragu-rahu-dasa

பாம்பின் தோற்றத்தில் பாம்பினுடைய தலையை ராகு என்றும், உடலை கேது என்றும் குறிப்பிடுகின்றனர். ஒரு நாளில் ஒன்றரை மணி நேரம் ராகு காலம் இருக்கிறது. இந்த நேரத்தில் எந்த சுபகாரியங்களையும் மக்கள் செய்வதில்லை. ராகு கேது இருவரின் வரலாறும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறது.

- Advertisement -

தேவர்களும், அசுரர்களும் பாற்கடலில் அமிர்தம் வேண்டி மந்தர மலையை மத்தாக்கி, வாசுகியை கயிறாக்கி பாற்கடலை கடைந்தனர். அப்பொழுது பல பொருட்கள் வெளிவந்தன. இறுதியாக வெளிவந்தவர் தன்வந்திரி. இவருடைய கையில்தான் அமிர்தம் இருந்தது. இதனை அசுரர்கள் பிடுங்கிக் கொண்டனர். எனவே மகாவிஷ்ணு மோகினி அவதாரமெடுத்தார்.

ragukethu

அவரைக் கண்டு மயங்கிய அசுரர்கள் மோகினியே அசுரர்கள் மற்றும் தேவர்களுக்கு அமிர்தத்தை சரி சமமாக பங்கிட்டுக் கொடுக்கும் படி ஒப்புக்கொண்டனர். இதன்படி மோகினி முதலில் தேவர்களுக்கு அமிர்தத்தை வழங்கிக் கொண்டிருக்கும் பொழுது ராகுவும், கேதுவும் சூரியனும் சந்திரனுக்கும் இடையில் தேவர்கள் உருவில் அமர்ந்து கொண்டு அமிர்தத்தைப் பருகினர். இதனைக் கண்ட சூரியன், சந்திரன் இவர்கள் அசுரர்கள் என்று கூறினர். உடனே மோகினி ராகுவின் தலையை வெட்டினாள்.

- Advertisement -

இதனால் அசுரர்களுக்கும், தேவர்களுக்கும் இடையே சண்டை பெருமளவில் வெடித்தது. அந்த நேரத்தில் ராகுவின் தலை சிவ சிரசில் உள்ள சந்திரனின் தலையை கவ்வியது. சந்திரனிடமிருந்த அமிர்தத்தை ராகுவின் தலை பருகியது. எனவே ராகுவிற்கு பல தலைகள் தோன்றியது. உடனே சிவபெருமான் ராகுவின் தலையை மாலையாக கழுத்தில் அணிந்துகொண்டார். இதனால் ராகுவின் தலையும் அமைதியானது. ராகுவைப் போலவே கேதுவும் அமிர்தத்தை பருகியதால் பல வால்களைப் பெற்றான். இருவரும் சிவனின் அருளால் கிரகமாகவும் போற்றப்பட்டார்கள்.

mohini

ராகுவும், கேதுவும் பின்னோக்கி நகரும் கிரகங்களாகும். எனவே இவற்றை சாயா கிரகங்கள் என்று அழைக்கின்றனர். ஒருவருடைய ஜாதகத்தில் சர்ப தோஷம் உள்ளதா என்பதை ராகுவும், கேதுவும் எந்த கட்டத்தில் உள்ளனர் என்பதை பொறுத்தே நினைக்கின்றனர். எனவே ஒருவருடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ராகு கேதுவின் அருள் மிகவும் அவசியமாகிறது.

எனவே ஒருவருடைய ஜாதகத்தில் சர்ப்ப தோஷம் உள்ளதென்றால் உடனே அதனை நிவர்த்தி செய்ய வேண்டும். அதற்காக மதியம் 12 மணி முதல் 121/2 மணிக்குள் ஏதேனும் ஒரு வேண்டுதலை மனதில் வைத்து, சூரியனைப் பார்த்தவாறு நின்று கொண்டு, கைகளைக் கூப்பி இந்த மந்திரத்தை 11 முறை உச்சரிக்க வேண்டும். பின்னர் நின்ற இடத்திலேயே 11 முறை சுற்றி விட்டு சூரியனைப் பார்த்தவாறு தரையைத் தொட்டு கும்பிடவேண்டும். இதனைத் தொடர்ந்து 48 நாட்கள் அல்லது அதற்கு மேலும் செய்துவர நீங்கள் நினைத்த வேண்டுதல் நிச்சயம் நிறைவேறும்.

ragu

“ஓம் நவ நாத சித்தர் ஹஸ்திகார் நமோ ரட்சிப்பாய் ரட்சிப்பாய் சுபமஸ்து”

- Advertisement -