நல்ல வேலை கிடைக்க ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ வழிபாடு

siva valipadu
- Advertisement -

நல்ல வேலைக்காக காத்திருப்பவர்களும் சரி, வேலையில் ப்ரோமோஷன் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் சரி, அரசாங்க வேலைக்காக காத்து கிடப்பவர்களும் சரி ஞாயிற்றுக்கிழமை அன்று வழிபாடு செய்வார்கள். இந்த அனைத்து விதமான வேண்டுதல்களையும் நிறைவேற்றுவதற்கு சூரிய பகவானின் அருள் பரிபூரணமாக வேண்டும். சூரிய பகவானின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு ஞாயிற்றுக்கிழமை சூரிய பகவான் வழிபாடு என்பது மிகவும் சிறப்பு மிகுந்ததாக திகழ்கிறது.

அதுவும் ஞாயிற்றுக்கிழமை வரக்கூடிய பிரதோஷ நாளன்று நாம் சூரிய பகவானையும் சிவபெருமானையும் ஒன்றாக சேர்த்து வழிபடுவதன் மூலம் வேலை தொடர்பான அனைத்து விதமான வேண்டுதல்களும் நிறைவேறும். அப்படி வேலை தொடர்பான அனைத்து வேண்டுதல்களும் நிறைவேற சிவபெருமானுக்கு எந்த பொருட்களை அபிஷேகத்திற்கு வாங்கித் தர வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

பிரதோஷமும் சிவராத்திரியும் சிவபெருமானுக்குரிய விரத தினங்களாக கருதப்படுகிறது. பிரதோஷ தினத்தன்று விரதம் இருந்து சிவபெருமானை வழிபடும் பொழுது நம் வாழ்வில் இருக்கக்கூடிய தோஷங்கள் அனைத்தும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அதுவும் ஞாயிற்றுக்கிழமை வரக்கூடிய பிரதோஷமானது மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. ஏனென்றால் ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய ராகு காலமானது 4:30 மணி முதல் 6:00 மணி. அதே நேரம் தான் பிரதோஷ நேரமாகவும் திகழ்கிறது. அதோடு மட்டுமல்லாமல் ஞாயிற்றுக்கிழமை என்பது சூரிய பகவானுக்குரிய கிழமையாக திகழ்வதால் இந்த ஞாயிறு பிரதோஷமானது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது.

இந்த பிரதோஷ தினத்தன்று அருகில் இருக்கக்கூடிய சிவாலயத்திற்கு சென்று அங்கு சிவபெருமானுக்கு அபிஷேகத்திற்காக இளநீர் வாங்கி தர வேண்டும். இளநீரை வாங்கித் தந்து விட்டு இளநீர் அபிஷேகம் நடக்கும் பொழுது வேலை தொடர்பான வேண்டுதலை மனதார கூற வேண்டும். இளநீரை தவிர்த்து பால், தயிர், விபூதி, சங்கு, பச்சரி மாவு, கங்கா தீர்த்தம் இந்த ஆறு பொருட்களுள் ஏதாவது ஒரு பொருளையாவது அபிஷேகத்திற்காக வாங்கி தர வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு செய்துவிட்டு நவகிரகங்களில் இருக்கக்கூடிய சூரிய பகவானுக்கு தீபமேற்றி வழிபாடு செய்ய வேண்டும். பிறகு சிவபெருமானுக்கு அபிஷேகம் நடக்கும் பொழுது சிவபெருமானின் மூல மந்திரத்தை குறைந்தபட்சம் 9 முறையாவது உச்சரிக்க வேண்டும். அதிகபட்சம் 108 முறை கூட உச்சரிக்கலாம்.

மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே மகாதேவாய தீமஹி!
தன்னோ ருத்ர ப்ரச்சோதயாத்

- Advertisement -

கோவிலுக்கு செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே சிவலிங்கம் வைத்திருந்தால் அந்த சிவலிங்கத்திற்கு இளநீர் அபிஷேகம் செய்துவிட்டு சிவபெருமானுக்கு ஒரு தீபத்தை ஏற்றி வைத்து இந்த சிவபெருமானின் மூல மந்திரத்தை மனதார உச்சரிக்க வேண்டும். பிறகு நம்முடைய வேலை தொடர்பான வேண்டுதலையும் முன்வைத்து மனதார வழிபட்டுவிட்டு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கணவன் மனைவி மனஸ்தாபம் நீங்க பரிகாரம்

இந்த முறையில் ஞாயிற்றுக்கிழமையில் வரக்கூடிய பிரதோஷ தினத்தன்று சிவபெருமானை நாம் வழிபாடு செய்வதன் மூலம் வேலை தொடர்பான அனைத்து வேண்டுதல்களும் நிறைவேறும்.

- Advertisement -