நவராத்திரியின் நற்பலன்கள்! நவராத்திரியின் 10வது நாளான விஜயதசமி அன்று நம்முடைய வீட்டில் வழிபாட்டை எப்படி நிறைவு செய்வது?

amman3
- Advertisement -

நவராத்திரியை நிறைவு செய்யக்கூடிய பத்தாவது நாள் விஜயதசமி! மகிஷாசுரனை வதம் செய்வதற்காக அவதரித்த அம்பிகை ஒன்பது நாட்களும், கடும் தவத்தை மேற்கொண்டு, விடா முயற்சி செய்து வெற்றி கண்ட நாளைத்தான் விஜயதசமி என்று கொண்டாடுகின்றோம். விஜயம் என்றால் வெற்றி. அதாவது ஜெயம் என்ற வார்த்தையை குறிக்கின்றது.  மனிதர்களாக இருந்தாலும், இறைவனாக இருந்தாலும் எந்த ஒரு செயலிலும், எடுத்த எடுப்பிலேயே வெற்றி காணமுடியாது, முயற்சி என்ற ஒன்று எல்லோருக்கும் அவசியம் என்பதை வலியுறுத்துவதற்காக கொண்டாடப்படும் வழிபாடு என்று கூட இந்த நவராத்திரியை சொல்லலாம்.

chandika-devi-amman1

சரி, இந்த விஜயதசமி திருநாள் அன்று எல்லோரும் தாங்கள் தொழில் செய்யும் இடத்தை சுத்தப்படுத்தி, தொழிலுக்கு பயன்படுத்தும் கருவிகளையும் சுத்தப்படுத்தி, மஞ்சள் குங்குமம் இட்டு, சந்தனம் தெளித்து பூஜை செய்து, அந்த இறைவனுக்கும் நம் தொழிலுக்காக பயன்படுத்தும் இயந்திரங்கள், நோட்டுப் புத்தகங்கள், இப்படியாக அவரவர் எந்தெந்த தொழிலை செய்கின்றார்களோ, அந்த தொழிலுக்கு, நன்றியை செலுத்துவோம். இந்த விஜயதசமி திருநாளில் எப்படி நாம் செய்யும் வேலைக்கு நன்றியைச் செலுத்துகின்றோமோ, இதேபோல் நமக்கு குருவாக இருக்கும் ஆசானுக்கும் நன்றியை தெரிவிக்க வேண்டும், என்பதை மறந்து விடாதீர்கள்.

- Advertisement -

படிக்கும் குழந்தைகளாக இருந்தால், தன்னுடைய ஆசிரியருக்கு கட்டாயம் நன்றி தெரிவித்து, அவரது பாதங்களில் வணங்கி ஆசீர்வாதத்தை பெற வேண்டும். அல்லது வேறு ஏதேனும் கலைகளைக் கற்றுக் கொள்ளும் மாணவர்களாக இருந்தால், உங்களுக்கு அந்த கலையை சொல்லித்தரும் குருவின் பாதங்களில் விழுந்து, வணங்கி ஆசீர்வாதத்தை பெற வேண்டும்.

இதோடு சேர்த்து உங்களால் முடிந்த தக்ஷனையை அல்லது பரிசுப் பொருளையோ உங்கள் குருவுக்கு கட்டாயம் தரவேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. தட்சனை என்றால் அதிகளவில் பணம் செலவு செய்து தான் வாங்கி தர வேண்டும் என்பது கிடையாது. பாசத்தோடு நீங்கள் தர கூடிய சின்ன பொருளாக இருந்தாலும் அதற்கான மதிப்பு அளவில்லாதது.

- Advertisement -

இவ்வாறாக நம் வாழ்க்கையில் நம்முடைய முன்னேற்றத்திற்கு, ஊன்றுகோலாக, உதவியாக இருக்கும் எல்லாவற்றியிருக்கும் மனதார நன்றி தெரிவிக்கும் நாளாக இந்த விஜயதசமி சொல்லப்பட்டுள்ளது. உங்க வாழ்க்கையில், உங்களுக்கு உதவி செய்திருக்கும் மனிதர்களுக்கும், கடவுளுக்கும், குருவுக்கும், ஆயுதங்களுக்கும் நன்றி தெரிவிக்க மறக்காதீர்கள்.

இந்த விஜயதசமி திருநாளில் உங்கள் வீட்டு முறைப்படி பூஜை அறையில் படையலிட்டு, பிரசாதங்களை செய்து வைத்து, வழிபடலாம். இன்றைய தினம் அம்பாளை ‘அம்பிகை’ என்ற பெயர் கொண்டு வழிபட வேண்டும். உங்கள் வீட்டில் தயார்செய்யும் பிரசாதத்தோடு பால் பாயாசத்தையும், காராமணி சுண்டலையும் சேர்த்து அம்பிகைக்கு நிவேதனமாக படைப்பது சிறப்பானது.

- Advertisement -

blessing

புதியதாக நீங்கள் ஏதாவது ஒரு விஷயத்தை தொடங்குவதாக இருந்தால், அதை இந்த விஜயதசமி திருநாளில் தொடங்கலாம். விஜயதசமி அன்று தொடங்கும் எந்த ஒரு காரியமும் தோல்வி அடையாது. விடாமுயற்சியோடு உங்களுடைய வாழ்க்கையில் மென்மேலும் வெற்றியடைய, விஜயதசமி வழிபாட்டை நம்பிக்கையோடு செய்து பலன் அடைய வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து, நவராத்திரியின் நிறைவு நாளான இன்று அம்பாளை முழுமனதோடு பிரார்த்தனை செய்துகொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
நவராத்திரியின் நற்பலன்கள்! வேண்டிய வரங்களை பெற, நவராத்திரியின் 8 மற்றும் 9ஆம் நாள் வழிபாட்டை நம்முடைய வீட்டில் சுலபமாக எப்படி செய்வது?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -