சீசன் இல்லை என்றாலும் உங்கள் வீட்டில் இருக்கும் ரோஜா செடி, மல்லி செடி, மற்ற பூச்செடிகளும் கொத்து கொத்தாக பூத்துக் குலுங்கும். 1 ரூபாய் கூட செலவு செய்யாமல், ஒரே 1 ஸ்பூன் இந்த பொடியை போட்டால் போதும்.

rose

சிலபேர் வீட்டில் இருக்கும் பூ செடிகள் சீசன் வந்தாலும் பூக்கவே பூகாது. ஆனால் சீசன் இல்லாவிட்டாலும், அந்த செடிகளை பூக்க வைப்பதற்கு ஒரு சுலபமான வழி உள்ளது. எந்தச் செடிக்கு, தேவைக்கு அதிகமாகவே ஊட்டச்சத்து உள்ளதோ அந்த செடி, சீசன் இல்லை என்றாலும் கொஞ்ச மாவது நிச்சயம் பூ பூக்கும். அந்த வகையில் உங்கள் வீட்டு செடிகளுக்கு அதிகப்படியான ஊட்டச்சத்தை எப்படி கொடுக்க வேண்டும், அதுவும் செலவில்லாமல் எப்படி கொடுக்க வேண்டும் என்பதை பற்றி தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

egg3

இதற்கு தேவையான பொருள் 3. ஒன்று கருவேப்பிலை, இரண்டாவது முட்டை தோல், மூன்றாவது வேப்ப இலைகள். வேக வைத்த முட்டையில் இருந்து உரித்த தோலை பயன்படுத்துவதை விட, பச்சையாக உடைத்த முட்டை தோலை வெயிலில் உலர வைத்து, நன்றாகப் பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள். மீதமான காய்ந்த கறிவேப்பிலை, ரோட்டோரங்களில் கிடைக்கும் வேப்பிலை, மூன்றையும் தனித்தனியாக பொடி செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது ஒரு அகலமான பவுளை எடுத்துக் கொள்ள வேண்டும். 3 பொடியில் இருந்தும், சம அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதாவது 1 ஸ்பூன் முட்டை தோலின் தூள், 1 ஸ்பூன் கருவேப்பிலை பொடி, 1 ஸ்பூன் வேப்பிலை பொடி.  மொத்தமாக போட்டு நன்றாக கலந்து கொள்ள வேண்டும். உங்கள் வீட்டில் இருக்கும் எல்லா வகையான செடிகளும் இதை போடலாம். உங்கள் வீட்டில் நிறைய செடிகள் இருந்தால் எல்லாவற்றிலிருந்தும் 2 ஸ்பூன் கூட கலந்து கொள்ளலாம் அது உங்களுடைய இஷ்டம்தான்.

karuvepilai

ரோஜா செடி, மல்லி செடி, முல்லைச் செடி, காய்கறி செடிகள், கொடிகள் எந்த தோட்டம் உங்கள் வீட்டில் இருந்தாலும், அதற்கு இந்த உரம் மிகவும் நல்ல ஊட்டச் சத்தைக் கொடுக்கும். மூன்று பொடியையும் கலந்த கலவையை 1 டேபிள் ஸ்பூன் அளவு எடுத்து உங்கள் செடியை சுற்றி உள்ள மண்ணில் அப்படியே தூவி விட வேண்டும். அதன் பின்பு மண்ணை ஒரு குச்சியை கொண்டு நன்றாக கிளறி விட்டு விடுங்கள். பின்பு செடிகளுக்கு தேவையான தண்ணீரை தெளிக்க வேண்டும்.

- Advertisement -

15 நாட்களுக்கு ஒருமுறை ஒரு ஸ்பூன் அளவு இந்த உரத்தைப் போட்டு வந்தால் செடிகளில் பூச்சி தாக்காது. ஊட்டச்சத்து நிறையவே கிடைக்கும். மொட்டுக்கள் கருகி உதிர்ந்து போகாது. பூக்கள் கொத்துக் கொத்தாக பூக்கும். பூக்கள் அடர் நிறத்தில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாகும். உங்களுடைய வீட்டில் இருக்கும் செடிகளுக்கு பூக்கும் சீசனில் இல்லை என்றாலும் ஓரிரண்டு பூக்கள் எப்போதுமே பூத்துக் குலுங்கி கொண்டே இருக்கும். பார்ப்பதற்கும் மனதிற்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும்.

rose-plant-watering

உங்களுடைய வீட்டில் பூக்கவே பூக்காத, காய் காய்க்காது செடி என்று ஏதாவது இருக்கும் அல்லவா? அந்த ஒரு செடிக்கு இந்த உரத்தை வாரத்திற்கு 1 நாள் போட்டு வாருங்கள். அதன் பின்பு அந்த செடி நன்றாக செழிப்பாக வளர தொடங்கியவுடன், 15 நாட்களுக்கு ஒருமுறை போடுங்கள். நல்ல வித்தியாசத்தை உணரமுடியும் அதன் பின்பு உங்கள் வீட்டில் செழிப்பாக வளரும் மற்ற செடிகளுக்குப் போட்டு நல்ல பயனை அடையலாம் அல்லவா?

இதையும் படிக்கலாமே
மங்கலான பழைய துருப்பிடித்த எவர்சில்வர் பாத்திரங்கள் கூட பளபளப்பாக மின்னும். உங்கள் வீட்டில் இருக்கும் எவர்சில்வர் பாத்திரத்தை ஒரு முறை இப்படி சுத்தம் செய்து பாருங்கள்.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.