உங்களின் கடன், நோய், எதிரிகளை போக்கும் அற்புத மந்திரம்

narasimma
- Advertisement -

வாழ்வில் பல விதமான கஷ்டங்களை அனுபவிக்கும் மக்களில் பலர் எத்தகைய சூழ்நிலைகளிலும் இறைவனின் மீதான நம்பிக்கையை கைவிடுவதில்லை. விஷ்ணு புராணத்தின் இரண்யகசிபு என்கிற அரக்கனுக்கு புதல்வனாக பிரகலாதன் பிறந்தாலும், அனைத்தையும் காக்கும் ஸ்ரீ நாராயணனின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தான். தன்னுடைய உயிருக்கே ஆபத்து ஏற்பட்ட போதும் நாராயணனின் மீதான பக்தியை பிரகலாதன் விட்டுக்கொடுக்கவில்லை. இதை கண்டு மனம் குளிர்ந்த திருமால் தனது பக்தன் பிரகலாதனை மகாவிஷ்ணு எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரம். அந்த நரசிம்மருக்குரிய சக்தி வாய்ந்த மூல மந்திரம் இதோ.

narasimha 3

நரசிம்மர் மூல மந்திரம்

உக்ரம் வீரம் மஹா விஷ்ணும், ஜ்வலந்தம்
சர்வதோ முகம் நரசிம்மம், பீஷணாம்
பத்ரம் ம்ருத்யம் ம்ருத்யம் நமாம் யஹம்

- Advertisement -

உக்கிர தெய்வமான ஸ்ரீ நரசிம்மரை வழிபாடும் போது உடல், மனம், ஆன்மா என்கிற மூன்றிலும் திரிகரண சுத்தியை கடைபிடிப்பது மிகவும் அவசியமாகும். மகாவிஷ்ணுவின் வழிபாட்டிற்குரிய சனிக்கிழமைகள் அன்றும், செவ்வாய்கிழமைகள் அன்றும் நரசிம்மர் கோவிலுக்கோ அல்லது சந்நிதிக்கோ சென்று, துளசி மாலையை நரசிம்மருக்கு சாற்றி, இந்த 108 போற்றி துதியை துதித்து வழிபடுவதால் நமது மனங்களில் இருக்கும் தீய எண்ணங்கள் நீங்கும். எதற்கும் அஞ்சாத நெஞ்சுறுதி கிடைக்கும். உடல் மற்றும் மனம் பலம் பெறும். தீய சக்திகளின் பாதிப்பு, நோய், எதிரிகளின் தொல்லை போன்ற அனைத்தும் நீங்கும். கடன் பிரச்சனையும் விரைவில் தீரும்.

நரசிம்மர் வழிபாடு

- Advertisement -

தன்னை வைபவர்களையும் வாழ வைக்கும் தெய்வம் மகாவிஷ்ணு எனப்படும் பெருமாள் ஆவார். வைகுண்டத்தில் வாசம் செய்யும் அந்த மகாவிஷ்ணுவானவர் மொத்தம் 9 அவதாரங்கள் எடுத்து பூமியில் அதர்மத்தை அழித்து, தர்மத்தை நிலைநாட்டினார். அதில் நான்காவது அவதாரமாக அவர் எடுத்தது தான் நரசிம்ம அவதாரம் ஆகும். மனிதனின் உடலும், சிங்கத்தின் தலையும் கொண்ட நரசிம்மர் என்கிற ரூபத்தில் தோன்றிய பெருமாள் அரக்கர் குல அரசனான ஹிரண்யகசிபுவை வதம் செய்து, தனது பக்தனான பிரகலாதனுக்கு அருளாசிகளை வழங்கினார். தீமைகள் அனைத்தையும் அழித்து, தர்மத்தை நிலைநாட்ட செய்தவரான நரசிம்ம மூர்த்தியை வழிபடும் பக்தர்களின் வாழ்வில் அனைத்து விதமான துக்கங்கள், துயரங்கள் முற்றிலும் நீங்கி வாழ்வில் வளமை பெருகும்.

narasimha avadharam

நரசிம்மர் வழிபாட்டிற்குரிய தினங்கள்

- Advertisement -

நரசிம்ம மூர்த்தியை வழிபடுவதற்கு அனைத்து தினங்களும் சிறப்பான தினங்கள் தான் என்றாலும் செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நரசிம்ம மூர்த்திக்கு தாமரைப்பூ சமர்ப்பித்து, பானகம் படைத்து, தீபங்கள் ஏற்றி வழிபடுவது நீங்கள் விரும்பிய பலனை அளிக்க வல்லதாகும். மேலும் வைகாசி மாதத்தில் வருகின்ற நரசிம்ம ஜெயந்தி தினத்திலும், கார்த்திகை மாதம் முழுவதும் நரசிம்ம வழிபாடு மற்றும் விரதங்கள் மேற்கொள்வதற்கு சிறந்த காலமாக இருக்கின்றன. இக்காலத்தில் நரசிம்மருக்கு முறைப்படி விரதம் மேற்கொண்டு வழிபாடு செய்பவர்களுக்கு அனைத்து விதமான நன்மைகளும் அருள்வர் ஸ்ரீ நரசிம்மமூர்த்தி.

narasimha 3

நரசிம்மர் வழிபாடு பலன்கள்

உக்கிர தெய்வமான நரசிம்ம மூர்த்திக்குரிய மந்திரங்கள் துதித்து வழிபடுவதால் நம்மை பீடித்திருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் நீங்கும். குறிப்பாக தீய ஆவிகள், எதிரிகளின் செய்வினை மாந்திரீக பாதிப்புகள் அனைத்தும் ஒழியும். உடல் மற்றும் மன நலம் மேம்படும். தைரிய குணமும், எதிரிகளை ஒழிக்கும் பராக்கிரமம் உண்டாகும். கர்மவினைகள் மற்றும் எத்தகைய தோஷங்களும் உங்களை பாதிக்காது. செவ்வாய்க்கிழமையில் வருகின்ற பிரதோஷம் ருணவிமோசன பிரதோஷம் என அழைக்கப்படுகிறது. இந்த பிரதோஷ தினத்தில் நரசிம்மருக்கு அர்ச்சனை செய்து வழிபடுவர்களுக்கு விரைவிலேயே கடன் பிரச்சினைகள் அனைத்தும் தீருவதற்கு வழி பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரங்களில் ஏற்பட்டிருந்த முடக்க நிலை நீங்கி, வியாபாரம் செழித்து மிகுதியான லாபங்கள் கிடைக்கப் பெறுவார்கள். வீட்டில் தரித்திர நிலை நீங்கி செல்வ சேர்க்கை அதிகரிக்கும் புதிய வீடு, வாகனம் போன்ற வசதிகளும் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே:
அற்புத பலன்களை தரும் ராகு மூல மந்திரம்

இது போன்று மேலும் பல காயத்திரி மந்திரம் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Narasimha moola mantra in Tamil. This is also called as Narasimha moola mantram in Tamil or Moola mantras in Tamil or Kadan theera in Tamil or Ethirigal oliya in Tamil.

- Advertisement -