நன்மைகளைத் தரும் நந்தி வழிபாடு

nandhi valipadu
- Advertisement -

நாளைய தினம் வெள்ளிக்கிழமை அன்று வரக்கூடிய பிரதோஷத்தை சுக்கிர பிரதோஷம் என்று கூறுகிறோம். அதோடு மட்டுமல்லாமல் மகா சிவராத்திரியும் நாளை சேர்ந்து வருவது என்பது மிகவும் விஷேசகரமாக ஒன்றாக திகழ்கிறது. அப்படிப்பட்ட விசேஷமான நாளில் நாம் சிவபெருமானை ஆலயத்திற்கு சென்று வழிபடுவோம். சிவபெருமானை எந்த அளவிற்கு நாம் பிரதோஷ தினத்தன்றும். சிவராத்திரி தினத்தன்றும் வழிபடுகிறோமோ அதே அளவிற்கு நந்தியம்பெருமானையும் வழிபட வேண்டும். காரணம் பிரதோஷ வேளையில் சிவபெருமான் நந்தி பகவானின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் நடனம் ஆடினார் என்று கூறப்படுகிறது.

அதனால் தான் இன்றளவும் பிரதோஷ பூஜை நிறைவடைந்த பிறகு உற்சவமூர்த்தியை நந்தியம்பெருமானின் தோளில் வைத்துக்கொண்டு கோவிலை வலம் வரும் பழக்கம் இருந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் நந்தியம்பெருமானின் கொம்புகளுக்கு இடையில் சிவபெருமானை தரிசனம் செய்பவர்களுக்கு சிவகதி கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட அற்புத சக்தி வாய்ந்த நந்தியம்பெருமானை நாளை எந்த முறையில் வழிபட நமக்கு நன்மைகள் கிடைக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

பொதுவாக பிரதோஷ தினத்தன்று சிவபெருமானுக்கு என்னென்ன அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெறுகிறதோ அதே அளவிற்கு நந்தியம் பெருமானுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். சிவபெருமானை தரிசிக்க இயலாதவர்கள் கூட நந்தியம் பெருமானை தரிசித்தால் போதும். வேண்டுதல்களை அவரிடம் கூறினால் போதும். சிவபெருமானுக்கு கேட்டுவிடும் என்ற கூற்றும் இருக்கிறது. அதனால் தான் பலரும் நந்தியம்பெருமானின் காதில் தங்களுடைய வேண்டுதல்களை கூறுவார்கள். அது முற்றிலும் தவறான ஒரு செயலாகும்.

நந்தியம்பெருமானை மனிதர்களாக பிறந்த நாம் தொடுவது என்பது மிகவும் தவறான ஒன்று. அதற்கு மாறாக அவரிடம் மானசிகமாக பேசினாலே அவருக்கு கண்டிப்பான முறையில் நம்முடைய வேண்டுதல்கள் போய் சேர்ந்துவிடும். சிவபெருமானுக்கு எப்படி வில்வ இலைகள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறதோ அதேபோல் நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் மாலை என்பது மிகவும் சிறப்புக்குரியதாக திகழ்கிறது.

- Advertisement -

நந்தியம் பெருமானை வழிபடுபவர்கள் அருகம்புல் மாலையை வாங்கி வந்து அவருக்கு கொடுக்க வேண்டும். மேலும் அவருக்கு அபிஷேகம் நடக்கும் பொழுது அபிஷேக பொருட்களை வாங்கி கொடுப்பது மிகவும் சிறப்பு. அதோடு மட்டுமல்லாமல் அவருக்கு இரண்டு அகல் விளக்குகளில் சுத்தமான இலுப்பை எண்ணெயை ஊற்றி மஞ்சள் நிற திரியை போட்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இயலாதவர்கள் நெய் ஊற்றி ஊற்றி கூட வழிபாடு மேற்கொள்ளலாம்.

நந்தி தேவருக்கு காப்பு அரிசி என்பது மிகவும் பிடித்தமான ஒன்றாக திகழ்கிறது. அதாவது சிகப்பு அரிசியை காலையிலேயே ஊற வைத்து அதை சுத்தமாக வடிகட்டி விட்டு அதில் நாட்டு சக்கரை அல்லது வெல்லம் சேர்த்து இதனுடன் பொடியாக நறுக்கிய தேங்காய் அல்லது தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக கிளறி வைப்பது தான் காப்பு அரிசி. இந்த காப்பரிசியை நந்தியபெருமானுக்கு நெய்வேத்தியம் செய்ய அவர்களுடைய வேண்டுதல்களை நந்தியம்பெருமான் நிறைவேற்றுவார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் நந்தியம்பெருமானுக்குரிய மந்திரம் இருக்கிறது. இந்த மந்திரத்தை பிரதோஷ வேளையில் நந்தியம் பெருமானை நினைத்து நாம் எங்கு இருந்தாலும் மனதார உச்சரிக்க நம்முடைய வேண்டுதல் கண்டிப்பான முறையில் நிறைவேறும். மேலும் நம்முடைய வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளையும் வாரி வழங்குவார். நோய் நொடிகள் எதுவும் அண்டாது. பிரச்சனைகள் அனைத்தும் போய்விடும்.

மந்திரம்

“ஓம் தத்புருஷாய வித்மஹே சக்ர துண்டாய தீமஹி தந்நோ நந்திஹ் ப்ரசோதயாத்”

இதையும் படிக்கலாமே: பித்ரு தோஷம் நீங்க பைரவர் வழிபாடு

சிவபெருமானை வழிபடுபவர்கள் கண்டிப்பான முறையில் நந்தியம்பெருமானையும் வழிபட வேண்டும். இந்த வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் செய்பவர்களுடைய வாழ்க்கையில் சிவபெருமான் மற்றும் நந்தி பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -