- Advertisement -
Homeஆன்மிகம்ஆன்மிக தகவல்கள் | Aanmeega Thagavalநல்ல வேலை கிடைக்க முருகன் வழிபாடு

நல்ல வேலை கிடைக்க முருகன் வழிபாடு

- Advertisement -

நல்ல வேலை கிடைக்காமல், இன்றைய சூழ்நிலையில் இளைஞர்கள் படாத பாடுபடுகிறார்கள். படித்த படிப்புக்கு வேலை கிடைக்கவில்லை. கிடைத்த வேலை மனதிற்கு படிக்கவில்லை. சம்பளம் நிறைய கிடைக்கவில்லை. இருக்கின்ற வேலையில் முன்னேற்றம் இல்லை இப்படியாக ஒவ்வொருவருக்கும் வேலையில் ஒவ்வொரு பிரச்சனை.

உங்களுடைய வேலையில் இருக்கும் பிரச்சனைகள் சரியாக, நாளை ஆடி கிருத்திகை அன்று முருகப்பெருமானை இந்த முறையில் வழிபாடு செய்யுங்கள். நீங்கள் வேலைக்கு செல்லவில்லை, கடை வைத்திருக்கிறீர்கள், சொந்தமாக தொழில் செய்கிறீர்கள், உங்களுக்கு வருமானத்தில் தடை இருக்கிறது என்றாலும் இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். நாளைய தினம் வருமானத்தை பெருக்கிக் கொள்ள செல்வ வளம் அதிகரிக்க செய்ய வேண்டிய எளிமையான ஆன்மீகம் முருகர் வழிபாடு.

- Advertisement -

நல்ல வேலை கிடைக்க முருகன் வழிபாடு

முதலில் ஒரு நாட்டு மருந்து கடைகளில் பசுஞ்சாணம் விபூதி வாங்கிக் கொள்ளுங்கள். விபூதியில் கலப்படம் இருக்கக் கூடாது. அந்த விபூதியை பார்த்து வாங்குவது உங்களுடைய திறமை. முருகன் கோவிலுக்கு இந்த விபூதியை உங்கள் கையால் அபிஷேகத்திற்கு கொடுக்க வேண்டும். அபிஷேகம் செய்த விபூதியை மறக்காமல் கொஞ்சம் கேட்டு வாங்கிக் கொள்ளவும்.

முருகப்பெருமானை நாளை கோவிலில் சென்று நீங்கள் கட்டாயம் தரிசனம் செய்ய வேண்டும். வாங்கிய விபூதியை குருக்களிடம் கொடுத்துவிட்டு, விபூதி அபிஷேகத்தை கண் குளிர பாருங்கள். அபிஷேகம், ஆராதனை அலங்காரம் முடித்துவிட்டு முருகருக்கு கற்பூர ஆரத்தி காண்பிப்பார்கள். தரிசனத்தை முழுமையாக நிறைவு செய்து முருகனை 6 முறை சுற்றி வாருங்கள். ‘ஓம் சரவணபவ’ என்ற மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இந்த வழிபாட்டு முறைகளை செய்யுங்கள். இந்த அபிஷேகம் செய்த விபூதியை வாங்கிட்டு வீட்டுக்கு போங்க.

- Advertisement -

வேலைக்கு செல்லும்போது, இன்டர்வியூக்கு செல்லும் போது, இந்த விபூதியை நெற்றியில் இட்டு சென்றால் உங்கள் வேலையில் இருக்கும் பிரச்சனை தீரும். நல்ல வேலை கிடைக்கும். கை நிறைய சம்பளத்தோடு மன நிறைவோடு ஒரு நல்ல வேலையை நிரந்தரமாக அமருவீர்கள். நீங்கள் கடை வைத்திருக்கிறீர்கள், உங்களுக்கு வியாபாரம் சரியாக நடக்கவில்லை, ஒரு தொழில் நடத்துறீங்க தொழிலில் லாபம் கிடைக்கவில்லை என்றால், என்ன செய்வது.

தினமும் காலையில் செல்லும்போது இந்த விபூதியை நெற்றி இட்டுக் கொள்ளுங்கள். கொஞ்சம் விபூதியை எடுத்துட்டு போங்க. ஒரு டம்ளர் தண்ணீரில் இந்த விபூதியை போட்டுவிட்டு, ஓம் சரவணபவ மந்திரத்தை சொல்லி இந்த விபூதி நீரை உங்களுடைய கடையில், தொழில் செய்யும் இடத்தில் தெளித்து விடுங்கள். 48 நாள் தொடர்ந்து இதை செய்தால் உங்களுடைய பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிடைத்து விடும்.

இதையும் படிக்கலாமே: ஆடி கிருத்திகை அன்று எழுத வேண்டிய முருக மந்திரம்

அதிலும் குறிப்பாக நாளைய தினம் ஆடி கிருத்திகை. கிருத்திகைக்கு முருகன் கோவிலில் எல்லாம் அபிஷேக ஆராதனை ஆரவாரத்துடன் நடக்கும். நாளைய தினம் முருகனுக்கு உங்கள் கையால் பசுஞ்சாண விபூதியை வாங்கி கொடுத்தால், ரொம்ப ரொம்ப அற்புதமான பலனை பெற முடியும். நம்பிக்கை உள்ளவர்கள் பிரச்சனையில் இருப்பவர்களுக்கு மேல் சொன்ன வழிபாடு நிச்சயம் கை கொடுக்கும்.

சற்று முன்