இப்படியெல்லாம் கூடவா நம்மள ஏமாத்தி பழைய மீனை விப்பாங்க? ஆமாங்க இந்த விஷங்களை தெரிஞ்சிக்காம மீன் வாங்க போனீங்கன்னா நீங்களும் கெட்டு போன மீனை தான் வாங்கிட்டு வருவீங்க. இந்த மீன்களை மட்டும் தயவு செய்து வாங்கிடாதீங்க.

- Advertisement -

மீன் எத்தனை சுவையான ஒரு உணவு என்று அசைவம் சாப்பிடும் அனைவரும் நன்றாக தெரியும். அசைவ வகையில் உடல் நலக் கோளாறுகளுக்கு சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று கூறுபவர்கள் கூட சில மீன் வகைகளை சாப்பிடத்தான் கூறுவார்கள். இந்த மீனை பொறுத்தவரையில் எப்பொழுதும் அது உடலுக்கு நல்லதையே செய்யும். அப்படி நம் ஆரோக்கியத்திற்கு முக்கியமான இந்த மீனை நல்லதாக பார்த்து வாங்கி சாப்பிட வேண்டும். இன்று பெரும்பாலும் அனைத்து பொருட்களுமே கலப்படம் வந்து விட்டது அந்த வகையில் இந்த மீனிலும் கூட பழைய மீன்களை புதிய மீன்கள் போல் மாற்றி விற்று விடுகிறார்கள். நல்ல மீனை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்வதற்கான குறிப்புகளை இந்த பதிவில் பார்க்கலாம்.

மீனை வாங்கும் போது நாம் எப்பொழுதுமே அதன் செதில் பக்கத்தை தான் முதலில் கவனிக்க வேண்டும். செதில் நல்ல சிவப்பாக கையில் தொட்டால் லேசான வழவழப்பு தன்மை இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் அது புது வகையான மீன். செதில் சிகப்பு நிறமாக இல்லாமல், வெளிர் நிறத்தில் இருந்தால் அது பழைய மீன் அந்த மீன்களை வாங்க வேண்டாம். இப்போதெல்லாம் செதில்களில் சாயம் கூட பூசுகிறார்கள் அதையும் கொஞ்சம் பார்த்து கவனமாகத் தான் வாங்க வேண்டும். மீனை தொட்டுப் பார்க்கும் போது இந்த வித்தியாசம் தெரிந்து விடும். ரத்த சிவப்பாக இருக்கும் நல்ல மீன் தொடும் போது வழவழப்பாக இருக்குமே தவிர கைகளில் ரத்த சிவப்பு ஒட்டாது சாயம் இருந்தால் கட்டாயமாக ஒட்டும்.

- Advertisement -

அடுத்து மீனை வாங்கும் பொழுது அதை லேசாக அழுத்திப் பார்க்க வேண்டும் அப்படி அழுத்தும் போது மீன் உங்களுக்கு கெட்டியாக இருந்தால் அது புது மீன் அழுத்தும் பொழுதே சொத சொதவென்று உள்ளே விரல் அமுங்கினால் அது நல்ல மீன் கிடையாது.

அடுத்து அதிக நாள் ஐஸில் வைத்திருக்கும் மீனை நாம் ஈசியாகவே கண்டுபிடித்து விடலாம் மீனின் கண்கள் பார்த்தால் அது அந்த கருவிழிகள் நல்ல பிரஷ்ஷாக இருந்தால் அதிக நாள் ஐஸில் வைக்கவில்லை என்று அர்த்தம். ஒரு வேளை அந்த கண் மிகவும் மங்கிப் போய் சில நேரங்களில் கருவிழியே தெரியாத அளவிற்கு மாறிப் போயிருக்கும் அப்படி இருந்தால் இது பல நாள் ஐஸ் பெட்டியில் வைத்த மீன் என்று தெரிந்து கொள்ளலாம். இப்படி இருந்தாலும் நீங்கள் வாங்குவதை தவிர்த்து விடுங்கள்.

- Advertisement -

மீனை வெட்டும் பொழுது உங்களுக்கு அந்த துண்டு சரியாக நறுக்க வந்தால் அது புது மீன். பழைய மீன் என்றால் உங்களுக்கு மீனை நறுக்கும் போது சதை தனியாக பிரிந்து கொண்டு வரும். இந்த மீனை சாப்பிடவே கூடாது தவிர்ப்பது மிகவும் நல்லது.

அதே போல் நல்ல மீன்களை வெட்டும் பொழுதும் அதன் சதைகளில் எல்லாம் ரத்த சிவப்பில் இருக்கும் அல்லது கொஞ்சம் ரத்தம் இருக்கும் இப்படி இருந்தாலும் அது நல்ல மீன் தான். அப்படி எதுவுமே இல்லாமல் வெளிறி போய் இருந்தால் அது பழைய மீன். அதே போல் நல்ல மீன்களின் தோள்களை பார்த்தாலே உங்களுக்குத் தெரியும் நல்ல நிறத்துடன் ஒரு பளப்பளப்பு தன்மை இருக்கும். இதே பழைய பார்க்கும் போதே தெரிந்து விடும் இந்த அறிகுறிகள் எதுவும் இதில் இருக்காது.

அதே போல புது மீன்களின் பக்கவாட்டில் இருக்கும் செதில்கள் நல்ல விறைப்பாக இருக்கும். பழைய மீன்களில் அப்படி இருக்காது. புது மீன்களில் குடல் வெளியே தெரியாது ஆனால் பழைய மீன்களில் குடல் வெளிய தள்ளி இருக்கும். இப்படி இருந்தால் என்ன காரணம் சொன்னாலும் இந்த மீன்களை வாங்காதீர்கள்.

பெரும்பாலும் இதே போல மீன், மற்றும் அசைவங்களை தெரியாதவர்களிடம் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் தெரிந்தவர்கள் நமக்கு முடிந்த அளவிற்கு இப்படி பழைய மீன்களை தர யோசிப்பார்கள். அது மட்டுமின்றி இன்று இப்படி கொடுத்தால் அடுத்த நாள் வாங்க வர மாட்டார்கள் என்ற எண்ணத்திலும் வியாபாரம் செய்வார்கள். எனவே கூடுமானவரையில் உணவுப் பொருட்களை வாங்குவது தெரிந்தவர்களிடமும், தெரிந்த இடத்திலும் வாங்குவதே சிறந்தது. நாமே பணம் கொடுத்து வியாதிகளை வாங்கி கொள்ள வேண்டாம். இந்த குறிப்புகளை தெரிந்து கொண்டு இனி கவனமாக மீனை பார்த்து வாங்கி சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழுங்கள்.

- Advertisement -