நவக்கிரகங்களால் ஏற்படும் துன்பங்கள் தீர தானம்

arisi thanam
- Advertisement -

ஒரு மனிதனின் வாழ்க்கையை நிர்ணயிக்கக் கூடியது அவர் ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரகங்களின் அமைப்பு. மேலும் அந்த கிரகங்களால் ஏற்படக்கூடிய நன்மை தீமைகளை அவர் கண்டிப்பாக அனுபவித்து தீர வேண்டும். இவ்வாறு நவக்கிரகங்களால் ஏற்படக்கூடிய துன்பங்கள் தீருவதற்கு வீட்டில் இருக்கக்கூடிய எந்த பொருளை தானமாக வழங்க வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

நவகிரகங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பெயர்ச்சி ஆவார்கள். அவ்வாறு பெயர்ச்சி ஆகும்பொழுது அதற்கேற்றவாறு ஒருவருடைய வாழ்க்கையில் நன்மையோ அல்லது தீமையோ ஏற்படும். அதிலும் குறிப்பாக நாம் கூறுவது ஜென்ம சனி, அஷ்டம சனி, ஏழரை சனி போன்ற சனிப்பெயர்ச்சியால் தான்.

- Advertisement -

இப்படி சனி பகவான் மட்டும் அல்லாமல் மீதம் இருக்கும் அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரும்பொழுது நமக்கு தீமை பலன்களை தருவார்கள். அப்படி அவர்களால் தரக்கூடிய துன்பங்களில் இருந்து நாம் மீள வேண்டும். ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு விதமான பரிகாரங்கள் இருக்கின்றன. ஆனால் நாம் இந்த பதிவில் அனைத்து கிரகங்களுக்கும் பொதுவாக செய்யக்கூடிய பரிகாரத்தை தான் பார்க்கப் போகிறோம்.

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவைப்படுவது நாம் சமைக்க உபயோகப்படுத்தும் அரிசி தான். முடிந்த அளவு பச்சரிசியை உபயோகப்படுத்தினால் அது சிறப்பாக இருக்கும். இந்த பரிகாரத்தை நாம் என்று வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம். பிரம்ம முகூர்த்த வேலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு நம் வீட்டு சமையல் அறைக்கு செல்ல வேண்டும். அங்கு இருக்கும் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து, அந்த பிள்ளையாருக்கு தூபம் காட்டி வழிபட வேண்டும்.

- Advertisement -

பிறகு நம் கையில் ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியை எடுத்து வைத்துக்கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். பிறகு நம்முடைய குலதெய்வம், இஷ்ட தெய்வம் போன்றோரை வழிபட்டு விட்டு என்றென்றைக்கும் தன தானியம் குறையாமல் நிறைவாக இருக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொண்டு அந்த அரிசியை வீட்டிற்கு வெளியே எறும்புகள் இருக்கும் இடத்திலோ அல்லது பறவைகள் வந்து அமரும் இடத்திலோ, தூவி விட வேண்டும்.

இவ்வாறு நாம் பறவைகளுக்கும், எறும்புகளுக்கும் தானம் செய்யும் பொழுது “எனக்கு உணவளித்தவர் நன்றாக இருக்க வேண்டும்” என்று வாழ்த்துவார்களாம். அவ்வாறு வாழ்த்தும் பொழுது நவகிரகங்களால் ஏற்படக்கூடிய துன்பங்கள் படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே: நாளை மகாளய பட்ச முதல் நாள் வாசலில் இப்படி தீபம் ஏற்றினால் தோஷம் சாபம் நீங்கி முன்னோர்களின் அருள் முழுவதுமாக கிடைக்கும்.

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்று கூறப்படுகிறது. மனிதர்களுக்கு உணவளிக்கும் அன்னதானத்தை செய்வதும் மற்ற பிற உயிரினங்களுக்கு உணவளிப்பதும் அன்னதானம் தான். இந்த எளிமையான தானத்தை நாம் தினமும் மேற்கொண்டு வந்தால் நம் வாழ்வில் வரக்கூடிய நவகிரகத்தால் ஏற்படக்கூடிய துன்பங்களில் இருந்து இந்த தானம் நம்மை காப்பாற்றும்.

- Advertisement -