வீட்டை சுத்தம் செய்ய எளிமையான வீட்டுக் குறிப்பு

ujala
- Advertisement -

உஜாலா சொட்டு நீலம். இதை வாங்கி எவ்வளவு நாட்கள் ஆனது. இந்த பெயரை கேட்டாலே ஏதோ ஒரு சந்தோஷம் வருகிறது அல்லவா. இனி இந்த உஜாலாவை வாங்கும் போதும் இல்லத்தரசிகளுக்கு சந்தோஷம் இன்னும் இரட்டிப்பாகும். அப்படிப்பட்ட பயனுள்ள சில வீட்டு குறிப்பு தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

இந்த குறிப்பை தெரிந்து கொண்டால் வீட்டை சுத்தம் செய்ய இனி உங்களுக்கு கை வலிக்கவே வலிக்காது. உஜாலாவை வைத்து சுத்தம் செய்ய வீட்டு குறிப்பா. குழப்பமா இருக்கா. அவசரப்படாதீங்க. பொறுமையா இந்த பதிவை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

குறிப்பு 1:

உப்பு கறை படிந்த, துருப்பிடித்த சிங்க் உங்க வீட்ல இருக்கா. அதன் மேலே பாத்திரம் தேய்க்கும் லிக்விடை ஊற்றி நன்றாக தடவி விடுங்கள். பிறகு 1 மூடி உஜாலா சொட்டு நீலத்தை ஊற்றி நன்றாக எல்லா இடத்திலும் படும்படி ஸ்டீல் நாரை வைத்து தேய்த்து விடுங்கள். பிறகு இரண்டு மூன்று நிமிடம் கழித்து மீண்டும் ஒருமுறை ஸ்டீல் நரை வைத்து கொஞ்சம் அழுத்தம் கொடுத்து தேய்த்து விட்டு, தண்ணீரை ஊற்றி அலசி கழுவி பாருங்கள்.

உங்கள் சிங்க் எப்படி இருக்குதுன்னு. இதே போல உங்க வீட்டில் இருக்கும் பழைய சில்வர் பாத்திரத்தை தேய்த்தாலும் அது புதுசு போல ஜொலிக்கும். இதே போல கல்லால் போடப்பட்ட சிங்கையும் நீங்கள் சுத்தம் செய்யலாம்.

- Advertisement -

குறிப்பு 2:

எல்லோர் வீட்டிலும் டீ குடிக்க செராமிக் கப் பயன்படுத்துவோம். கொஞ்சம் நாட்களில் அதில் டீக்கறை, காபி கறை படிந்து ரொம்பவும் அசுத்தமாக மாறிவிடும். ஒரு பெரிய பாத்திரத்தில் 1 ஸ்பூன் பாத்திரம் தேய்க்கும் லிக்விட், மூன்று சொட்டு உஜாலா நீலம் ஊற்றி, அதில் கொஞ்சம் சுடுதண்ணீரை ஊற்றுங்கள். இந்த செராமிக் கப் மூழ்கும் அளவுக்கு சுடு தண்ணீர் தேவை.

10 நிமிடங்கள் அந்த கப் நான் தயார் செய்து வைத்திருக்கும் சுடுதண்ணீரில் ஊறியதும், எடுத்து வெறுமனே தேய்த்து கழுவினால் அதில் படிந்திருந்த கறை எல்லாம் நீங்கி செராமிக் புதுசு போல ஜொலி ஜொலிக்கும்.

- Advertisement -

குறிப்பு 3:

ஒரு பிளாஸ்டிக் ஜக் எடுத்துக்கோங்க. அதில் துணி துவைக்கும் லிக்விட் அல்லது பவுடர் 1 டேபிள் ஸ்பூன், பாத்திரம் தேய்க்கும் லிக்விட் 1 டேபிள் ஸ்பூன், ஆப்ப சோடா 1 டேபிள் ஸ்பூன், வினிகர் 2 மூடி, ஊற்றி இதில் 1/2 லிட்டர் அளவு தண்ணீரை ஊற்றி நன்றாக கரைத்து விடுங்கள். இதோடு வெறும் 4 சொட்டு உஜாலா சொட்டு நீலம் ஊற்றி, நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

இதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றவும். அல்லது ஒரு வாட்டர் கேனில் ஊற்றி, மூடியில் சின்ன சின்ன ஓட்டை போடவும். உங்களுடைய பாத்ரூம் டாய்லெட் முழுவதும் ஸ்பிரே செய்துவிட்டு, லேசாக பிரஷை போட்டு தேய்த்து கழுவினாலே உங்களுடைய பாத்ரூம் பளிச் பளிச்சென மாறும்.

குறிப்பு 4:

டாய்லெட்டை தினம் தினம் கழுவ முடியாதவர்கள் இதை ஸ்பிரே செய்துவிட்டு, சிறிது நேரம் அப்படியே ஊறவிட்டு, வெறுமனே தண்ணீர் ஃபிளஸ் செய்து விட்டாலும் உங்களுடைய கழிவறை சுத்தமாக இருக்கும். இதே லிக்விடை வாஷ்பேஷனில் ஊற்றி கழுவவும் நீங்கள் பயன்படுத்தலாம். வாஷ்பேஷன் நிமிடத்தில் பளிச்செனன மாறும்.

குறிப்பு 5:

வீடு துடைக்க பக்கெட்டில் தண்ணீர் எடுத்துப்பீங்க. அதில் வழக்கம் போல ஃப்ளோர் கிளீனர் ஊத்திக்குவீங்க. டெட்டால் ஊத்துவீங்க. இதோட வெறும் 2 சொட்டு உஜாலா சொட்டு நீலத்தை ஊற்றி, கலந்து இந்த தண்ணீரில் உங்கள் வீட்டு தரையை மாப் போட்டு பாருங்கள். தரையில் இருக்கும் அழுக்கும் சுத்தமாக நீங்கி உங்க டைல்ஸ் எப்போதும் பளபளப்பாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: எல்லோருக்கும் தேவைப்படும் படியான 7 சமையல் குறிப்பு

எல்லோருக்கும் இன்னொரு சந்தேகம் வரும். இந்த உஜாலாவின் நீல நிற கறை அப்படியே எல்லா இடத்திலும் படியாதா என்று. உஜாலா சொட்டு நீலம் நேரடியாக தரையில் விழுந்தால் தான் அந்த கறை படியும். தவிர தண்ணீரில் கலந்து மேல் சொன்ன குறிப்புகளை பின்பற்றும் போது, எந்த இடத்திலும் அந்த நீல நிற கறை படியாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -