உங்கள் சருமம் கரடு முரடாக இருக்கிறதா? கவலை வேண்டாம். இந்த இரண்டு பொருட்களை உபயோகப்படுத்தி உங்கள் சருமத்தை பட்டு போல் மிருதுவாக மாற்ற முடியும்.

rough and soft skin
- Advertisement -

அனைவரும் குழந்தையின் சருமம் போல் தங்கள் சருமம் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் வயதாக வயதாக முதிர்ச்சியின் காரணமாகவோ அல்லது நாம் உபயோகிக்கும் கெமிக்கல் சாதனங்களின் காரணமாகவோ அந்த மிருதுவானது குறைந்து சற்று கரடு முரடாக தோன்றும். அந்த நேரத்தில் வயதைக் காட்டிலும் முதிர்ச்சி அதிகமாக தெரியும். அப்படியான சூழலில் எந்த பொருட்களை உபயோகப்படுத்தி இதை சரி செய்யலாம் என்று தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

துணிகளில் பட்டு துணி மிகவும் உயர்ந்ததாக கருதப்படுகிறது. அதேபோல் தான் நம் முகமும் பட்டுப்போல் மிருதுவாக இருக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படுவோம். பருக்கள் இருந்தாலும் அல்லது மருக்கள் இருந்தாலும் சருமத்தில் குழிகள் ஏற்பட்டாலோ இந்த மிருதுவான சருமம் என்பது நமக்கு இருக்காது. அதை சரி செய்வது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்.

- Advertisement -

அனைத்து சாலை ஓரங்களிலும் ஆன்மீக குணம் மிகுந்த மரமாக கருதப்படுவது தான் வேப்பமரம். வேப்ப மரத்தின் கொழுந்தை நாம் பறித்து கொள்ள வேண்டும். அதை நன்றாக சுத்தம் செய்த பிறகு, மைய அரைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் நாம் சேர்க்கக்கூடிய மற்றொரு பொருள்தான் மஞ்சள். இதற்கு நாம் கஸ்தூரி மஞ்சளை பயன்படுத்தலாம். கஸ்தூரி மஞ்சள் இல்லாதவர்கள் விரலி மஞ்சளை பயன்படுத்தி கொள்ளலாம்.

முடிந்தவரை தூளாக பயன்படுத்தாமல் கிழங்கை ஊறவைத்து இந்த வேப்ப இலையுடன் சேர்த்து அரைப்பது மிகவும் நல்லது. இந்தக் கலவையை நாம் முகத்தில் நன்றாக தடவ வேண்டும். குறைந்தது பத்து நிமிடம் ஆவது முகத்தில் நாம் மசாஜ் செய்ய வேண்டும். இவை நன்றாக உலர்ந்த பிறகு குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். காட்டன் துண்டை பயன்படுத்தி முகத்தை ஈரம் இல்லாமல் ஒத்தி எடுக்க வேண்டும்.

- Advertisement -

வேப்பிலையை அனைத்து சருமத்தினரும் பயன்படுத்தலாம். மேலும் வேப்பிலையால் நம் முகத்தில் ஏற்படக்கூடிய கரும்புள்ளிகள், கருத்திட்டுகள், தேமல்கள், பருக்கள் போன்றவை சரியாகின்றன. மஞ்சளில் ஆன்டி மைக்ரோபியல். ஆன்டி இன்ஃப்ளமேட்டரி, ஆன்டி ஃபங்கல், ஆன்டி வைரல் ஆகியன இருக்கின்றன. முக துவாரங்களில் இருக்கக்கூடிய தூசுகளை சுத்தம் செய்வதால் பருக்கள் வராமல் தடுக்கிறது. மேலும் முகத்திற்கு உடனடி பொலிவை கொடுக்கிறது.

இதையும் படிக்கலாமே: காஃபி பவுடர் காபி போட மட்டும் இல்லை முகம் வெள்ளை வெளேரென வெள்ளைக்காரங்க மாதிரியும் மாற்றுமாம் தெரியுமா?

இந்த கலவையை நாம் தினமும் முகத்தில் பூசி கழுவி வர, நம் முகம் என்றென்றும் பதினாறு போல் இளமையுடனும், பொலிவுடன், மிருதுவாகவும் இருக்கும்.

- Advertisement -