புதுசா ரோஜா செடி வாங்குறீங்களா? இலைகளில் நோய் தாக்குதல் ஏற்பட்டால் செலவே செய்யாமல் இயற்கை பூச்சி கொல்லி மருந்து இப்படித்தான் தெளிக்கணும் தெரிஞ்சுக்கோங்க!

cow-dung-rose-plant
- Advertisement -

ரோஜாச்செடி வாங்குபவர்கள் கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் நோய் தாக்குதலில் இருந்து அந்த இலைகளை காப்பாற்றுவது தான். எவ்வளவு காசு கொடுத்து ரோஜா செடிகள் வாங்கி நட்டு வைத்தாலும் அதன் இலைகள் நோய் தாக்குதலுக்கு உட்பட்டால் ஒரு பூ கூட முளைக்கவே செய்யாது. இலைகளுக்கு இயற்கையாக பூச்சிக்கொல்லி மருந்து எப்படி கொடுக்க வேண்டும்? அதை எப்படி தயாரிக்க வேண்டும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

புதிதாக வாங்கிய ரோஜா செடியில் முதலில் பூக்கும் பூவை தவிர அதற்கடுத்து வரும் கிளைகளில் ஒரு பூ கூட சில சமயங்களில் பூக்கவே செய்யாது. இதற்கு நோய் தாக்குதலுக்கு அச்செடியின் இலைகள் ஆளானது காரணமாக இருக்கலாம். எனவே இலைகள் வாடி போக ஆரம்பித்தாலோ அல்லது சுருங்கி போனாலோ அல்லது நோய் தாக்குதலுக்கு உட்பட்டது என்று தெரிந்திருந்தாலும் உடனே அந்த இலைகளை கத்தரித்து நீக்கி விடுங்கள்.

- Advertisement -

இந்த பூச்சிக்கொல்லி மருந்தை இயற்கையான முறையில் தயாரித்து தெளித்து பாருங்கள். ஒரு பக்கெட் முழுக்க தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள். ஒரு கைப்பிடி அளவிற்கு சுத்தமான பசும் சாணம் சேர்த்துக் கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் ஒரு கைப்பிடி அளவிற்கு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பசுஞ்சாணமும், மஞ்சள் தூளும் கலந்த இந்த தண்ணீரை நீங்கள் இலைகளில் இருக்கும் நோயை விரட்டவும், மீண்டும் முளைக்கும் புத்தம் புதிய கிளைகளில் முளைக்கும் தளிர் இலைகள் நோய் தாக்குதலுக்கு ஆளாகாமல் பிரஷ்ஷாக வளரவும் செய்யும் அற்புதமான ஆற்றல் கொண்டுள்ளது.

ரோஜா செடி மட்டும் அல்லாமல் அனைத்து வகை பூச்செடிகளுக்கும் இலைகளில் பிரச்சனை என்றால் இந்த இயற்கையான பூச்சிக் கொல்லி மருந்தை தெளித்து வரலாம். வாரம் இரண்டிலிருந்து மூன்று முறை இந்த பூச்சிக்கொல்லி மருந்தை தெளித்தால் நல்ல பலன் கிடைக்கும். நந்தியாவட்டையில் தோன்றக்கூடிய கருப்பான பூச்சிகள் செடியின் வளர்ச்சியை தடை செய்யும் முட்டுக்கட்டையாக இருக்கிறது. அதற்கு கூட இந்த பசுன்சாணமும், மஞ்சளும் கலந்த பூச்சிக் கொல்லி மருந்து தெளித்தால் ஒரு பூச்சி கூட அதில் தங்காது. புத்தம் புதிய பூக்கள் அழகாக பூக்கத் துவங்கும்.

- Advertisement -

தோட்டத்தில் உள்ள எறும்புகள் மற்றும் கம்பளி பூச்சிகளைக் கூட விரட்டியடிக்க கூடிய சக்தி இதற்கு உண்டு எனவே இயற்கையாக கிடைக்கக் கூடிய இந்த ரெண்டு பொருட்களை கொண்டு பூச்சிக்கொல்லி மருந்து தயாரித்து அடிக்கடி உங்களுடைய செடிகளுக்கு தெளித்து வாருங்கள். ஒரு செடி கூட வாடி போகாமல், வதங்கி போகாமல், சுருங்கி இல்லாமல் நல்ல செழிப்பாக இருக்கும். எனவே நீங்களும் உங்கள் வீட்டில் இதே போல ட்ரை பண்ணி பாருங்க.

இயற்கையாக செய்யக்கூடிய இந்த பூச்சிக்கொல்லி மருந்து உரமாக கொடுப்பதைக் காட்டிலும் இது போல தெளித்து விட்டால் நல்ல ஒரு ரிசல்ட் கிடைக்கும். புதிதாக வளரக்கூடிய எல்லா இலைகளும் கண்டிப்பாக பிரஷ்ஷாக முளைக்கத் துவங்கும். அதன் பிறகு ஒரு கிளையில் பத்து மொட்டுக்களுக்கு மேலே கொத்துக் கொத்தாகப் பூக்கும் அற்புத சக்தியாக மாறும்.

- Advertisement -