வீட்டில் இருந்து புறப்படும் போது இவையெல்லாம் உங்கள் கண்ணில் தென்பட்டால், நீங்கள் செல்லும் காரியம் நிச்சயம் வெற்றியை தரும்.

Nalla sagunam Ketta sagunam
- Advertisement -

பொதுவாக ஒரு நல்ல காரியத்திற்கு செல்லும் போது சகுனம் பார்த்து செல்ல வேண்டும் என்று பெரியோர்கள் கூறுவார்கள். நாம் ஒரு காரியத்திற்காக வெளியில் செல்ல முற்படும் போது நடக்கும் சில செயல்களே சகுனம் என கூறப்படுகிறது. சிலர் இதை நிமித்தம் என்று கூறுவதுண்டு. சகுனங்களில் இரண்டு வகை உண்டு. ஒன்று நல்ல சகுனம் மற்றொன்று கெட்ட சகுனம். இந்த இரண்டு சகுனம் குறித்தும் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் விரிவாக பார்ப்போம் வாருங்கள்.

நல்ல சகுனம், கெட்ட சகுனம்

பாவ கிரகங்களாக கருதப்படுபவை ராகு, கேது மற்றும் சனி. இவை நம் பாவ கர்மாக்களுக்கு ஏற்ப பலன் தரக்கூடியவை. இவற்றை உணர்த்தும் சகுனங்களை நாம் அசுப சகுனங்கள் என்று கூறுவோம். இதே போல் சுக்கிரன், புதன் மற்றும் குரு ஆகிய கிரகங்களை சுப கிரகங்கள் என்று கூறுவோம். இவை நம் புண்ணியத்திற்கு ஏற்றவாறு நமக்கு பலன்கள் தரக்கூடியவர்கள். இவர்களுடைய சகுனங்களை நாம் சுப சகுனங்கள் என்று கூறுவோம்.

- Advertisement -

நாம் ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பு ஏதேனும் அசுப சகுனங்கள் தென்பட்டால், அவற்றிற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். காரணம் என்னவென்றால், அந்த செயலை நாம் செய்வதற்கு முன்பே அந்த செயலால் நமக்கு தாமதம் ஏற்படும், பிரச்சனை ஏற்படும் ஆகையால் அந்த செயலை செய்யாதே என்பதை உணர்த்துவதால், அதற்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

எவை எல்லாம் நல்ல சகுனங்கள்?

கணவன் வீட்டில் இருந்து கிளம்பும் போது மனைவி மங்களகரமாக இருக்க வேண்டும். அவ்வாறு மங்களகரமாக இருக்கும் மனைவியின் முகத்தை பார்த்து விட்டு செல்லும் கணவனுக்கு அந்த நாள் முழுக்க காரிய வெற்றி ஏற்படும். மங்களகரமான மனைவியின் முகம் சுக்கிரனுக்குரிய ஆதிக்கத்தில் இருப்பதால் அது சுப சகுனமாகும்.

- Advertisement -

இரட்டை பிராமினரை பார்த்து விட்டு சென்றாலும், அது சுப சகுனமாக கருதப்படுகிறது. ஏனெனில் இரட்டை பிராமினர் குருவின் ஆதிக்கத்தை கொண்டவர்கள். மேலும் கன்னிப்பெண்கள், சுமங்கலிகள், குழந்தைகள், தண்ணீர் குடம் எடுத்து வருபவர்கள், பூக்களை கொண்டு வருபவர்கள் ஆகியோரை பார்த்து விட்டு செல்வது சுபசகுனமாக கருதப்படுவதுடன், நம்முடைய காரியமும் வெற்றி அடையும்.

கெட்ட சகுனங்கள்?

ஆயுதங்களை ஏந்தி வருபவர், தலையில் எண்ணெய் தேய்த்து வருபவர், இவர்கள் சனியின் ஆதிக்கத்தை பெற்றவர்கள் என்பதால் இவற்றை கெட்ட சகுனம் அல்லது அசுப சகுனம் என்கிறோம். மேலும் மண்ணை வெட்டி எடுத்து வருபவர்கள், ஒற்றை பிராமினர், காலி குடம், இறைச்சி வாங்கி வருபவர்கள் இவர்களை பார்த்து விட்டு சென்றால் அந்த காரியத்தில் தடங்கல்கள் ஏற்படும். மேலும் பிரச்சனைகளும் உண்டாகும். இவ்வாறு பார்த்தால் அந்த காரியத்தை செய்யாமல் தவிர்ப்பது மிகவும் நல்லது.

இதையும் படிக்கலாமே: விஷ்ணு பகவானின் பரிபூரண ஆசீர்வாதத்தை பெற சங்கு வழிபாட்டை இப்படித்தான் செய்ய வேண்டும். 16 வகையான செல்வங்களும் வந்து குவியம்.

ஒருவரின் ஜாதகத்தில் ஒன்பதாம் இடமாக கருதப்படுவது பாக்யாதிபதி ஆகும். அந்த பாக்யாதிபதிக்குரிய கிரகம் என்னவென்று அறிந்து, அந்த கிரகத்துக்குரிய நாளிலோ, ராசியிலோ, நட்சத்திரத்திலோ அல்லது அந்த கிரகத்தின் ஹோரையிலோ, காரியத்தை தொடங்கினால் கண்டிப்பாக அந்த காரியம் வெற்றி அடையும்.
இனிமேல் வெளியே செல்வதற்கு முன்பு சகுனங்களை பார்த்து விட்டு சென்று நற்பலன்களை அடைவோம்.

- Advertisement -