மலை குகையில் 32,000 வருட பழமையான நரசிம்மர் சிலை கண்டுபிடிப்பு

narasimmar-4

தன்னை மீறிய இயற்கை சக்திக்கு உருவம் கொடுத்து வழிபட்டான் ஆதி மனிதன். உருவ வழிபடு என்பது இந்திய நாட்டில் ஆதிகாலத்தில் இருந்தே இருந்ததற்கான பல சான்றுகளும் இருக்கின்றன. அதோடு பிற நாட்டவர்க்கும் உருவ வழிபாட்டின் மகிமையை கற்றுத்தந்த பெருமை இந்தியர்களுக்கு உண்டு. அந்த வகையில் ஜெர்மனி நாட்டில் கண்டெடுக்கப்பட்ட மிக பழமையான நரசிம்மர் உருவச்சிலை குறித்த சில விடயங்களை பார்ப்போம்.

1939 ஆண்டு ஜெர்மனி நாட்டில் “லோனேதால்” என்ற பகுதியில் சிங்க தலையும் மனித உடலும் கொண்ட வகையில் மரத்தாலான ஒரு சிலையை வரலாற்று அகழ்வாராய்ச்சியாளர்கள் ஒரு மலை குகையில் கண்டெடுத்தனர். குகையின் வாயிலில் இருந்து 20 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்ட இந்த சிலை, உடைந்து சிதிலமடைந்திருந்தது. உடைந்த பாகங்களை ஒன்றிணைத்தபோது அது சிங்க தலையுண்டன் மனித உருவில் காட்சி அளித்தது. இந்த சிலை குறித்து மேலும் விரிவாக ஆராய்ந்த போது அந்த சிலை சுமார் 32,000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என கண்டறிந்தனர்.

இச்சிலையின் கண்டுபிடிப்பு பல கேள்விகளை எழுப்பியது. ஏனெனில் விலங்கியல் அறிஞர்களின் கருத்து படி சிங்கங்கள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக வெப்ப மண்டல வனங்களை கொண்ட ஆசிய மற்றும் ஆப்பிரிக்க கண்டங்களில் மட்டுமே வாழ்ந்து வருகின்றன. வெண்பனி பொழியும் மிகவும் குளிர்ந்த பகுதியில் வாழ்ந்த ஜெர்மானிய ஆதிகால மனிதர்கள், ஐரோப்பிய கண்டத்திலேயே வாழாத சிங்கத்தை எவ்வாறு சிலை வடித்தனர் என்று வியக்கின்றனர்.

Narasimmar

உலகின் மிக பழமையான நாகரிகமும் மதமும் கொண்டது நம் பாரதம். நமது பழமையான வேதங்களில் ஒன்றான ரிக் வேதத்தில் 90,000 ஆண்டுகளுக்கு முந்தைய வானியல் மற்றும் நட்சத்திரங்கள் கிரகங்களின் காட்சிகளை பற்றிய குறிப்புக்கள் உள்ளன.மேலும் மத்திய ஆசியா மற்றும் ஐரோப்பிய கண்டங்களில் வாழ்ந்த ஐரோப்பியர்களும் இந்தியர்கள் கலப்பான இந்தோ ஐரோப்பியர்கள் இன மக்களிடம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே வேத கால இந்து மதம் பின்பற்றப்பட்டதற்கான ஆதாரங்கள் ஆய்வாளர்களுக்கு கிடைத்திருக்கின்றன.

- Advertisement -

Narasimmar

எனவே இந்து மதத்தின் புராண கதைப்படி ஹிரண்யகசிபுவை விஷ்ணு சிங்கத்தலையும் மனித உடலும் கொண்ட நரசிம்மர் அவதாரம் எடுத்து அழித்த கதையை இவர்களும் அறிந்து, நரசிம்மர் மூர்த்தியை தீமைகளை அழிக்கும் கடவுளாக வழிபட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் சிலர் கருதுகின்றனர் . இப்படி நமது மதம் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே உலகின் பிறபகுதிகளில் பரவியிருக்கின்றது. இந்த உண்மை காலத்தால் மறைக்கப்பட்டாலும், அவை ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டுதான் இருக்கிறது.

இதையும் படிக்கலாமே:
மனித உடலுடன் வைகுண்டம் சென்ற ஞானியைப் பற்றி தெரியுமா?

English Overview:
Lord Narasimhar statue was found in Germany in 1939. The statue was 32,000 years old. We have discussed many things about that statue here.