நரை முடி கருமையாக இயற்கை ஹேர் டை

hair dye
- Advertisement -

ஒருவரை நாம் பார்த்தவுடன் நம் கண்ணிற்கு முதலில் தெரிவது அவர்களின் முகமும் முடியும் தான். முகம் எந்தளவிற்கு பளிச்சென்று தெரிகிறதோ அதே அளவிற்கு தலையில் இருக்கக்கூடிய வெள்ளை முடியும் பளிச்சென்று தெரியும். இதனால் வயதான தோற்றமும் ஏற்படும். பார்ப்பவர்கள் வயதானவர்கள் என்ற முடிவுக்கு வந்து விடுவார்கள். அப்படிப்பட்ட வயதான தோற்றத்தை மாற்றவும் முடியை இயற்கையாகவே கருமையாக்க கூடிய இயற்கையிலேயே செய்யக்கூடிய எளிமையான ஹேர் டை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

முடியை கருமையாக்குவதற்கு கெமிக்கல் இருந்த ஹேர் டை பல கடைகளில் விற்கப்படுகின்றன. இதை நாம் நம் தலையில் தடவுவதன் மூலம் கண்பார்வை பாதிப்பு ஏற்படுகிறது. ஒரு சிலருக்கு ஒவ்வாமை காரணமாக முகம் முழுவதும் கருந்திட்டுக்கள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. இன்னும் சிலர் இந்த கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோய் வருவதற்குரிய அபாயமும் உள்ளது என்று கூறுகிறார்கள். இவ்வளவு பிரச்சனைகள் நிறைந்த கெமிக்கல் ஹேர் டை பயன்படுத்துவதற்கு பதிலாக வீட்டிலேயே இயற்கையான பொருட்களை வைத்து தயாரிக்க கூடிய ஹேர் டை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

பொதுவாக இந்த ஹேர் டை பலரும் அறிந்தது தான் என்றாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையில் பயன்படுத்துவார்கள். மிகவும் எளிமையில் அதிக அளவு சிரமம் இல்லாமல் இந்த ஹேர் டையை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்கு நமக்கு தேவையான பொருட்கள் மருதாணி பொடியும், அவுரி பொடியும் தான்.

ஒரு இரும்பு கடாயை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மருதாணி பொடி இரண்டு ஸ்பூன் சேர்த்து அதனுடன் டீ டிகாஷன் சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இது ஒருநாள் இரவு முழுவதும் அந்த இரும்பு கடாயிலேயே இருக்கட்டும். மறுநாள் காலையில் இரண்டு ஸ்பூன் அளவிற்கு அவுரி பொடியை எடுத்து அதில் சிறிதளவு கல்லுப்பை நுணுக்கி நன்றாக கலந்து கொள்ளுங்கள். இந்த உப்பு அவுரி பொடியை நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்திருக்கும் மருதாணி பொடியுடன் சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

தேவைப்பட்டால் சிறிது டிகாஷனையும் சேர்த்துக் கொள்ளலாம். இதில் நாம் க்ரீன் டீயையும் சேர்த்து கலந்து கொள்ளலாம். இப்படி நன்றாக கலந்த பிறகு இதை தலையின் வேர்க்கால்களில் நன்றாக கையில் கிளவுஸ் அல்லது பிளாஸ்டிக் கவரை போட்டுக்கொண்டு தடவ வேண்டும். குறிப்பு இப்படி நாம் தடவும் பொழுது நெற்றிலோ காதுகளிலோ இந்த டை படாத அளவிற்கு பார்த்துக் கொள்ள வேண்டும்.

அரை மணி நேரம் ஒரு பிளாஸ்டிக் கவரை தலையில் போட்டு அப்படியே வைத்துவிட்டு பிறகு ஷாம்புவை போட்டு தலையை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு நாட்கள் என்ற வீதம் நாம் பயன்படுத்தும் பொழுது நம்முடைய தலை முடியின் நிறம் கருமையாக மாறுவதை நம்மால் உணர முடியும்.

இதையும் படிக்கலாமே: பொலிவிழந்த முகத்தை பளிச்சென்று மாற்ற பேஸ் பேக்

கெமிக்கல் நிறைந்த ஹேர் டை பயன்படுத்தி அதன் பக்க விளைவுகளால் பாதிப்பு அடையாமல் இயற்கையான பொருட்களை பயன்படுத்தி ஆரோக்கியமான முறையில் முடியை கருமையாக்கி கொள்ளலாம்.

- Advertisement -