நல்லதோர் வீணை செய்தே – பாரதியார் கவிதை

Bharathiyar kavithai

நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி – எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.
வல்லமை தாராயோ, – இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி – நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?

Bharathiyar Kavithai
Bharathiyar Kavithai

விசையுறு பந்தினைப்போல் – உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் – நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும் – சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன் – இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?

இதையும் படிக்கலாமே:
ஆசை முகம் மறந்து போச்சே – பாரதியார் கவிதை

நல்லதோர் வீணை செய்தே என்று தொடங்கும் இந்த பாரதியார் கவிதை, வறுமையின் நிறம் சிவப்பு என்ற திரைப்படத்தில் பாடலாக்கப்பட்டது. கமல்ஹாசன் நடிப்பில், எஸ்.பி பாலசுப்ரமணியம் குரலில் அந்த பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.

பாரதியார் கவிதைகள் மற்றும் தமிழ் கவிதைகள் பல படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Bharathiyar Kavithai “Nallathor veenai seithen lyrics in Tamil“. This poem was composed as a song in the Tamil movie varumayin niram sivappu. Ilayaraja composed music for that.