நவகிரகங்களை வீட்டில் இருந்த படியே இப்படி மட்டும் வழிபாடு செய்து பாருங்கள். வாழ்க்கையில் நீங்கள் நினைத்தும் பார்த்திராத நல்ல மாற்றங்கள் எல்லாம் விரைவில் கைகூடும் அதிசயம் நடக்கும்.

nava-gragam-pray
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுவதற்கு காரணமாக இருப்பவர்கள் நவகிரகங்களே. இந்த நவகிரகங்களை நாம் முறையாக வழிபட்டால் நம் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் ஏற்படும் என்று நம் அனைவருக்கும் தெரியும். ஆன்மிகம் குறித்த இந்த பதிவில் வீட்டில் இருந்து கொண்டே மிகவும் எளிமையான முறையில் நவக்கிரகங்களை எவ்வாறு வழிபடுவது என்று தான் பார்க்க போகிறோம்.

ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு கிரகங்கள் அதிபதியாக விளங்குகின்றன. அதன் அடிப்படையில் நாம் வீட்டில் இருந்து கொண்டே அந்தந்த கிழமைகளில் நவகிரகங்களை வழிபடலாம். மேலும் நம் மனதில் நினைக்கும் எண்ணங்களுக்கு அதிக சக்திகள் உண்டு. எந்த கிழமையில் எந்த எண்ணங்களை நம் மனதில் வளர்த்துக் கொண்டால் நம் வாழ்க்கை மகிழ்ச்சி அடையும் என்று பார்ப்போம்.

- Advertisement -

எந்த நாளில் எந்த நவக்கிரகத்தை வழிபட வேண்டும்:
இந்த வேண்டுதல்களை தொடர்ந்து ஒரு வாரம் மேற்கொண்டாலேயே பல நல்ல மாற்றங்கள் நம் வாழ்வில் நிகழும். இதற்கு நாம் தினமும் பிரம்ம முகூர்த்த வேளையை தேர்வு செய்ய வேண்டும். நாம் வைக்கும் கோரிக்கைகள் நிறைவேறி விட்டதாக நம் மனதார எண்ண வேண்டும்.நல்ல பதவி, அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று சூரிய பகவானை பிரம்ம முகூர்த்த வேளையில் தியானம் செய்து, தனக்கு அந்த பதவி, அந்தஸ்து கிடைத்து விட்டதாக அன்று முழுவதும் எண்ண வேண்டும்.

வெளிநாடு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுபவர்களும், நல்ல பேச்சாற்றல் வேண்டும் என்று நினைப்பவர்களும் திங்கட்கிழமை அதிகாலையில் சந்திரனை நினைத்து தியானம் செய்து அன்று முழுவதும் தங்களுடைய ஆசைகள் நிறைவேறியதாக நினைக்க வேண்டும். மேலும் மாலை நேரத்தில் சந்திரனுக்காக இரண்டு தீபம் ஏற்றி வழிபட வேண்டும். சொந்தமாக வீடு கட்ட வேண்டும் என்று நினைப்பவர்களும் இடம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்களும் செவ்வாய்க்கிழமை அன்று அதிகாலையில் முருகப்பெருமானை மனதார நினைத்து தியானம் செய்ய வேண்டும். மேலும் அன்று செடிகளுக்கு நீர் ஊற்றுவதால் நம்முடைய எண்ணங்கள் நிறைவேறும். அன்று முழுவதும் சொந்தமாக நாம் வீடு வாங்கி விட்டதாகவே கருத வேண்டும்.

- Advertisement -

நன்றாக படிக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், செய்கின்ற காரியத்தில் வெற்றி பெற வேண்டும் என்று நினைப்பவர்களும் புதன் கிழமை அதிகாலையில் புதன் பகவானை நினைத்து தியானம் செய்ய வேண்டும். மேலும் பச்சை நிறத்தை தங்கள் மனதில் நினைத்துக் கொள்ள வேண்டும். அன்று மாணவர்களுக்கு புத்தக தானம் செய்ய வேண்டும். நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்களும், குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்களும் வியாழக்கிழமை அதிகாலையில் குரு பகவானை நினைத்து தியானம் செய்ய வேண்டும். மேலும் அன்றைய நாள் முழுவதும் தங்களுக்கு தங்கள் எண்ணம் நிறைவேறி விட்டதாகவே கருத வேண்டும். அன்றைய தினம் தெய்வ வழிபாடு மேற்கொள்வது மிகவும் சிறப்புக்குரியது. தங்களால் இயன்ற பழங்களை தெய்வங்களுக்கு நெய்வேத்தியமாக படைத்து, மாலை நேரத்தில் ஐந்து தீபங்கள் ஏற்றி வழிபட வேண்டும்.

திருமணம் கைகூட வேண்டும் என்று நினைப்பவர்களும், செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்று நினைப்பவர்களும் வெள்ளிக்கிழமை அதிகாலையில் லட்சுமி தேவியை நினைத்து தியானம் செய்ய வேண்டும். தங்களுக்கு பிடித்தமான இனிப்பு பொருட்களை நெய்வேத்தியமாக படைக்கலாம். மேலும் லட்சுமி தேவியை நினைத்து தண்ணீர் அருந்த வேண்டும். அன்றைய தினம் முழுவதும் தங்களுக்கு லட்சுமியின் பூரணமான கடாட்சம் கிடைத்ததாக கருத வேண்டும். பிரச்சினைகள் தீரவும், நோய்கள் அகலவும் சனிக்கிழமை காலையில் ஆஞ்சநேயரை நினைத்து தியானம் செய்ய வேண்டும். தங்களால் இயன்ற அளவு தான தர்மத்தை அன்றைய நாளில் மேற்கொள்ள வேண்டும். மேலும் தங்களுடைய பிரச்சனைகள் தீர்ந்ததாகவும் நோய்கள் அகன்றதாகவுமே அன்று முழுவதும் நினைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நீங்கள் நினைக்கும் கல்வி, உயர் பதவி இவையெல்லாம் உங்களுக்கு தானாக அமைய இந்த வழிபாடு வழி செய்யும். புதன் அருளை பெற்று படிப்பு, பதவி என வாழ்க்கையில் உயர எளிய வழிபாடு.

இவ்வாறு நாம் ஒவ்வொரு நாளும் நம்முடைய எண்ணங்கள் நிறைவேறியதாக முழு மனதோடு நினைத்து இந்த தெய்வங்களுக்கு கு நன்றி கூறுவதன் மூலம் நம்முடைய எண்ணங்கள் கண்டிப்பாக முறையில் நிறைவேறும். இந்த முறையில் நீங்களும் எளிமையாக பூஜை செய்து வழியில் அனைத்து நலனும் பெறலாம்.

- Advertisement -