இனி உங்க தலையில் ஒரு நரைமுடி கூட இருக்கவே இருக்காது. என்னனா நீங்க வீட்டில் வேண்டாம்ன்னு தூக்கி போடுற இந்த பொருளை வைச்சு கொஞ்சம் கூட செலவே இல்லாம முடியை கருக்கருன்னு மாத்தலாம் தெரியுமா?

- Advertisement -

இளநரை வராமல் தடுப்பது என்பது இன்றைய தலைமுறையினருக்கு ஒரு பெரும் சவால் தான். இன்றைய உணவு பழக்க வழக்கம், சூழ்நிலை, மன அழுத்தம் போன்ற காரணங்களால் இளம் வயதிலேயே முடி நரைக்க தொடங்கி விடுகிறது. இளநரை தடுக்கவும், நரைமுடி வந்தவர்களுமே கூட, இந்த பேக்கை தொடர்ந்து பயன்படுத்தும் போது முடி நல்ல கருகருவென்று மாறி விடும். வாங்க அந்த இளநரையை போக்கும் பேக்கை எப்படி தயார் செய்வது என்பதை இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்வோம்.

நரை முடியை போக்கும் பேக் தயார் செய்யும் முறை:
இந்த பேக்கை செய்ய முதலில் ஒரு கப் கறிவேப்பிலை எடுத்துக் கொள்ளுங்கள். இந்த கறிவேப்பிலையை இரும்பு கடாயில் போட்டு வறுக்க வேண்டும். (கட்டாயமாக இரும்பு கடாய் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்). கறிவேப்பிலை லேசாக கருப்பு நிறம் வரும் வரையில் வறுத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு, கறிவேப்பிலையை மிக்ஸி ஜாரில் போட்டு நல்ல பவுடராக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

மறுபடியும் அடுப்பை பற்ற வைத்து இரும்பு கடாய் வைத்து அதில் அரை லிட்டர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் ஒரு கப் பீட்ரூட் தோல், ஒரு கப் மாதுளை பழத்தோல், 3 எலுமிச்சை பழத்தின் தோல் என இவை அனைத்தையும் சின்ன சின்னதாக நறுக்கி தண்ணீரில் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இது நன்றாக நிறம் மாறி கருப்பாக வந்தவுடன், நாம் ஏற்கனவே அரைத்து வைத்த கறிவேப்பிலை பொடியையும் சேர்த்து கொதிக்க விடுங்கள். அதன் பிறகு இதை அப்படியே 8 மணி நேரம் இரும்பு கடாயில் வைக்க வேண்டும். அப்போது தான் இவை எல்லாம் ஒன்றாக கலந்து தலையில் தேய்க்கும் போது நல்ல பலனை கொடுக்கும்.

அடுத்த நாள் இதை ஒரு மெல்லிய துணியில் சேர்த்து வடிகட்டி எடுத்து கொள்ளுங்கள். இதில் திப்பிகள் அதிகமாக இருக்கும் எனவே துணியை இறுக்கமாக பிழிந்து சாறு மொத்தம் வடித்து எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்து நீங்கள் தலைக்கு பயன்படுத்தும் ஹன்னா எடுத்துக் கொள்ளுங்கள். அதில் இந்த சாறை ஊற்றி கலந்த பிறகு மீதமிருக்கும் சாறை தனியாக ஒரு பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள். ஹன்னாவுடன் இதை கலந்த பிறகு மறுபடியும் 8 மணி நேரம் அப்படியே வைத்து, அதன் பிறகு தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து எப்பொழுதும் போல் தலைக்கு குளித்து விடுங்கள்.

- Advertisement -

இதை வடிகட்டி எடுக்கும் போதும், தலையில் தேய்க்கும் போதும் கைக்கு கிளவுஸ் போட்டுக் கொள்ளுங்கள். இது அந்த அளவிற்கு கருமை நிறமாக இருக்கும். இதில் கலந்தது போக மீதம் இருக்கும் சாறை, ஒரு முறை ஹன்னாவுடன் சேர்த்து தேய்த்தால், மற்றொரு முறை ஹன்னா சேர்க்காமல் தனியாக கூட இந்த சாறை மட்டும் தேய்த்துக் கொள்ளுங்கள்.

கடைகளில் கிடைக்கும் டையை பயன்படுத்தும் போது கட்டாயமாக அதற்கு பக்க விளைவுகள் உண்டு . அது மட்டும் இன்றி அதை இப்படி வேர்க்கால்களில் எல்லாம் படும்படி அழுத்தி தேய்க்க கூடாது. இதை செய்யவும், பராமரிக்கவும் கொஞ்சம் நேரம் செலவழித்தால் கூட, இதனால் எந்த ஒரு பக்க விளைவும் கிடையாது. இதில் இருக்கும் பொருட்கள் அனைத்துமே இயற்கையானது. அதுமட்டுமின்றி இது முடிக்கும் நல்ல ஊட்டச்சத்தை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: இந்த எண்ணெயை தலையில் தேய்க்க தேய்க்க கட்டுக்கடங்காமல் காடு போல உங்களுடைய முடி வளர தொடங்கி விடும். முடியை கட்டி வைக்க பிறகு ரப்பர் பேண்ட் கூட பத்தாது.

இனி இளநரையையும் நரைமுடியும் கருமையாக்க, இந்த முறையில் ட்ரை பண்ணி பாருங்க உங்களுக்கு நிச்சயமாக நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

- Advertisement -