உங்களுக்கு நேரமே சரியில்லை என்று தோணுதா? துளசியை வைத்து இதை செய்து பாருங்கள் கெட்ட நேரமும் நல்ல நேரமாக மாறிவிடும்!

thulasi-perumal

ஒருவருக்கு நேரம் சரியில்லை என்றால் தொட்டதெல்லாம் தோல்வியை தழுவும். எந்த முயற்சிகள் எடுத்தாலும் அதில் இடையூறுகள் வந்து கொண்டே இருக்கும். அடுத்து என்ன செய்வது? என்று யோசித்தால் கூட எதுவுமே புலப்படாது. இப்படி தொடர் சறுக்கல்களும், தோல்விகளும் ஏற்படும் பொழுது நமக்கு மட்டும் ஏன் இப்படி? என்கிற விரக்தியும் வந்து விடுகிறது. அப்படி நாம் பெரிதாக யாருக்கும் எந்த பாவமும் செய்து விடவில்லையே! ஏன் நமக்கு நல்ல நேரமே வரமாட்டேன் என்கிறது? என்று புலம்பிக் கொண்டே இருப்பார்கள்.

sad

ஒருவருக்கு நல்ல நேரம் வருவதற்கு கிரக நிலைகள் மட்டும் சரியாக அமைந்து விட்டால் போதுமா? கடவுள் சோதனைகளை கொடுப்பதே அவரை ஞாபகம் வைத்துக் கொள்கிறோமா? இல்லையா? என்று சோதிப்பதற்கு தான் என்கிற கூற்று நிலவி வருகிறது. நாம் கடவுளை விழுந்து விழுந்து கும்பிட்டாலும் நமக்கு நல்லதே நடக்க மாட்டேன்! என்கிறது. ஒரு சிலர் எல்லாம் கடவுளே இல்லை என்று கூறிக் கொண்டு இருப்பார்கள். அவர்கள் என்னவோ ஓஹோ! என்று வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இந்த முரண்பாடு வருவதற்கு என்ன காரணம் தெரியுமா? வரிசையாக துரதிஷ்டம் துரத்தும் பொழுது நாம் செய்ய வேண்டிய பரிகாரம் தான் என்ன? இதனை அறிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை படியுங்கள்.

நாம் நமக்காக செய்யும் வேண்டுதல்களை விட பிறரின் நன்மைக்காக வேண்டும் வேண்டுதல்கள் உடனே பலிக்கும் என்பார்கள். ஐந்தறிவு கொண்டுள்ள விலங்குகள் கூட பல இடங்களில் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் ஆறாம் அறிவாகிய பகுத்தறிவு பெற்றிருந்தும் சில மனிதர்கள் சுயநலமாக சிந்தித்து கொண்டிருக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய விஷயமாக இருக்கிறது. எந்த ஒரு இடத்தில் சுயநலம் தலைவிரித்து ஆடிக் கொண்டிருக்கிறதோ அந்த இடத்தில் துரதிர்ஷ்டம் விரைவில் வந்து சேர்ந்து விடுகிறது என்பது தான் முக்கியமான உண்மை.

thulasi chedi

சுயநலமில்லாத தூய பக்தியை வரவழைத்துக் கொள்ளுங்கள். நிச்சயம் கடவுள் இவைகள் உங்கள் பக்கமும் திரும்பிப் பார்ப்பார். தொடர்ந்து உங்களுக்கு பிரச்சனைகளும், துன்பங்களும் விடாமல் வந்து கொண்டிருந்தால், அதில் இருந்து விடுபடுவதற்கு சுலபமான வழி ஒன்று உள்ளது. அமைதியான சூழ்நிலையில் பூஜை அறையில் அமர்ந்து கொண்டு இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.

- Advertisement -

சுத்தமான துளசி இலைகளை ஐந்தாறு பறித்துக் கொண்டு உள்ளங்கையில் வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் கீழ்வரும் மந்திரத்தை 108 முறை உச்சரித்து பாருங்கள். இறைவனின் திருநாமத்தை உச்சரித்தால் அவர்களுக்கு துன்பங்கள் ஏற்படாது என்பது நியதி. அதற்கெல்லாம் நமக்கு எங்கே நேரம் இருக்கிறது? எதற்காக ஓடிக் கொண்டிருக்கிறோம் என்று தெரியாமலேயே, பலரும் காலில் சக்கரத்தைக் கட்டிக் கொண்டு தினமும் ஓடிக் கொண்டே தான் இருக்கிறோம். இதற்கிடையில் கடவுளாவது, கிடவுளாவது என்று எண்ணிக் கொண்டிருக்காமல் கொஞ்சமாவது ஞானத்தை வரவழைத்துக் கொள்ளுங்கள்.

vishnu

நாராயண எட்டெழுத்து மந்திரம்:
ஓம் நமோ நாராயணாய!

Thulasi

துளசி இலைகளை கையில் வைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை உச்சரித்த பின் அதனை பிரசாதமாக எண்ணிக் கொண்டு சாப்பிட்டு விடுங்கள். இவ்வாறு தொடர்ந்து 6 சனிக்கிழமைகளில் வீட்டிலேயே செய்து பாருங்கள். எவ்வளவு துன்பங்கள் உங்களை சுற்றி இருந்தாலும் உடனே மாயமாகி விடும். நிறைய நல்ல விஷயங்கள் உங்களுடைய வாழ்க்கையில் நடக்கத் துவங்கும். கடவுளுக்கும் கண் இருக்கிறது என்பதை நீங்களும் உணர்வீர்கள்.

இதையும் படிக்கலாமே
வீடு நிலம் போன்ற சொத்துக்கள் வாங்க வேண்டும் என்ற கனவு நினைவாக, இந்த மந்திரத்தை 15 நாள் உச்சரித்தாலே போதும்! அந்த முருகப்பெருமானே அவதாரமெடுத்து வந்து நிச்சயம் உதவி செய்வார்.

இது போன்ற மந்திரங்கள் பலவற்றை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.