கடைக்குப் போய் கண்டதையும் வாங்காமல், உங்கள் சமையல் அறைக்குப் போய் இத செஞ்சிப் பாருங்க நீங்களும் பேரழகாகலாம்!

muttakose-coconut-milk-pimple
- Advertisement -

அழகு சாதன பொருட்கள் விற்பனை படு ஜோராக நடந்து வரும் இந்த காலகட்டத்தில் பலரும் இயற்கையை தவிர்த்து செயற்கையை நாடுவது தான் வேதனைக்குரிய ஒரு விஷயமாக இருந்து வருகிறது. மற்ற விஷயங்களை காட்டிலும் அழகு மற்றும் ஆரோக்கியம் போன்றவற்றில் செயற்கையை நாடுவது அவ்வளவு நல்லதல்ல. தற்காலிக தீர்வை கொடுக்கும் செயற்கை பொருட்களை விட, நிரந்தர தீர்வை கொடுக்கும் இயற்கை பொருட்கள் நம் வீட்டு சமையலறையிலேயே இருக்கின்றது. கண்களுக்கு கீழே கருவளையம், முகம் முழுக்க சோர்வு, அயர்ச்சி, ஆரோக்கியமற்ற சருமம் கொண்டவர்கள் சமையலறைக்குப் போய் என்ன செய்தால் பேரழகாகலாம்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

மொபைல்போன், லேப்டாப் அல்லது கணினி அதிகம் உபயோகிப்பவர்கள் பெரும்பாலும் அவதிப்படுவது கண்களுக்கு கீழே கருவளையம் இருப்பதால் தான். கண்களுக்கு கீழே கருவளையம் வந்து விட்டாலே ஏதோ நோய் வாய்பட்டது போல நம்ம முகம் பொலிவின்றி தெரியும். பெரும்பாலும் இல்லத்தரசிகள் தங்கள் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தாதவர்கள் இது போன்ற முக சோர்வடைகின்றனர்.

- Advertisement -

அதிகம் செலவு செய்து வெளியே சென்று தான் நாம் முகத்தைப் பராமரிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. நம் வீட்டு சமையல் அறையில் இருக்கக்கூடிய இயற்கையாக கிடைக்கும் காய்கறி, பழங்களைக் கொண்டு நாம் அழகாக மாறலாம். அதில் முகத்தை சோர்வில் இருந்து வெளியில் கொண்டு வரக் கூடிய அற்புத சக்தி முட்டைகோசுக்கு உண்டு.

முட்டைகோஸை சாப்பிடுகிறார்களோ, இல்லையோ கொஞ்சம் முட்டைகோஸை நறுக்கி போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து வடிகட்டி கொள்ளுங்கள். இந்த தண்ணீரில் முகத்தை வெதுவெதுப்பான சூட்டில் கழுவி பாருங்கள். இதில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, டி ஆகியவை நம் முகத்தை சோர்வு, அயர்ச்சி ஆகியவற்றில் இருந்து நம்மை மீட்டெடுக்கும்.

- Advertisement -

அதன் பின்பு அரை கப் தயிருடன் கொஞ்சம் வெள்ளரிக்காய் துண்டுகளை சேர்த்து நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த விழுதினை முகம் முழுவதும் தடவி, நன்கு உலர விட்டு கழுவினால் முகத்தில் இருக்கும் கருவளையம், தழும்புகள், வெள்ளைத் திட்டுக்கள், கரும்புள்ளிகள் ஆகியவை நாளடைவில் நீங்கும். இதை தொடர்ந்து தினமும் செய்து வர வேண்டும். அப்போது தான் விரைவில் நல்ல ஒரு மாற்றம் தெரிய ஆரம்பிக்கும். தயிருடன் வெள்ளரிக்காய்க்கு பதிலாக ஆலிவ் எண்ணெயையும் பயன்படுத்தலாம். இரண்டையும் நன்கு கலந்து முகத்தில் அப்ளை செய்து 20 நிமிடம் உலர விட்டு கழுவினால் முகம் புத்துணர்ச்சியோடு புதுப்பொலிவோடு தோற்றமளிக்கும்.

முகத்தில் இருக்கும் சிறு சிறு துவாரங்கள் வழியே அழுக்குகள் உள்ளே சென்று பருக்களை உண்டாக்குகிறது. அந்த துவரங்களுக்குள் தேங்கி இருக்கும் இறந்த செல்களை வெளியில் கொண்டு வரக் கூடிய சக்தி தேங்காய் பாலுக்கு உண்டு, எனவே தேங்காய் பால் அரைக்கும் பொழுது கொஞ்சம் தேங்காய் பாலை முகம் முழுவதும் தடவி உலர விட்டு விடுங்கள். பின்பு குளிர்ந்த நீரினால் முகத்தை கழுவினால் டெட் செல்கள் நீங்கி முகம் பளிச்சென மின்னும். அதன் பின்பு தக்காளி சாறு, உருளைக்கிழங்கு சாறு, எலுமிச்சை சாறு ஆகியவற்றை சம அளவில் சேர்த்து கலந்து முகம் முழுவதும் தடவி உலர வைத்து கழுவி வாருங்கள். எந்த விதமான சரும பிரச்சனைகளும் உங்கள் முகத்தை நெருங்க கூட செய்யாது. காய்கறிகள், பழங்கள் நறுக்கும் பொழுது சரும பராமரிப்பிற்கு உரிய சாறுகளை தனியே எடுத்து வைத்துக் கொண்டு நீங்கள் முகத்தில் அப்போதே பூசி கழுவி வந்தால் பணமும், நேரமும் மிச்சமாகும்.

- Advertisement -