இன்று ஒரு நாள் நரசிம்மரை வழிபட்டால் என்னென்ன பலன்களை பெறலாம் தெரியுமா ?

Narasimmar

இந்த உலகை காப்பதற்காக திருமால் பல அவதாரங்களை எடுத்துள்ளார். ஆனால் தன்னுடைய ஒரே ஒரு பக்தனை காப்பதற்காக திருமால் எடுத்த அவதாரமே நரசிம்ம அவதாரம். திருமால் தனது பக்தன் மீது வைத்துள்ள அவற்றை அன்பை காட்டுகிறது இந்த அற்புதமான நரசிம்மர் அவதாரம். ஒருவனை காக்க அவதரித்து, உலகத்தையே காத்து நிற்கும் நரசிம்மர் அவதாரம் நிகழ்ந்தது இன்று தான்.

Narasimmar

சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி திதி நாளையே நாம் நரசிம்ம ஜெயந்தியாக கொண்டாடுகிறோம். அந்த நன்னாளானது இன்று தான். இந்த நாளில் நாம் நரசிம்மர் கோயிலிற்கு சென்று தாமரை, செவ்வரளி போன்ற மலர்களால் அர்ச்சனை செய்வது சிறப்பு. அதோடு வெல்லம், சர்க்கரைப் பொங்கல், அவல் போன்றவற்றை நைவேத்யமாக படைத்து நரசிம்மரை வழிபடுவது நல்லது.

நரசிம்மர் கோயிலிற்கு செல்ல இயலாதவர்கள் வீட்டிலேயே நரசிம்மரை வழிபட்டு அவருக்குரிய மந்திரத்தை ஜபிக்கலாம். இன்று நரசிம்மரை வழிபடுவதன் பயனாக நமது தொழிலில் உள்ள தடைகள், நமது முன்னேற்ற பாதையில் உள்ள தடைகள் என அணைத்து விதமான தடைகளும் விலகும். நமக்கான வேண்டுதல் அனைத்தையும் நரசிம்மர் நிறைவேற்றி தரக்கூடிய ஒரு அற்புதமான நாள் இன்று.

நரசிம்மர் மந்திரம் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

English Overview:
Today is Narasimmar jayanthi. So if we worship Lord Narasimar Today. Then we will get grace of him. Here we have Narasimmar manthiram too.