நெடுநெடுவென முடி நீளமாக அசுரவேகத்தில் வளர 2 நெல்லிக்காய் இருந்தால் போதும். 30 நாட்களில் முடி வளர்வதை நீங்கள் நினைத்தாலும் கட்டுப்படுத்த முடியாது.

hair7
- Advertisement -

வேர் பகுதியில் இருந்து முடி உதிர்வது குறைந்து விட்டாலே போதும். நம்முடைய முடி சீக்கிரத்தில் வளர தொடங்கிவிடும். வேர் பகுதியிலிருந்து முடி உதிர்வை நிறுத்துவதற்கு ஒரு சூப்பரான ஹேர் பேக் தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். இந்த ஹேர் பேக்கை வாரத்தில் 2 நாட்கள் போடுங்கள். ஒரே மாதம், 30 நாட்களில் உங்களுடைய முடி உதிர்வில் நல்ல வித்தியாசம் தெரியும். அதேசமயம் 30 நாட்களில் உங்களுடைய முடியின் வளர்ச்சியில் வித்தியாசம் தெரியும். சரி வாங்க நேரத்தைக் கடத்தாமல் அந்த சுலபமான ஹேர் பேக்கை எப்படி தயார் செய்வது என்று பார்த்து விடுவோம்.

இந்த ஹேர் பேக் தயார் செய்ய நமக்கு தேவையான பொருட்கள் 3. நெல்லிக்காய், வெந்தயம், கருவேப்பிலை. 2 லிருந்து 3 நெல்லிக்காய்களை உள்ளே இருக்கும் விதைகளை நீக்கி வெட்டி வைத்துக் கொள்ளுங்கள். பெரிய நெல்லிக்காய். காட்டு நெல்லிக்காய் என்று சொல்வார்கள் அல்லவா. அதை தான் பயன்படுத்த வேண்டும். வெந்தயம் 2 ஸ்பூன், முந்தைய நாள் இரவே தண்ணீரில் போட்டு ஊற வைத்துக் கொள்ளுங்கள். 1 கைப்பிடி அளவு கறிவேப்பிலையை தண்ணீரில் போட்டு அலசி அதையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

மிக்ஸி ஜாரை எடுத்துக்கோங்க. வெட்டி வைத்திருக்கும் நெல்லிக்காய், ஊற வைத்த வெந்தயத்தை தண்ணீரோடு சேர்த்துக் கொள்ளவும். கருவேப்பிலையையும் போட்டு தண்ணீர் எதுவும் ஊற்ற வேண்டாம். அப்படியே மிக்ஸி ஜாரில் விழுது போல மைய அரைத்துக் கொள்ள வேண்டும். (வெந்தயம் ஊற வைத்த தண்ணீரே போதுமானது. தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.)

மிக்ஸியில் அரைத்த அந்த விழுதை அப்படியே ஒரு காட்டன் துணியில் ஊற்றி வடிகட்டிக் கொள்ள வேண்டும். காட்டன் துணியில் இந்த பேக்கை ஊற்றி அப்படியே உங்கள் கையை கொண்டு பிழியும் போது நமக்கு ஹேர் பேக் எந்த திப்பியும் இல்லாமல் சூப்பராக ஸ்மூத்தாக நைசாக கிடைக்கும். (இந்த ஹேர் பேக்கை அப்படியே வடிகட்டாமலும் பயன்படுத்தலாம். இருப்பினும் தலையை அலசும்போது திப்பி திப்பியாக ஒட்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.)

- Advertisement -

சரி, இப்போது ஹேர் பேக் தயார். இதை எப்படி தலையில் அப்ளை செய்வது. உங்களுடைய தலையில் முதலில் நன்றாக தேங்காய் எண்ணெய் வைத்து, சிக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். அதன் பின்பு முதலில் இந்த ஹேர் பேக்கை  உங்களுடைய முடியின் வேர் பகுதிகளில் படும்படி நன்றாக தடவி விடுங்கள். அதன் பின்பு மேல் பக்கத்திலிருந்து கீழ் பக்கம் வரை கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஹேர் பேக்கை எல்லா முடியிலும் படும்படி தடவி அப்படியே தலையின் வேர் பகுதிகளில் 5 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். மசாஜ் செய்யும்போது வேர்ப்பகுதியில் இந்த ஹேர் பேக் நன்றாக இறங்கத் தொடங்கும். ஹேர் பேக் போட்டு முடித்ததும் முடியை கொண்டை கட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

20 நிமிடத்தில் இருந்து 30 நிமிடம் வரை இந்த ஹேர்பர்ட் உங்களுடைய தலையில் நன்றாக ஊறட்டும். அதன் பின்பு ஷாம்பூ அல்லது சீயக்காய் போட்டு தலை முடியை அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பிறகு தலை முடியை உலர வைத்து விட்டு, சீப்பை வைத்து சிக்கு எடுத்தால் முதல் முறையிலேயே உங்களுடைய தலைமுடி உதிர்வு குறைவதை உங்களால் காண முடியும். இந்த பேக்கை மிஸ் பண்ணாதீங்க. ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -