நன்மைகள் தரும் நவக்கிரக வழிபாடு

navagraha valipadu
- Advertisement -

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய கஷ்டங்கள் அனைத்திற்கும் காரணம் நம்முடைய கர்ம வினைகளே, அப்படிப்பட்ட கர்ம வினைகளை ஆராய்ந்து அதற்குரிய பலன்களை தரக்கூடிய முக்கியமான பொறுப்பில் இருக்கக்கூடியவர்கள் தான் நவகிரகங்கள். நவக்கிரகங்களில் இருக்கக்கூடிய ஒவ்வொரு கிரகமும் நமக்கு சாதகமாக இருக்கிறதா? பாதகமாக இருக்கிறதா? என்பது நம்முடைய கர்ம வினைகளை பொருத்துதான் அமைகிறது. அப்படி நமக்கு பாதகமான சூழ்நிலையில் இருக்கும் பொழுது நமக்கு பல கஷ்டங்கள் ஏற்படும். அந்த கஷ்டங்களில் இருந்து வெளியே வருவதற்கும் நவகிரகங்களின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கும் நவகிரகங்களை எந்த நேரத்தில் சென்று வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக நாம் ஆலயங்களுக்கு செல்லும் பொழுது அந்த ஆலயத்தில் நவகிரகங்கள் இருந்தால் அந்த நவகிரகங்களை ஒன்பது முறை வலம் வருவோம். இப்படி வலம் வருவதன் மூலம் அவர்களின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று நம்மால் கூற முடியாது. நவகிரகங்களை வழிபட வேண்டிய நேரம் மற்றும் கிழமைக்கேற்ற பலன்கள் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்த சூட்சுவமான வழிப்பாட்டு முறையை நாம் மனதில் வைத்துக் கொண்டு வழிபடும் பொழுது நவகிரகங்களின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

- Advertisement -

வாரத்தில் இருக்கக்கூடிய ஏழு நாட்கள் ஏழு கிரகங்களை குறிக்கக்கூடிய நாட்களாக திகழ்கிறது. ஞாயிறு – சூரியன், திங்கள் – சந்திரன், செவ்வாய் – செவ்வாய் பகவான், புதன் – புதன் பகவான், வியாழன் – குரு, வெள்ளி – சுக்கிரன், சனி – சனி பகவான் என்று நாம் பிரிப்பது உண்டு. ஆனால் ராகு மற்றும் கேது இவர்களுக்கு என்று தனியாக கிழமைகள் இல்லை. அதனால் நாம் அன்றாடம் வரக்கூடிய ராகு காலத்தில் நவகிரகங்களை வழிபடும் பொழுது நமக்கு நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

அதோடு ஞாயிற்றுக்கிழமை வரக்கூடிய ராகு காலத்தில் சூரிய பகவானுக்கு விளக்கேற்றி வைத்து வழிபாடு மேற்கொள்ள வேண்டும். அதேபோல் திங்கட்கிழமை வரும் ராகு காலத்தில் சந்திர பகவானுக்கு விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். செவ்வாய்க்கிழமை வரக்கூடிய ராகு காலத்தில் செவ்வாய் பகவானுக்கு விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்ய வேண்டும். இப்படி ஏழு நாட்களும் ஏழு கிரகங்களை ராகு காலத்தில் சென்று விளக்கேற்றி வழிபட்டு வர நம்முடைய வாழ்க்கையில் நல்ல பல மாற்றங்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

அதுமட்டுமல்லாமல் பொதுவாக நாம் நவகிரகங்களை ஒன்பது முறை மட்டும்தான் வலம் வருவோம். அப்படி வலம் வராமல் 27 முறை வலம் வர வேண்டும். 27 என்பது நட்சத்திரங்களின் அடிப்படையில் வரக்கூடியது. ஒவ்வொரு கிரகமும் மூன்று நட்சத்திரங்களுக்கு அதிபதியாக திகழக்கூடியது என்று ஜோதிட ரீதியாக கூறப்படுகிறது. அதனால் நாம் நவகிரகங்களை 27 முறை வலம் வருவதன் மூலம் நமக்கு அனைத்து விதமான நல்ல பலன்களும் ஏற்படும். மேலும் அந்த 27 சுற்றுகளில் நம்முடைய நட்சத்திரத்திற்குரிய சுற்றுகளும் வரும் என்பதால் நமக்கு நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: அம்மன் கலச பூஜை வழிபாடு

இந்த சூட்சுவமான வழிபாட்டை உணர்ந்து நம்பிக்கையுடன் நவகிரகங்களை வழிபட்டால் நவகிரகங்களின் அருளால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும். ஒரு வாரம் தொடர்ந்து வழிபாடு செய்தாலே வாழ்வில் நல்ல மாற்றத்தை உணர முடியும்.

- Advertisement -