- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநல்ல செய்தியை கொடுக்கும் பீஜ மந்திரம்

நல்ல செய்தியை கொடுக்கும் பீஜ மந்திரம்

- Advertisement -

நமக்கு ஒரு நல்லது நடக்காதா என்று தினம் தினம் ஏங்கிக் கொண்டே இருப்போம். நல்லது இன்றைக்கு நடக்கும், நாளைக்கு நடக்கும், நாளை மறுநாள் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு மட்டும் தான் இருக்குமே தவிர, அந்த நல்லது நடந்தபடியாக இருக்காது. ஆனால் ஒவ்வொரு நாளும் பொழுது போவதும், விடிவுதுமாக இருக்கும்.

நாம் எதிர்பார்க்கும் நல்லதை எப்படி தான் நடத்திப் பார்ப்பது‌. நமக்கான நல்ல செய்தி எப்போதுதான் நாம் செவிகளில் விழுவது. இதற்கு ஏதாவது பரிகாரம் இருக்கிறதா. எதிர்பார்த்த நல்லதை நடத்தி தரக்கூடிய ஒரு ஸ்வச் வேர்டை பற்றியும், நம்மிடம் இருக்கும் நெகடிவ் எனர்ஜி எல்லாம் நம்மை விட்டு நீங்க, செய்ய வேண்டிய ஒரு பரிகாரத்தை பற்றியும் நான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

நல்ல செய்தியை கொண்டு வந்து சேர்க்கும் பீஜ மந்திரம்

நல்ல செய்தியை உங்கள் செவிகளில் கொண்டு வந்து சேர்க்க போகும் அந்த மந்திரத்தை இப்போது பார்க்கலாமா. எல்லா வேலையையும் முடித்துவிட்டு தூங்க செல்வதற்கு முன்பு இந்த மந்திர வார்த்தையை சொல்லுங்கள். மெத்தையிலோ அல்லது பாயிலோ அமர்ந்து விட வேண்டும்.

பிறகு கண்களை மூடி மூச்சை நன்றாக உள்ளே இழுத்து வெளியே விட்டு, பிரபஞ்சத்திடம் நன்மை நடக்க வேண்டும் என்ற பிரார்த்தனை செய்து குல தெய்வத்தை நினைத்து ‘ட்ரீம்’ என்ற வார்த்தையை சொல்லுங்கள். Treem, இது ஒரு பீஜ மந்திரம். நினைத்ததை நடத்தி தரக்கூடிய பீஜ மந்திரமாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இன்று இரவு தூங்கும் போது இந்த வார்த்தையை சொல்லிவிட்டு தூங்கினால், மறுநாள் காலை எழுந்ததும் நீங்கள் நினைத்துக் கொண்டிருந்த நல்லது நடக்கும்.

- Advertisement -

அதாவது நல்ல செய்தி உங்கள் செவிகளில் விழும் அல்லது ஒரு வாரத்தில் எனக்கு ரிசல்ட் வரப்போகிறது. அதில் நல்ல செய்தி தான் என் காதுகளில் எட்ட வேண்டும் என்று சொல்லி, ஒரு வாரத்திற்கு பிறகு வரக்கூடிய நல்ல செய்திக்காக, தினம் தினம் தூங்கும் பொழுதும் இந்த பீஜ மந்திரத்தை நீங்கள் சொல்லலாம். அடுத்த வாரம் இண்டர்வியூ இருக்கு அந்த இன்டர்வியூ எனக்கு சாதகமாக அமைய வேண்டும்.

நல்ல வேலை உங்களுக்கு கிடைத்துவிட்டது என்ற வார்த்தை உங்கள் செவிகளில் விழ வேண்டும் என்று நினைத்து இந்த மந்திரத்தை சொல்லலாம். அல்லது அடுத்த மாதம் என்னுடைய மனைவிக்கு டெலிவரி இருக்கிறது. குழந்தை நல்லபடியாக பிறக்க வேண்டும் என்று நினைத்தும் இந்த பீஜ மந்திரத்தை சொல்லலாம். எந்த நல்ல காரியம் நடக்க வேண்டும் என்றாலும் அதை நினைத்து இரவு தூங்கச் செல்லும் போது இந்த மந்திரத்தை சொல்லுங்கள்.

- Advertisement -

அதேபோல காலையில் எழுந்து முகம் கழுவி பல் தேய்த்துக் கொண்டு 1 ஸ்பூன் மஞ்சள் பொடியை எடுத்துக் கொள்ளுங்கள். அதை உங்களுடைய உள்ளங்கைகளில் கொட்டிக் கொள்ளுங்கள். உள்ளங்கை முழுவதும் அந்த மஞ்சள் தேய்த்து தண்ணீர் ஊற்றி கையை கழுவி விட வேண்டும். அந்த மஞ்சள் கொஞ்சம் கொஞ்சமாக கையை விட்டு கரைந்து அப்படியே சிங்கிள் போகட்டும்.

இதையும் படிக்கலாமே: நஷ்டமான பணத்தை மீண்டும் மீட்டு தரும் பரிகாரம்.

இவ்வளவுதான் பரிகாரம். கையில் இருக்கும் மஞ்சள் பொடி அப்படியே கரைந்து தண்ணீரில் போகும் போது, உங்கள் உடம்பை பிடித்த நெகட்டிவ் எனர்ஜியும் உங்கள் உடம்பை விட்டுப் போய்விடும். வலது கையில் மட்டும் இந்த பரிகாரத்தை செய்தால் போதுமானது. எளிமையான இந்த இரண்டு பரிகாரங்களும் உங்களுக்கு நன்மையை மட்டுமே செய்யக்கூடியது. நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பாருங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.

சற்று முன்