பாம்புகளோடு விளையாடும் நாகக் கன்னி – வீடியோ

Naga kanni

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
நாகலோகத்தின் ராஜாவான நகராஜாவும் நாக கன்னிகளும் இன்றளவும் இவ்வுலகில் வாழ்ந்து வருகின்றனர் என்றொரு நம்பிக்கை இன்று வரை உள்ளது. நாகக்கண்ணிகளுக்கு பல அபூர்வ சக்திகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதெல்லாம் ஒரு புறம் இருக்க உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள காட்டாம்பூர் என்னும் இடத்தில் ஒரு பெண் உள்ளார். அவரை அனைவரும் நாக கன்னி என்று அழைக்கிறார்கள். அவர் என் அப்படி அழைக்கப்படுகிறார் என்பது குறித்த வீடியோ இதோ.

இந்தியாவில் உள்ள நிறைய பத்திரிகைகள் இந்த பெண்ணை இந்தியாவின் நாக கன்னி என்று கூறுகிறது. இதற்கு காரணமும் உள்ளது. சிறு வயது முதலே இந்த பெண் நகங்களோடு விளையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சில நேரங்களில் நாகங்கள் இவரை தீண்டவும் செய்துள்ளது. ஆனாலும் இவரின் உயிருக்கு ஏதும் ஆபத்து நேர வில்லை. தினமும் இவர் எந்த அச்சமும் இன்றி நாகங்களோடு விளையாடி வருகிறார். நாகங்கள் நிறைய காணப்படும் பகுதிக்கு இவர் சென்றாலே அங்கு நாகங்கள் இவரை தேடி வருகின்றன. அவைகளோடு இவரும் எந்த ஒரு சிறு அச்சமும் இன்றி விளையாடுகிறார். சில நேரங்களில் இவர் ஏதாவது வேலை காரணமாக நாகங்களை பார்க்க இயலாமல் போனால் அங்குள்ள நாகங்கள் இவர் மீது கோபித்துக்கொள்கின்றன. அந்த அளவிற்கு இவர் நகங்களோடு நெருக்கமாக வாழ்ந்து வருகிறார்.

பாம்பென்றால் அனைவரும் பாய்ந்தோடும் இந்த கால கட்டத்தில் தன்னை சுற்றி பல பாம்புகள் இருந்தும் அவைகளோடு நட்பு பாராட்டி அவைகளோடு விளையாடும் இந்த சிறுமியை இந்தியாவின் நாக கன்னி என்று பத்திரிகைகள் கூறுவதில் எந்த தவறும் இல்லை.