மழை சீசனில் கொசுக்கள் உங்கள் வீட்டுக்குள் படையெடுக்கத் தொடங்கி விட்டதா? ஒரு கொசு கூட உங்களை கடிக்க முடியாது. இந்த ட்ரிக் யூஸ் பண்ணி பாருங்க.

கொஞ்சம் மழை பெய்ய தொடங்கி விட்டால் போதும். மழை நின்ற அடுத்த நாளே, நம் வீட்டுக்குள் கொசுக்கள் வரத் தொடங்கிவிடும். எவ்வளவு தான் ஜன்னல் கதவுகளை அடைத்து வைத்தாலும், இந்த கொசுவிடமிருந்து மட்டும் நம்மால் தப்பிக்கவே முடியாது. சரி, மாலை நேரத்தில் நம் வீட்டிற்குள் கொசுக்கள் படையெடுத்து வந்தாலும், அது நம்மை கடிக்காமல் இருக்க, அந்த கொசு சோர்ந்து போக, மயக்கமடைய நாம் இயற்கையாக என்ன செய்யலாம் என்பதைப் பற்றித்தான் என்று தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

mosquito1

கொசுக்களை விரட்டுவதற்கு செயற்கையான முறையில் நாம் பல விஷயங்களை கையாண்டாலும், குழந்தைகள் முதியவர்கள், இருக்கும் வீட்டில் செயற்கையான பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் நிறைய பக்க விளைவுகள் ஏற்படுகிறது. முடிந்தவரை செயற்கை பொருட்களை தவிர்த்து கொண்டு, இப்படிப்பட்ட இயற்கையான விஷயங்களை நீங்கள் பின்பற்றி பார்க்கலாம்.

முதலில் இந்த குறிப்புக்கு தேவையான பொருட்களை பார்த்து விடுவோம். வேப்ப எண்ணெய், எலுமிச்சை பழச்சாறு, கிராம்புத்தூள், கற்பூர தூள். இந்த 4 பொருட்கள் தான். உங்களுடைய வீட்டில் வேப்பெண்ணையில் தீபம் ஏற்றுவதற்கு விருப்பம் இல்லை என்றால், நீங்கள் தீபம் ஏற்றும் நல்லெண்ணெய்யை கூட இந்த விளக்கு ஏற்ற பயன்படுத்திக் கொள்ளலாம் தவறொன்றும் கிடையாது.

krambu

உங்கள் வீட்டில் இருக்கும் கிராம்பை நீங்களே மிக்ஸியில் போட்டு தூள் செய்து வைத்துக் கொள்ளலாம். கற்பூரத்தை நன்றாக கையாலேயே இடித்து பொடி செய்து வைத்துக் கொள்ளலாம். முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் 4 ஸ்பூன் அளவு வேப்ப எண்ணெயை ஊற்றி, அதில் எலுமிச்சை பழ சாறு 1/2 ஸ்பூன், கிராம்பு தூள் 1/2 ஸ்பூன், கற்பூர பொடி 1 ஸ்பூன், இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

அதன் பின்பு உங்கள் வீட்டில் இருக்கும் மண் அகல் விளக்கில் இந்த எண்ணையை ஊற்றி, கொஞ்சம் தடிமனான திரிபோட்டு, அந்த தீபத்தை ஏற்றி வைத்து விடுங்கள். உங்கள் வீட்டு வாசல் கதவு பக்கத்திலும் இதை வைக்கலாம். ஜன்னல்களுக்கு அருகிலும் இதை வைக்கலாம். படுக்கை அறையில் கட்டிலுக்கு அருகில் ஜாக்கிரதையாக, மெத்தையின் மேல் படாத வண்ணம் இதை வைத்து விட்டால் போதும். கொசுக்கள் உங்கள் வீட்டிற்குள் நுழைய வாய்ப்பு இல்லை.

deepam

கொசுக்கள் வீட்டிற்குள் நுழைந்தாலும், இந்த வாசத்திற்கு நிச்சயம் மயங்கி விடும். உங்களை கடிக்கவே கடிக்காது. ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க. உங்க வீட்டு கொசுக்கள் இந்த விளக்கில் இருந்து வரும் வாசத்திற்கு மயங்கினால் இதையே பின்பற்றி கொள்ளலாமே. ஆரோக்கியத்திற்கு எந்த கெடுதலும் வராது.