பெண்கள் இந்த தவறை செய்யாமல் இருந்தாலே புடவை, நகை சேரும் வாய்ப்பு பல மடங்கு பெருகுவதோடு, வீட்டில் இருக்கும் நகையும் அடமானத்திற்கு செல்லாமல் இருக்கும்.

- Advertisement -

பெண்களைப் பொறுத்த வரை எவ்வளவு தான் புடவையும், நகையும் வாங்கி குவித்தாலும் அவர்களுக்கு போதும் என்ற மனமே இருக்காது. இது பெண்களிடம் இருக்கக் கூடிய இயற்கையான ஒரு குணம் தான். இதை தவறு என்று சொல்வதற்கு இல்லை. இந்த புடவையும், நகையும் சேராமல் போவதற்கும் அவர்கள் செய்யும் சில தவறுகளே காரணம் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. அது என்ன காரணம் அதை எப்படி சரி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

புடவை, நகை சேர வேண்டும் என்று பெண்கள் ஆசைப்படுவது எல்லாம் சரியான ஒன்று தான். அந்த ஆசையை நிறைவேற்றுவதற்கான உழைப்பையும், செயலையும் அவர்கள் கட்டாயம் செயல்படுத்த வேண்டும். அப்படி செய்தும் சிலரிடம் புடவை, நகை போன்றவை சேராமல் போகும். அதே நேரத்தில் வீட்டில் இருக்கும் நகையும் அடிக்கடி அடமானத்திற்கு சென்று விடும். இவையெல்லாம் சரி செய்ய நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வீட்டில் நகை சேர பெண்கள் செய்ய வேண்டியவை
பெண்கள் ஏதேனும் விசேஷத்திற்கு  புடவையை உடுத்தி சென்று வந்த பிறகு, சிறிது நேரம் தானே உடுத்தினோம் என்று அதை துவைக்காமல் அப்படியே போட்டு மறுபடியும் எடுத்து உடுத்துவார்கள். இந்த ஒரு செயலை பெண்கள் எந்த காரணம் கொண்டும் செய்யவே கூடாது.

ஒரு முறை உடுத்திய துணியை அலசாமல் மறுமுறை உபயோகிக்கும் போது அது தோஷமான துணியாக மாறி விடும். எனவே அதை கட்டாயம் அலசி தான் மறுமுறை உடுத்த வேண்டும். மற்ற துணிகளை அலசி பயன்படுத்தலாம் பட்டுப் புடவைகளை அப்படி பயன்படுத்த முடியாது அல்லவா, அதற்கு பட்டுப்புடவையின் ஏதேனும் ஒரு ஓரத்தில் லேசாக தண்ணீர் வைத்து துடைத்து ஆற விட்டு அதன் பிறகு மடித்து வைத்து விடலாம்.

- Advertisement -

இதே போல தான் நகையும் எங்கு அணிந்து சென்று வந்தாலும் அதை எடுத்து வைக்கும் முன்பு ஒரு முறை மஞ்சள் கலந்த தண்ணீரில் நினைத்த பிறகு துடைத்து தான் எடுத்து வைக்க வேண்டும். இதையே தான் நகை அடமானத்திலிருந்து வந்தாலும் செய்ய வேண்டும். இப்படி செய்யாமல் அணிந்து வந்த நகையை அப்படியே கழற்றி பீரோவில் வைக்கும் போது அந்த நகையும் தோஷம் ஆகி விடும். அப்படியான நகைகளும் நம்மிடம் தங்காமல் சென்று விட கூடிய வாய்ப்புகள் அதிகம்.

நாம் உடுத்திக் கொண்டு செல்லும் போது பலரும் அதை பார்த்து இருப்பார்கள். எல்லோரின் பார்வையும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை அந்த பார்வையானது நம் அணிந்திருக்கும் நகை புடவை மீது பட்டு அதுவே பெரிய தோஷமாக நமக்கு மாறி விடும். அது மட்டும் இன்றி உடுத்திய ஆடையோ, நகையோ சுத்தப்படுத்தாமல் மறு முறை பயன்படுத்தும் போது சுக்கிர பகவானின் அனுகிரகம் கிடைக்காமல் போய் விடும் . நகை, புடவை இவை எல்லாம் சேர சுக்கிர பகவானின் அருள் கட்டாயமாக தேவை அது இல்லை என்றால் இந்த பொருட்கள் எதுவும் நம்மிடம் தங்காது.

- Advertisement -

அதுமட்டுமின்றி தங்கம், வெள்ளி இரண்டையும் தனித்தனியாக தான் வைக்க வேண்டும். இரண்டையும் ஒன்றாக வைக்கும் போதும் நகை சேரும் வாய்ப்பு இருக்காது என்றும் சொல்லப்படுகிறது. நகையை முடிந்த அளவு சந்தனத்தினால் ஆன பெட்டியில் வைத்தால் ஸ்வர்ண ஆகர்ஷணம் என்பது அதிகமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

முடியாதவர்கள் நகை வைக்கும் பெட்டியில் ஒரு சின்ன சந்தன கட்டையாவது போட்டு வையுங்கள். இத்துடன் பச்சை கற்பூரமும் வைக்கலாம். இவை அனைத்தும் விட பெருமாள் கோவிலில் அர்ச்சனை செய்த துளசி இலையை நகைகளில் வைக்கும் போது நகை சேரும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வீட்டில் நல்ல வைப்ரேஷன் கிடைக்கவும், உங்கள் பொருளாதாரம் உயரவும் 1 டம்ளர் தண்ணீர் போதுமே!

புடவை, நகை சேராமல் போவதற்கான காரணங்களை தெரிந்து அதை சரி செய்வதற்கான பரிகாரமும் தெரிந்து கொண்டிருப்பீர்கள். இந்த பரிகார முறைகளில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நீங்களும் இதை பின்பற்றி பலன் அடையுங்கள்.

- Advertisement -