மாட்டுப் பொங்கல் அன்று, நந்தி பகவான் வழிபாடு

nandhi
- Advertisement -

இன்று மாட்டுப் பொங்கல். பசு மாட்டிற்கு எந்த அளவுக்கு இன்றைய நாள் விசேஷமோ, அந்த அளவுக்கு காளை மாடுகளுக்கும் அதி அற்புதம் வாய்ந்தது இந்த நாள், ஜல்லிக்கட்டு. நம்ம சிவபெருமானின் வாகனம் அல்லவா இவர். இன்று சிவன் கோவிலில் இருக்கும் நந்தி பகவானை வழிபாடு செய்ய உங்களுக்கு பாக்கியம் கிடைத்தால் அவ்வளவு புண்ணியம்.

இன்றைய தினம் சிவன் கோவில்களுக்கு சென்று, பின் சொல்லக்கூடிய முறையில் உங்களுடைய வேண்டுதலை நந்தி பகவான் காதில் தெரிவியுங்கள். நந்தி பகவான் அதை சீக்கிரம் சிவபெருமான் காதுக்கு கொண்டு செல்வார். உங்களுடைய வேண்டுதலை சீக்கிரம் நிறைவேற்றி வைப்பார். இன்று செய்ய வேண்டிய நந்தி பகவான் வழிபாடு பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவல் இதோ இந்த பதிவில் உங்களுக்காக.

- Advertisement -

நந்தி வழிபாடு:

இன்று மாலை சிவன் கோவிலுக்கு செல்லுங்கள். சிவபெருமானை பார்க்க நந்தி தேவரிடம் அனுமதியை பெற்றுக் கொள்ளுங்கள். சிவனை முதலில் தரிசனம் செய்து மனதார வழிபாடு செய்யுங்கள். மீண்டும் நந்தீஸ்வரர் இருக்கும் இடத்துக்கு வாங்க. உங்களுடைய வேண்டுதல் எதுவோ அது நிறைவேற வேண்டும் என்று நந்தி பகவானை மனதார வழிபாடு செய்து, நந்தி பகவானின் வலது காதில் உங்களுடைய வேண்டுதலை சொல்லவும். வேண்டுதல் ஒரு வரியில் இருக்க வேண்டும். வேண்டுதலை 3 முறை நந்தி பகவானின் காதில் சொல்லவும்.

இப்படி வேண்டுதலை நந்தி பகவானின் காதல் சொல்லும் போது நந்தி பகவானை நாம் எக்காரணத்தைக் கொண்டும் தொடக்கூடாது. கோவில் வழிபாட்டில் சிலைகளை தொட்டு வழிபாடு செய்வது ரொம்ப ரொம்ப தவறு. நந்தி பகவானின் அந்தப் பக்கம் காதை மூடிக்கொண்டுதான் வேண்டுதலை சொல்ல வேண்டும் என்ற அவசியம் எல்லாம் கிடையாது.

- Advertisement -

தொடாமல், கொஞ்சம் இடைவெளி விட்டு நந்தி பகவானின் காதலி உங்களுடைய வேண்டுதலை சொல்லுங்கள். உதாரணத்திற்கு நல்ல வேலை கிடைக்கும். கடன் சுமை சீக்கிரம் குறையணும். சீக்கிரம் திருமணம் நடக்கணும். சீக்கிரம் குழந்தை பாக்கியம் வேண்டும். சொந்த வீடு கட்டணம். பிரிந்திருக்கும் கணவனும் மனைவியும் ஒன்று சேரனும் உடல்நிலை ஆரோக்கியத்தோடு இருக்கணும்.

இப்படி ஒரு வரியில் உங்களுடைய வேண்டுதலை நந்தி பகவான் காதில் மூன்று முறை சொல்லி, இந்த வேண்டுதலை சீக்கிரம் நிறைவேற்றி வை நந்தி பகவானே என்று பிரார்த்தனை செய்து, நந்தி பகவானை நமஸ்காரம் செய்து கொள்ளுங்கள். நந்தி பகவானுக்கு பக்கத்திலேயே அமர்ந்து 5 நிமிடம் கண்களை மூடி ‘ஓம் நந்தி பகவானே போற்றி போற்றி’ என்ற நாமத்தைச் 108 முறை சொல்லி உங்களுடைய வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: மாட்டுப் பொங்கல் அன்று பசுவிற்க்கு செய்ய வேண்டிய தானம்

வீடு திரும்பும் வழியில் உங்களால் காளை மாட்டுக்கு ஏதாவது தானம் செய்ய முடிந்தால் செய்யலாம். முடியாதவர்கள் வீடு திரும்பலாம். இந்த எளிமையான வழிபாட்டு முறை நிச்சயம் எல்லோருக்கும் நல்லதொரு பலன் தரும். இன்றைய நாள் நீங்கள் சிவன் கோவிலுக்கு சென்று நந்தீஸ்வரனிடம் சொல்லக்கூடிய வேண்டுதல் எவ்வளவு பெரிய வேண்டுதலாக இருந்தாலும், அது உடனே பலிப்பதற்கு உண்டான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. நம்பிக்கையோடு இந்த வழிபாட்டை செய்து அனைவரும் பலன் பெற ஈசனை வேண்டி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -