உங்க வீட்டு சமையல் அறையில் இருக்கும் இந்தப் 1 பொருளை எடுத்து, உங்க வாயில போட்டுட்டு வெளியே கிளம்பி போங்க! நடக்காத வேலையும் நடக்கும். கிடைக்காத வேலையும் கிடைக்கும்.

surya-bhagavan2

எந்த ஒரு நல்லதும் உங்களுக்கு நடக்கவே நடக்காதா? நல்லதுக்கும் உங்களுக்கும் ரொம்ப இடைவெளி இருக்கா? நல்ல வேலை தேடி இன்டர்வியூக்கு போனா அந்த வேலை கிடைக்காதா? பொண்ணு பாக்க போனா, அந்த வேலை சக்ஸஸா முடியாதா? பிடித்தமான படிப்பை தேர்ந்தெடுக்க கவுன்சிலிங் போனா, அந்த இடத்தில சீட்டு கிடைக்காதா? இப்படியாக வாழ்க்கைக்கு முக்கியமாக தேவைப்படும் எந்த வேலையாக இருந்தாலும், அந்த வேலையை வெற்றிகரமாக மாற்ற இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயமாக உங்களுக்கு வெற்றி தான்.

குறிப்பாக நீண்ட நாட்களாக வேலை தேடி அலைந்து கொண்டிருப்பவர்கள் இத செஞ்சுட்டு, இன்டர்வியூக்கு போங்க. நிச்சயமா உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நல்ல சம்பளத்தோடு! நம்பிக்கையோடு செய்யணும். போன போக்கில் செஞ்சிட்டு போனா, எந்த பரிகாரமும் பலிக்காத என்பதை நினைவில் வைத்துக்கொண்டு பரிகாரத்திற்குள் செல்வோம்.

நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும். நல்ல வேலை கிடைக்க வேண்டுமென்றால் சூரியபகவானின் ஆசீர்வாதத்தை நாம் முழுமையாக பெற வேண்டும். ஒருவருடைய ஜாதக கட்டத்தில் சூரிய பகவானின் அம்சம் சரி இல்லை என்றாலும், அவர்களுக்கு வேலையில் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும்.

surya-bhagavan

புதியதாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் மட்டுமல்ல, இருக்கும் வேலையில் சிக்கல் இருந்தாலும் சரி, பதவி உயர்வு கிடைக்க வேண்டும் என்றாலும் சரி, சம்பள உயர்வு கிடைக்க வேண்டும் என்றாலும் சரி, மேலதிகாரிகள் உங்கள் சொல் பேச்சைக் கேட்கவில்லை என்றாலும் சரி, நீங்கள் இந்த பரிகாரத்தை செய்து பயன் அடையலாம்.

- Advertisement -

வேலைக்காக இன்டர்வியூக்கு செல்வதாக இருந்தால், அன்றைய தினம் அதிகாலையிலேயே எழுந்து, தலை ஸ்னானம் செய்து விட்டு, சுத்தபத்தமாக பூஜைக்கு தயாராகுங்கள். உங்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு விளக்கை ஏற்றி வைத்து விடுங்கள். காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த பரிகாரத்தை செய்து முடித்திருக்க வேண்டும்.

theertha kinnam

உங்கள் பூஜை அறையில் செம்பில் இருக்கும் பஞ்சபாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் செம்பில் எந்த பாத்திரம் இருந்தாலும் அதை பரிகாரத்திற்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். அந்த பாத்திரத்தை சுத்தப்படுத்திவிட்டு, சுத்தமான நீரை ஊற்றி விட்டு, அந்த தண்ணீருக்குள் ஏலக்காய் ஒன்று கிராம்பு ஒன்று இந்த இரண்டு பொருளையும் போட்டுக்கொள்ள வேண்டும். அந்த தண்ணீரை செம்பு பாத்திரத்தோடு கையில் கொண்டு வந்து, சூரிய நமஸ்காரம் செய்து, சூரியனுக்கு இரண்டு சொட்டு அந்த தண்ணீரை சமர்ப்பணம் செய்து விடுங்கள். மீண்டும் உங்கள் பூஜை அறைக்கு அந்த பஞ்ச பாத்திரத்தை எடுத்து வாருங்கள்.

krambu

அந்தத் தண்ணீருக்கு உள்ளே இருக்கும் கிராம்பு, ஏலக்காயை உங்கள் இடது உள்ளங்கையில் வைத்துக்கொண்டு, வலது உள்ளங்கையை மேலே மூடி, நீங்கள் செல்லும் காரியம் வெற்றி அடைய வேண்டுமென்று சூரிய பகவானை மனதாரப் பிரார்த்தனை செய்து, ஒரு பேப்பரில் மடித்து உங்களுடைய பர்ஸ்ஸிலோ பாக்கெட்டிலோ, பையிலோ வைத்துக் கொள்ளலாம்.

elakai 5-compressed

காலை இந்த பூஜையை முடித்து இருப்பீர்கள். அதன் பின்பு உங்களது காலை உணவை முடித்துவிட்டு, வீட்டில் இருந்து வெளியே கிளம்புவதற்கு முன்பு, மடித்து வைத்திருக்கும் பேப்பரிலிருந்து  அந்த ஏலக்காயை மட்டும் எடுத்து சாப்பிட்டுவிட்டு, தண்ணீரை பருகி விடுங்கள். வெறும் கிராம்பை மட்டும் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள்.

praying-god

இந்த கிராம்பு உங்களை நேர்மறையாக வழிநடத்திச் செல்லும். ஏலக்காய் சாப்பிட்டுவிட்டு இந்த கிராம்பை கையில் எடுத்து சென்றால், எந்த வேலையும் நிச்சயமாக உங்கள் பக்கம் வெற்றி ஆகும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள். ஒரு கிராம்புக்கும், ஒரு ஏலக்காய்க்கும் நம்பிக்கைக்கும் நஷ்டமாக போவதற்கு எதுவுமே கிடையாது. நல்ல வேலை கிடைத்து விட்டால் வாழ்க்கையில் செட்டிலாய்ருவீங்க! ட்ரை பண்ணி பாருங்க.

இதையும் படிக்கலாமே
உங்கள் வீட்டில் அதிர்ஷ்டம் தரும் துளசிச் செடியுடன் இந்த 2 செடியும் சேர்ந்து இருந்தால் வறுமை நீங்கி பணம் கொழிக்கும்!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.