ஜாதகத்தில் இருக்கக்கூடிய கண்டங்களை நீக்கி, நீண்ட ஆயுளை கொடுக்கக்கூடிய அதி அற்புதம் வாய்ந்த பரிகாரமும் மந்திரமும். இந்த மந்திரத்தை 1 முறை உச்சரிப்பவர்களுக்கு ஆயுசு 100!

hanuman-ramar-om

யாருக்குத்தான் வாழ்க்கையில், ஆரோக்கியமாக 100 ஆயுளுடன் வாழ்வதற்கு ஆசை இருக்காது. நம்முடைய ஆரோக்கியத்தில் எந்த ஒரு குறைபாடும் ஏற்படாமல் ஆரோக்கியமாக நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்கு ஆன்மீக ரீதியான சில குறிப்புகளையும், நீண்ட ஆயுளைக் கொடுக்கும் ஒரு அற்புதம் வாய்ந்த மந்திரத்தை பற்றியும்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். நீங்கள் நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்றாலும் உங்களுக்காக இந்த மந்திரத்தை உச்சரித்து, இந்த பரிகாரத்தை செய்யலாம். அப்படி இல்லை உங்களுடைய குழந்தைகள் உங்களுடைய கணவர் உங்களுடைய உறவினர்களில் யாராவது நீண்ட ஆயுளுடன் இருக்க வேண்டும் என்றாலும் அவர்களுக்காக பிரார்த்தனை செய்தும் இந்த பரிகாரத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

dead-death

சிலபேருக்கு ஜாதக கட்டத்திலேயே கண்டம் இருக்கும். ஆயுசு குறைவு என்று இருந்தாலும் அவர்களுக்காக இந்த பரிகாரத்தை செய்யலாம். நிச்சயமாக நீங்கள் யாருக்காக வேண்டி வழிபாடு செய்கிறார்களோ அவர்கள் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியத்தோடு இருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பரிகாரத்திற்க்கு முதலில் நமக்கு தேவையான பொருட்கள் தர்பை புல் 1, சித்தரத்தை 1 சிறிய துண்டு, சிறிய சதுர அளவில் இருக்கும் மஞ்சள் நிற துணி, மஞ்சள் நிற நூல் இந்த 4 பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு வெள்ளிக்கிழமை மாலை 6 மணி அளவில் இந்த பரிகாரத்தை செய்யலாம். 5 வாரம் வெள்ளிக்கிழமைகள் இந்த பரிகாரத்தை செய்தால் சிறப்பானது. முடியாதவர்கள் 5 பௌர்ணமி தினங்களில் இந்த பரிகாரத்தை செய்வதும் சிறப்பான ஒரு விஷயம் தான்.

பூஜை அறையில் அமர்ந்து, சிறிய அளவில் இருக்கக்கூடிய சித்தரத்தைக்கு இணையாக தர்பை புல்லை மடித்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த இரண்டு பொருட்களையும்,தயாராக இருக்கும் மஞ்சள் துணியில் வைத்து மடித்துக் கொள்ளுங்கள். சிறிய அளவில் இதை தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இந்த துணி பிரியாமல் இருக்க ஒரு மஞ்சள் நிற நூலை போட்டு கட்டிக் கொள்ளவேண்டும். பார்ப்பதற்கு இது கையில் கட்டும் கங்கன காப்பு போல இருக்கும்.

- Advertisement -

பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து விட்டு, குல தெய்வத்தையும் முன்னோர்களையும் மனதார வேண்டிக் கொள்ளுங்கள். யாருக்கு ஆயுள் பலம் தேவையோ அவர்களையும் ஒருமுறை மனதார நினைத்து கொள்ள வேண்டும். அதன் பின்பு பூஜை அறையில் அமர்ந்து தயாராக வைத்திருக்கும் முடிச்சை உள்ளங்கைகளில் வைத்துக் கொண்டு ‘ஓம் சிரஞ்சீவினே நமஹ!’ என்ற மந்திரத்தை 108 முறை உச்சரித்து, ஹனுமனை மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

tharpai-1

மந்திரத்தை உச்சரித்து விட்டு யாருக்கு ஆயுள் பலம் வேண்டும் அவர்களுடைய பெயரை உச்சரித்து வரத்தை வேண்டிக்கொள்ளுங்கள். வழிபாட்டை நிறைவு செய்து உங்கள் கையில் இருக்கும் முடிச்சை பூஜை அறையில் சுவாமியின் பாதங்களுக்கு அடியில் வைத்து விடுங்கள்.

kappu

அதன் பின்பும் தூப தீப ஆராதனை காட்டி பூஜை முடிந்து, இந்த முடிச்சை எடுத்து யாருக்கு ஆயுள் பலம் அதிகமாக வேண்டும் என்று நினைத்து வேண்டிக் கொண்டீர்களோ அவர்களுடைய கையில் கட்டி விட வேண்டும். உங்களுக்காக வேண்டுதல் வைத்திருந்தால் நீங்களே இந்த முடிச்சை உங்கள் கையில் கட்டிக் கொள்ளலாம்.

poojai

இந்த பரிகாரத்தை செய்யக்கூடிய 5 வாரங்களிலும் புதியதாக தான் தர்பை புல்லையும், சித்திரத்தையும் வாங்கி புதிய மஞ்சள் துணியில் வைத்து முடிச்சு போட்டு கையில் கட்டிக் கொள்ளவேண்டும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். இந்த காப்பு, உங்கள் கையில் அன்றைய நாள் மட்டும், பூஜை செய்த அந்த ஒரு நாள் இரவு மட்டும் கையில் கட்டிவைத்து இருந்தால் போதும்.

poojai

மறுநாள் காலை கழட்டி உங்கள் வீட்டு பூஜை அறையிலேயே ஒரு சிறிய டப்பாவில் போட்டு சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். 5 வாரங்கள் உங்களது பூஜையை நிறைவு செய்த பின்பு, உள்ளே இருக்கக்கூடிய தருப்பைப் புல்லையும் சித்தரத்தையை எடுத்து பொடி செய்து ஒரு டப்பாவில் போட்டு வைத்துக் கொள்ளலாம்.

இந்தப் பொடியை குளிக்கும் தண்ணீரில் கலந்து குளித்து கொள்ளலாம். அப்படி இல்லை என்றால், சுத்தமான தண்ணீரில் கலந்து வீடு முழுவதும் தெளித்து விடலாம். வீட்டை பிடித்த தோஷம் நீங்கும் உங்களை பிடித்த தோஷம் நீங்கும். தேவையற்ற எதிர்மறை ஆற்றலினால் உள்ள தொந்தரவுகள் முற்றிலுமாக அகலும். தொடர்ந்து ஐந்து வாரங்கள் இந்த பரிகாரத்தை செய்தால், நிச்சயமாக பேராபத்தில் இருந்தும், வரக்கூடிய கண்டத்தில் இருந்தும் தப்பித்துக்கொள்ளலாம். ஆரோக்கியமான நீண்ட ஆயுள் பெறுவது மட்டும் உறுதி, நம்பிக்கையோடு முயற்சி செய்து பாருங்கள். நல்லதே நடக்கும்.