நரைமுடி கருப்பாக காலம் காலமாக நம் முன்னோர்கள் பின்பற்றி வந்த குறிப்புகளில் ஒரு சில குறிப்புகள் இதோ உங்களுக்காக.

hair11
- Advertisement -

நம்முடைய தலையில் வரும் நரை முடியை கருப்பாக மாற்ற பல விதங்களில் பல வழிமுறைகள் உள்ளது. எல்லா குறிப்புகளும் எல்லோருக்கும் பயன் தருமா என்று கேட்டால் அது நிச்சயம் கிடையாது. ஒவ்வொருவருடைய தலைமுடியும் உடல்வாகும் ஒவ்வொரு மாதிரி இருக்கும். கருமையான முடி வளர்ச்சிக்கு நம்முடைய முன்னோர்கள் இயற்கையாக பின்பற்றி வந்த ஒரு சில குறிப்புகளை தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். இந்த குறிப்புகள் உங்களுக்கு பிடித்திருந்தால் பின்பற்றி பலன் பெறுங்கள்.

குறிப்பு 1:
200ml கடுகெண்ணையில் நெல்லிக்காய் பொடி – 1 ஸ்பூன், வெந்தயப் பொடி – 1 ஸ்பூன், மருதாணி இலை பொடி – 1 ஸ்பூன், இந்த மூன்று பொடிகளையும் போட்டு டபுள் பாய்லிங் மெத்தலில் சூடு செய்து, இந்த எண்ணெயை வடிகட்டி ஆற வைத்து ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த எண்ணெயை வாரத்தில் இரண்டு நாள் தலையில் வைத்து மசாஜ் செய்து ஒரு மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இளநரை சீக்கிரம் கருப்பாக மாறும் இளநரை வருவது தள்ளிப் போகும்.

- Advertisement -

குறிப்பு 2:
கொய்யா இலை 5, முருங்கை கீரை 1 கைப்பிடி அளவு, இந்த இரண்டையும் எடுத்து மிக்ஸி ஜாரில் போட்டுக் கொள்ளுங்கள். கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி விழுதாக அரைத்து, இதை வடிகட்டி எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த சாறுடன் சிறிதளவு விளக்கெண்ணெய் ஊற்றி, நன்றாக கலந்து மயிர் கால்களில் படும்படி நன்றாக தேய்த்து மசாஜ் செய்து 1/2 மணி நேரம் விட்டு தலைக்கு குளித்தால் முடி கருகருவென வளரத் தொடங்கும்.

குறிப்பு 3:
தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால், 3 அல்லது 4 மாதத்தில் நரைமுடி நிச்சயம் கருப்பாக மாற நிறைய வாய்ப்புகள் உள்ளது. அப்படி இல்லை என்றால் இரண்டு நெல்லிக்காய்களை கொட்டை நீக்கிவிட்டு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு பெரிய டம்ளர் தண்ணீர் ஊற்றி அரைத்து வடிகட்டி சாறு குடிக்க வேண்டும். அதுவும் இல்லை என்றால் நெல்லிக்காய் பொடி வெதுவெதுப்பான தண்ணீரில் போட்டு கலந்து குடிக்கலாம்.

- Advertisement -

குறிப்பு 4:
வாரத்தில் ஒரு நாள் கொஞ்சமாக வெண்ணெயை எடுத்து தலை முழுவதும் தடவி அரை மணி நேரம் ஊற வைத்து அதன் பின்பு குளித்தால் முடி ஷைனிங் ஆகவும் வலிமையோடும் வளர தொடங்கும்.

இதையும் படிக்கலாமே: இனி பார்லர் சென்று அதிக செலவு செய்ய தேவையே இல்லை. வீட்டிலே செய்து கொள்ளலாம் பெடிக்யூர்.

குறிப்பு 5:
சின்ன வெங்காயம் தோல் உரித்தது 5 பல், கற்றாழை ஜெல் 2 டேபிள் ஸ்பூன், வல்லாரை கீரை பொடி 2 டேபிள் ஸ்பூன், இந்த மூன்று பொருட்களையும் மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக விழுதாக அரைத்து இந்த விழுதை வழுக்கை உள்ள இடத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளிக்க வேண்டும். இப்படி வாரத்தில் இரண்டு நாள் செய்துவிர வழுக்கை இடத்தில் ஆரோக்கியமான முடி வளர்ச்சி இருக்கும்.

- Advertisement -