B என்ற எழுத்தில் உங்கள் பெயர் தொடங்குகிறதா? பெயரின் முதல் எழுத்தை வைத்தே உங்கள் குணநலன்களை கண்டுபிடித்து விடலாம்

name
- Advertisement -

ஒருவர் பிறந்த நாள், நேரம் இவற்றைப் பொறுத்து தான் அவருக்கான பலன்கள் அமைகின்றன. இவற்றை தெரிந்து கொள்ளவே ஜாதகப்படி கட்டங்கள் அமைத்தோ அல்லது நியூமராலஜிப்படி கூட்டு எண் வைத்தோ ஒருவருக்கான பெயர் வைக்கப் படுகின்றது. இதனால் ஒருவரின் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றமும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். இவ்வாறு B என்ற எழுத்தினை பெயரின் முதலில் வைத்துள்ளவர்களின் குண நலன்களையும், அவர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதனையும் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

B என்ற எழுத்தினை தனது பெயரில் கொண்டவர்கள் மிகவும் நிதானமாகவும், ஆளுமைத்திறன் நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள். எந்த ஒரு விஷயத்தையும் பொறுப்புடனும், கவனத்துடனும் கையாளும் திறன் படைத்தவர்கள். மிகவும் மோசமான, கோபமான சூழ்நிலையில் கூட அமைதியாக இருப்பதையே விரும்புவார்கள். மிகவும் மன கஷ்டமான, வருத்தமான நேரங்களில் அவர்களது மனதை மாற்றிக்கொள்ள தங்களது கவனத்தை வேறு விஷயத்தின் மீது செலுத்துவார்கள்.

- Advertisement -

இவர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக் கூடியவர்களாக இருப்பார்கள். இவர்களை எளிதாக அனைவராலும் புரிந்துகொள்ள முடியாது. எனவே மற்றவர்களால் இவர்கள் மிகவும் மன வேதனையை அடைவார்கள். மனதிற்கு குழப்பமான நேரங்களில் தனது நண்பர்கள், உறவினர்களிடம் நேரத்தை செலவிட எண்ணுவார்கள். இவர்கள் இயல்பாகவே இரக்க குணம் உடையவர்கள். எனவே பிறருக்குத் தொண்டு செய்வது, நன்கொடை அளிப்பது போன்ற செயல்களில் விருப்பமாக ஈடுபடுவார்கள். ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.

பி என்ற எழுத்தில் பெயர் கொண்டவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள். ஆனால் ஒரு சிலரிடம் மட்டுமே இவர்கள் நெருக்கமாகவும், தனக்கான விஷயங்களையும் பரிமாறிக் கொள்வார்களாகவும் இருப்பார்கள். விழாக்கள் மற்றும் பார்ட்டிகளில் கலந்து கொள்வதில் மிகவும் ஈடுபாடுடன் இருப்பார்கள். தனது குடும்பம் மட்டுமல்லாமல் தான் வேலை செய்யும் இடம், தன்னை சுற்றியுள்ள சூழ்நிலை இவ்வாறான இடத்தில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் தெரிந்து கொள்வதில் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் சமூகத்தை அதிகமாக நேசிப்பவர்களாக இருப்பார்கள். எனவே சமூகத்தில் இவர்களுக்கு நல்ல பெயரும், மரியாதையும் கிடைக்கும்.

- Advertisement -

காதல்:
காதல் வருவது என்பது இவர்களுக்கு சிரமம் என்றாலும் இவரில் சிலரும் காதலிக்கும் வரிசையில் இடம் பெறுவார்கள். ஆக்கப்பூர்வமானவர்களாகவும், அன்பை அழகாக பரிமாறி கொள்பவர்களாகவும் இருப்பார்கள். காதலிக்கும் பொழுது சுற்றுலா, திரைப்படம், ஊர் சுற்றுதல் போன்றவற்றை செய்வார்கள். இவர்களுக்கு வேண்டியதெல்லாம் தான் காதலிக்கும் நபரின் அன்பு மட்டும்தான். இவர்கள் எப்பொழுதும் சண்டை போடுவதை விரும்ப மாட்டார்கள். எனவே இவர்கள் காதலில் எப்போதும் அன்பும், மகிழ்ச்சியுமே நிறைந்திருக்கும்.

தைரியம்:
எந்த ஒரு விஷயம் குறித்து பயம் இல்லாதவர்கள். பயம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் என்னவென்று கேட்பவர்கள் எனலாம். பயப்பட வேண்டிய சமயங்களில் அமைதியாகவும், பொறுமையாகவும் இருந்து அந்த சூழ்நிலையை சமாளிப்பார்கள். மிகவும் உணர்ச்சிகரமான இவர்கள் மற்றவர்களுக்கு, அவர்கள் துன்பத்தில் இருந்து விடுபடுவதற்கு எந்தவித உதவியும் செய்வதற்கு தயாராக இருப்பார்கள். எவ்வளவு பெரிய பிரச்சனையாக இருந்தாலும் ஒருவர் உதவி என்று கேட்டால் தயங்காமல் எந்த ஒரு யோசனையும் இல்லாமல் உதவி செய்வார்கள்.

- Advertisement -