பகைவர்களை வெல்லவும் பிரிந்த உறவுகள் சேரவும் இந்த பூஜையை செய்து பாருங்கள். உடனடியாக கை மேல் பலன் கிடைக்கும்.

narasimmar poojai
- Advertisement -

ஒரு மனிதன் மனித நேயத்துடன், இரக்கத்துடன், உண்மையுடன், நேர்மையுடன், பாசத்துடன், மற்றவர்களிடம் நல்ல உறவுடன், பிறருக்கு தீங்கிழைக்காமல் தானுண்டு தனது வேலையுண்டு என்று வாழ்ந்து வந்தாலும் அவர்களை சுற்றியும் பகைவர்கள் இருக்கத் தான் செய்கிறார்கள். சில நேரங்களில் மனிதனின் நல்ல குணங்கள் கூட பிறருக்கு பிடிக்காமல் அவர்களை எதிரியாக பார்க்கச்செய்கிறது. ஆக மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் எதிரிகள் என்று ஒருவராவது இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படி இருக்கையில், எதிரிகளை உங்களிடமிருந்து விளக்குவதற்கும், பிரிந்த சொந்தங்கள் உங்களை வந்து சேர்வதற்கும் நரசிம்ம பெருமாளை பூஜை செய்து வணங்கி வருவது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.

narasimmar

தீராத பாவங்களை செய்து கொண்டிருந்த இரண்யகசிபுவை வதம் செய்வதற்காகவே பெருமாள் நரசிம்ம அவதாரம் எடுத்திருந்தார். எவ்வாறு “பூமி, வானம்”, “கருணை, கோபம்”, “இரவு, பகல்”, “உயிருள்ள பொருள், உயிர் அற்ற பொருள்” இப்படி பலவற்றை ஒன்றாக இணைப்பது என்பது சாத்தியமற்றதோ அப்படித் தான் மனிதன் மற்றும் விலங்கு இணைவதும் சாத்தியமில்லாத ஒரு செயலாகும்.

- Advertisement -

ஆனால் நரசிம்மர் என்பவர் மனிதன் பாதி மிருகம் பாதி என இவை இரண்டுமே கலந்த கலவையாக இருக்கிறார். எனவே நரசிம்மரை வழிபடுவதன் மூலம் இணையாத இரு துருவங்களை கூட இணைந்து விடும், உங்கள் உறவுகளையும் உங்களிடம் சேர்த்துவிடும். அதுமட்டுமல்லாமல் எவ்வளவு பலம் பொருந்திய எதிரியாக இருந்தாலும் அவர்களையும் உங்களை விட்டு விலகி ஓடச் செய்யும்.

narasimmar

நரசிம்மரை வழிபடும் பூஜை முறைகள்:
எல்லா பொருள்களிலும் நான் இருக்கிறேன் என்பதை உணர்த்தவே நரசிம்மர் அவதரித்தார். எனவே நரசிம்மரை எங்கும், எந்த இடத்திலும் மனதில் நினைத்து வணங்கலாம். நரசிம்மருக்கு சிகப்பு நிற அரளி மற்றும் செம்பருத்திப்பூ மிகவும் பிடித்தமானதாகும். எனவே நீங்கள் நரசிம்மர் பூஜைக்கு இவற்றினை பயன்படுத்திக்கொள்ள விசேஷமாக இருக்கும்.

- Advertisement -

நரசிம்மரை வீட்டில் பூஜை செய்யும்பொழுது வாயுமூலை எனப்படும் வடமேற்கு திசையில் வைத்து பூஜை செய்வது மிகவும் நல்லதாகும். நரசிம்மரின் அருளைப் பெற பெண்களும் விரதம் இருக்கலாம். ஆனால் பெண்கள் மிகவும் கவனத்துடனும் சுத்தத்துடனும் இருத்தல் வேண்டும்.

narasimmar

பிரகலாதன் போல் பக்தி கொண்டு நரசிம்மரை வழிபட்டு வந்தால் உங்களுக்கு எட்டு திசைகளிலும் புகழ் கிடைக்கும். சுவாதி நட்சத்திரம் அன்று விரதமிருந்து நரசிம்மரை வழிபட்டு வந்தால் நரசிம்மரின் பரிபூரண அருள் கிடைக்கும்.

நரசிம்மர் ஸ்லோகம்:
நரசிம்மரே நீயே எனது தாய், நீயே எனது தந்தை, என் சகோதரனும் நீயே, என் தோழனும் நீயே, என் எஜமானும் நீயே, என் அறிவும் நீயே, செல்வமும் நீயே, இவ்வுலகத்தில் எல்லாமுமே நீயே, உன்னை விட உயர்ந்தவர் எவரும் இல்லை இறைவா. உன் பாதம் தொழுது சரணடைகிறேன்.

om

நரசிம்மரை எப்பொழுது எல்லாம் விரதம் இருந்து பூஜை செய்கிறார்களோ அப்பொழுதெல்லாம் இந்த ஸ்லோகத்தை சொல்லி விளக்கேற்றி வணங்க வேண்டும். நரசிம்ம ஜெயந்தி அன்று நரசிம்மரை தொழுவது மிகவும் சிறப்பு அம்சம் வாய்ந்ததாகும். அனைத்து செல்வங்களையும் உங்களுக்கு அருளும் நரசிம்மருக்கு விரதம் இருந்து பூஜை செய்யும் பொழுது பால் மற்றும் பால் சம்பந்தமான பொருட்கள் எதையுமே உட்கொள்ளக்கூடாது. நரசிம்மருக்கு வைக்கும் பானகத்தை குடித்து விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -