இதுவரை தெரியாமல் இந்த பழங்களை வாங்கி இருந்தாலும், இனி இது போன்ற பழங்களை மட்டும் வாங்கவே வாங்காதீர்கள். நாமே விலை குடுத்து வினையை வாங்கி கொள்வது போல ஆகி விடும்.

- Advertisement -

இப்போதெல்லாம் எதை வாங்க போனாலும் அதில் கலப்படம் இல்லாமல் இருப்பதே இல்லை. நல்ல பொருளாக வாங்க வேண்டும் என்றால் அது கொஞ்சம் அல்ல, மிக மிக கடினமான காரியம். எல்லாவற்றிலும் கலப்படம் இருந்தாலும் உடல் நலத்திற்காக சாப்பிடும் பொருளிலும் கூட இப்பொழுது நல்ல பொருள் எது? எதை சாப்பிடலாம், எதை சாப்பிடக் கூடாது என்ற யோசனை பெருமளவில் வந்து விட்டது. இப்போது இந்த பதிவில் நாம் அதிகம் பயன்படுத்தும் சில பழங்களை எப்படி பார்த்து வாங்க வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுவோம்.

பப்பாளி, இது சற்று நீளமாகவும் கையில் எடுத்து குலுக்கி பார்த்தால் உள்ளே விதைகள் குலுங்கும் சத்தம் கேட்கும் அப்படி கேட்டால் நல்ல பப்பாளி. ஹைபிரிட் பழங்களில் அப்படி விதைகள் சத்தம் கேட்காது, ஏனெனில் இதில் அதிகம் விதைகள் இருக்காது. இதை வைத்தே தரமான பப்பாளியை வாங்கி கொள்ளலாம்.

- Advertisement -

நல்ல கொய்யா பழம் சுற்றிலும் கோடு போட்டது போல இருக்கும், பழம் பார்க்க கடினமாக இருப்பது போல் தோன்றும். ஹைப்ரட் பழம் அனைத்து பக்கமும் பார்க்க ஒன்று போல, சுற்றிலும் பாலிஷ் செய்த பழம் போல் நல்ல பளபளப்பாக பார்த்தவுடன் கவர்வது போல இருக்கும் இந்த பழத்தை தவிர்ப்பது நல்லது. போல் இருக்கும் நாட்டு பழங்கள் அப்படி இருக்க வாய்ப்பில்லை. நாட்டுப் பழங்கள் பார்க்கவே கரடு முரடான வடிவில் தான் இருக்கும்.

மாதுளை பழம் இளம் மஞ்சள் நிறத்தில் கரடு முரடான வெளிப்புறத் தோற்றத்துடன், தோல் மிகவும் தடிமனாகவும், அரிந்தால் உள்ளே முத்துக்கள் வெள்ளிர் நிறத்திலும், சாப்பிடும் போது கொஞ்சம் கடினமாகவும் துவர்ப்பு சுவையுடன் இருந்தால் அது நல்ல பழம். நல்ல சிகப்பு நிறத்தில் பார்க்க ஒரே மாதிரி இருந்தால் அது நிச்சயம் ஹைப்ரேட் பழம் தான் இந்த பழத்தை அரிந்தால் உள்ளே முத்துக்கள் எல்லாம் நல்ல சிகப்பு நிறத்தில் சாப்பிட இனிப்பாகவும், மிருதுவாகவும் இருக்கும். இந்த பழங்களை தவிர்ப்பது நல்லது.

- Advertisement -

நல்ல தரமான ஆப்பிள் இளம் சிவப்பாக அதிக சதையுடன் இருக்கும் இதுவும் பார்க்க அவ்வளவு பளபளப்பாக இருக்காது. ஹைபிரேட் பழங்கள் அடர் சிவப்பு நிறத்தில் பார்க்கும் போதே கண்ணை கவரும் படி இருக்கும். ஆப்பிளில் முக்கியமாக கவனிக்க வேண்டியது இந்த பழங்கள் அதிக நாள் வரை கெட்டுப் போகாமல் இருக்க அதன் மேல் மெழுகை தடவி விற்கிறார்கள். இந்த பழங்களை நாம் சாப்பிடும் முன் கட்டாயம் அதன் தோலை நீக்கி தான் சாப்பிட வேண்டும். ஆப்பிளின் காம்பை லேசாக கிள்ளி பார்த்தால் உள்ளே இருக்கும் சதை பகுதி சிவப்பாக இருந்தால் அது ஹைபிரிட் பழம், பச்சையாக இருந்தால் அது நல்ல பழம் எதை தாராளமாக வாங்கலாம்.

இந்த அண்ணாச்சி பழம், வாழைப்பழம், மாம்பழம், போன்றவை எல்லாம் நாட்டுப் பழங்களாக இருந்தால் அதன் தோள்களில் சிறு சிறு கரும்புள்ளிகள் இருக்கும், ஏன் ஒரு சில இடங்களில் பூச்சி கடித்தது போல கூட இருக்கும். ஹைபிரேட் பழங்களை பார்க்க தோல் நல்ல பளபளப்பாக இருக்கும். இது உடலுக்கு அத்தனை ஆரோக்கியமானது கிடையாது. இதில் இன்னொரு முக்கியமான தகவல் நாட்டு பழங்களை பொறுத்த வரையில் ஒரே நேரத்தில் எல்லா பக்கமும் பழுக்காது சில இடங்களில் பழுத்தும் சில இடங்களில் காயாவும் இருக்கும்.

இனி நீங்கள் பழம் வாங்க செல்லும் போது அடிக்கடி நாம் வாங்கும் ஒரு சில பழங்களை பற்றியாவது தெரிந்து கொண்டு நல்ல பழங்களை வாங்கி உண்ணுங்கள் நம் ஆரோக்கியம் மிகவும் முக்கியம்.

- Advertisement -