வீட்டில் பாத்ரூம் கழுவ வேண்டும் என்றாலே நமக்கு போதும் போதும் என்று ஆகிவிடும். எந்த வேலை வேண்டுமானாலும் சுலபமாக செய்துவிடலாம், ஆனால் பாத்ரூம் கழுவுவது மட்டும் சற்று சிரமமாக இருக்கும். கண்ட கண்ட கெமிக்கல்களை உபயோகிக்காமல், உடலுக்கு கேடு விளைவிக்காத இந்த இயற்கையான பொருட்களை வைத்து எப்படி பாத்ரூம் கிளீன் செய்வது? என்பதைத் தான் இந்த வீட்டு குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து காண இருக்கிறோம்.
வீட்டில் கழிப்பறை மற்றும் குளியல் அறை ஆகிய இரண்டும் கிருமிகள் தேங்கும் இடமாக இருப்பதால் மிகவும் சுத்தமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்திற்கு எந்த விதமான பாதிப்புகளும் ஏற்படாத வண்ணம் வாரம் ஒரு முறையாவது தூய்மை செய்து கொள்வது நல்லது. அப்படி சுத்தம் செய்யும் பொழுது ஆசிட் போன்ற கடுமையான பொருட்களை பயன்படுத்துவதால் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.
அதிக அளவு ரசாயனங்கள் சேர்க்கப்பட்ட எந்த விதமான கிளீனர்களும் பயன்படுத்தாமல், முற்றிலும் இயற்கையான முறையில் எப்படி சுத்தம் செய்வது? முதலில் ஒரு பௌலில் நான்கு சீயக்காய் பொடிகளை கலந்து கொள்ளுங்கள். வீட்டில் அரைத்த சீயக்காயாக இருந்தால் இன்னும் நல்லது. இல்லையென்றால் மற்ற பிராண்டுகளில் விற்கப்படும் சீயக்காய் பொடிகளை சேர்த்து கொள்ளுங்கள்.
பின்னர் அவற்றுடன் நன்கு புளித்த தயிர் சேர்க்க வேண்டும். நன்கு புளித்த தயிர் உப்பு கறையை எளிதாக நீக்கக் கூடியது. உப்பு கறையுடன் சேர்த்த, விடாப்பிடியான அழுக்குகள் நீங்க இந்த முறை உதவியாக இருக்கும். தயிரை நன்கு புளிக்க விட்டு, அதன் பிறகு இந்த கலவையை தயார் செய்யுங்கள். புளித்த தயிர் ஒரு கப் அளவிற்கு சேர்த்ததும், அதனுடன் நீங்கள் தலைமுடியை அலச பயன்படுத்தும் ஏதாவது ஒரு பிராண்ட் ஷாம்புவை சேர்த்துக் கொள்ளுங்கள்.
ஷாம்பூ நெடி ஏற்படுத்தாத செயற்கை முறை கிளீனர் என்பதால் ஆரோக்கியத்திற்கு எந்த விதமான பக்க விளைவுகளையும் உண்டாக்காது. குறிப்பாக மூச்சுத் திணறல் போன்ற பிரச்சனைகளை சில க்ளீனர்கள் உண்டாக்கிவிடும். இதிலிருந்து விடுபடுவதற்கு ஷாம்பூ போதுமானது. நான்கு பாக்கெட் ஷாம்புவை சேர்த்து நன்கு கலவையை கலந்து பேஸ்ட் போல தயாரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு மாதிரி கிரீம் போல வந்ததும், அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அடைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஸ்பிரே செய்வதற்கு ஏற்றார் போல தண்ணீரை கலந்து கொள்ள வேண்டும். இப்போது நீங்கள் பாத்ரூம் டைல்ஸ் மற்றும் தரைப்பகுதி, டாய்லெட் போன்ற எல்லா இடங்களிலும் ஸ்பிரே செய்து ஊறவிட்டுக் கொள்ள வேண்டும். லேசான கறைகள் இருந்தால் நீங்கள் ஒரு பத்து நிமிடம் ஊற வைத்தால் போதும் பிறகு சுத்தம் செய்து விடலாம்.
இதையும் படிக்கலாமே:
உங்கள் ராசிக்கு பைரவர் கோவிலுக்கு எந்த கிழமையில் சென்றால் கடன் தீரும்.
விடாப்பிடியான கறைகள் இருப்பின் அரை மணி நேரத்திலிருந்து, ஒரு மணி நேரம் வரை நன்கு ஊற விடுங்கள். அதன் பிறகு பாத்ரூம் கழுவ பயன்படுத்தும் பிரஷ்சை கொண்டு நன்கு தேய்த்து விட்டால் போதும், உப்பு கறையுடன் கூடிய விடாப்பிடியான அழுக்குகள், கிருமிகள் அனைத்தும் ரொம்பவே சுலபமாக சுத்தமாகிவிடும். இந்த கலவையை பாத்திரம் கழுவக்கூடிய சிங்க் மற்றும் வாஷ்பேஷன் போன்ற இடங்களையும் சுத்தம் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வளவுதாங்க இப்படி இயற்கையான முறையில் தொடர்ந்து சுத்தம் செய்யும் பொழுது வேலை சுலபமாகிவிடும் எனவே அடிக்கடி சுத்தம் செய்து ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம், மேலும் உங்களுடைய பாத்ரூம் இனி எப்பொழுதும் கிருமிகள் மற்றும் அழுக்குகள் இல்லாமல் பளிச்சென சுத்தமாக இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க இனி மூக்கை திறந்து வைத்தே பாத்ரூமை கிளீன் செய்வீர்கள்.