இந்த 1 முடிச்சு உங்களுடைய வீட்டில் இருந்தால் போதும். கெட்ட நேரத்திலும் கூட, நவகிரகங்களால் ஒரு போதும் உங்களுக்கு துன்பத்தை கொடுக்க முடியாது.

navagraha

இப்போது உங்களுக்கு நல்ல நேரம் நடக்கின்றது, கெட்ட நேரம் நடக்கின்றது, என்று எதை வைத்து நிர்ணயிப்பார்கள். கட்டாயம் அவரவருடைய ஜாதகத்தை வைத்துத் தான். ஜாதகக் கட்டம் தான் நம்முடைய தலையெழுத்தை நினைக்கின்றது. ஜாதக கட்டத்தில் அமர்ந்திருக்கும் நவக்ரகங்கள் நமக்கு கெட்ட நேரம் வரும்போது கெடுதலை கொடுப்பதும், நல்ல நேரம் வரும் போது நல்ல பலன்களை கொடுப்பதும், இயற்கையான ஒரு விஷயம் தான். இதை நாம் எல்லோரும் அறிந்து இருப்போம். ஆனால் நமக்கு நேரம் சரி இல்லை என்றபோதும், சூழ்நிலைகள் சரி இல்லாத சமயத்திலும், நவக்கிரகங்களால் நமக்கு வரக்கூடிய பிரச்சனைகளின் தாக்கத்தை குறைக்க ஒரு சுலபமான வழி உள்ளது.

navagragha-mandhiram

நமக்கு பிரச்சனை தரக்கூடிய கிரகங்களை முதலில் சாந்தி படுத்த வேண்டும். அதன் பின்பு அந்த நவகிரகங்களை நம் வசப்படுத்தி கொள்ள வேண்டும். பரிகாரங்கள் செய்தாலும் நிச்சயமாக வரக்கூடிய பாதிப்பிலிருந்து முழுமையாக தப்பித்துக் கொள்ள முடியாது. பாதிப்புகளின் தாக்கம் குறையும். எப்போதுமே பரிகாரங்கள் அதற்கு மட்டும் தான் பயன்படும். தவிர நம்முடைய தலையெழுத்தை முழுமையாக மாற்றக்கூடிய முழு உரிமை அந்த ஆண்டவன் கையில் மட்டும் தான் உள்ளது.

சரி, இப்போது நவகிரகத்தை சாந்தி படுத்துவது எப்படி? நவகிரகத்தை நம் வசியப்படுத்தி கொள்வது எப்படி? என்ற இரகசியமான சூட்சமத்தை தெரிந்துகொள்வோமா. மிகவும் சுலபமான வழி தான். நவக்கிரகங்களுக்கு உரிய நவதானியத்தை எப்போதுமே ஒரு கண்ணாடி பௌலில் அல்லது ஒரு மஞ்சள் துணியில் முடிந்து நம் வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜித்து வந்தால், நவகிரகங்கள் மனசாந்தி அடையும். இந்த நவதானியங்களை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எடுத்து தண்ணீரில் ஊற வைத்து பசுமாட்டுக்கு கொடுக்கலாம். அப்படி இல்லை என்றால் பறவைகளுக்கு தானியமாக சாப்பிட கொடுக்கலாம்.

navadhaniyam

இந்தப் பரிகாரத்தை எல்லோருமே தங்கள் வீட்டு பூஜை அறையில் பின்பற்றி வரலாம். இரண்டாவது பரிகாரம். இது நவகிரகங்களை வசியப்படுத்த. ஒரு சிறிய மஞ்சள் துணியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் கொஞ்சமாக நவதானியத்தை, அதாவது மூன்று கைப்பிடி அளவு நவதானியத்தை போட்டுக் கொண்டு, அதில் உடையாத முழு வசம்பை வைத்து ஒரு முடிச்சு கட்டி உங்கள் வீட்டில் உயரமான பகுதியில், கட்டி தொங்க விட்டு விட வேண்டும். நவகிரகங்கள் உங்கள் வீட்டில் வசப்படும்.

வசப்படும், வசியப்படும் என்ற வார்த்தை தவறான அர்த்தத்தை குறிப்பது கிடையாது. நம் செய்யக்கூடிய பூஜைக்கு நம்முடைய அன்பான வேண்டுதலுக்கு கிரகங்கள் கட்டுப்படும் அவ்வளவு தான் அர்த்தம். அடுத்தபடியாக கிரக தோஷம் என்றாலே நாம் அனைவரும் பயப்படுவது சனி பகவானை நினைத்து தான்.

vasambu 3

சனிபகவானால் ஜாதக கட்டத்தில் பிரச்சனை, குடும்பத்தில் பிரச்சனை என்று சொல்லுபவர்கள், தீபம் ஏற்றக் கூடிய நல்லெண்ணெயில், நல்லெண்ணெயை ஊற்றி வைத்திருக்கும் அந்த பாட்டிலில், சிறிதளவு கற்பூரத்தை தூள் செய்து போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். கற்பூரத் தூள் கலந்த அந்த நல்லெண்ணெயில், தினம்தோறும் வீட்டில் தீபம் ஏற்றி வந்தால் சனி பகவானால் ஏற்படக்கூடிய பிரச்சினைகள் படிப்படியாக குறையும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. முயற்சி செய்து பாருங்கள். நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.