வீட்டில நெல்லிக்காய் இருக்கா? யாருமே அதை சாப்பிட மாட்டேங்கிறாங்க? அப்போ இப்படி துவையல் செஞ்சு கொடுங்க. சட்டுனு துவையல் காலி ஆயிடும்.

nellikai thuvaiyal
- Advertisement -

உணவே மருந்து என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள் பழங்காலத்தில் ஆரோக்கியமான உணவுகளை உண்டு, மருந்துகள் எதையும் எடுத்துக் கொள்ளாமல், நலமுடன் வாழ்ந்து வந்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் ஆரோக்கியமான உணவுகள் எதையுமே எடுக்காமல், கடைகளில் விற்கும் துரித உணவுகளை சாப்பிட்டு மருந்தையே உணவாக உண்டு வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இந்த நிலையை மாற்றுவதற்கு குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரியாமலேயே ஆரோக்கியமான உணவுகளை நம் சமையலில் நாம் சேர்த்து கொடுப்பதன் மூலம் அவர்களின் ஆரோக்கியம் மேம்படும். அந்த வகையில் இன்று நாம் நெல்லிக்காயை வைத்து எப்படி துவையல் செய்வது என்றுதான் சமையல் குறிப்பு குறித்த பகுதியில் பார்க்கப் போகிறோம்.

ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படுவது தான் நெல்லிக்காய். தினம் ஒரு நெல்லிக்காயை நாம் உண்டு வந்தால் நம் உடலில் நோய்கள் என்பதே வராது என்று கூறப்படுகிறது. இருப்பினும் அதனுடைய துவர்ப்பு சுவையால் பலரும் அதை விரும்பி உண்ணுவது இல்லை. அப்படிப்பட்ட நெல்லிக்காயை வைத்து துவையல் எப்படி செய்வது என்று பார்ப்போம்.

- Advertisement -

தேவையான பொருட்கள்

பெரிய நெல்லிக்காய் – 2, கடலை எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், உளுந்து – 4 டேபிள் ஸ்பூன், மிளகு – 1/2 டேபிள்ஸ்பூன், சீரகம் – 1/2 டேபிள் ஸ்பூன், வர மிளகாய் – 4, இஞ்சி – 1 இன்ச், பெருங்காயம் – 1/4 ஸ்பூன், வெங்காயம் – 1, பச்சை மிளகாய் – 3, தேங்காய் – 1/4 மூடி, உப்பு – தேவையான அளவு.

செய்முறை

முதலில் பெரிய நெல்லிக்காயை நன்றாக கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இதே போல் தேங்காய் மற்றும் இஞ்சியை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். இப்பொழுது அடுப்பில் ஒரு கடாயை வைக்க வேண்டும். கடாய் நன்றாக காய்ந்ததும், அதில் எண்ணெயை ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் அதில் உளுந்தை போட வேண்டும். உளுந்து நேசாக சிவக்கும் பொழுது அதில் மிளகையும், சீரகத்தையும் போட வேண்டும்.

- Advertisement -

சீரகம் பொரிந்த பிறகு அதில் வரமிளகாயமும், இஞ்சியையும் போட வேண்டும். பிறகு அதில் நெல்லிக்காயை சேர்த்து அதனுடன் பெருங்காயத் தூளையும் சேர்த்து வதக்க வேண்டும். நெல்லிக்காய் வதங்கிய பிறகு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் இவற்றை சேர்க்க வேண்டும். இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து அடுப்பை ஆப் செய்து விட்டு ஆறவிட வேண்டும்.

நன்றாக ஆறிய பிறகு மிக்ஸி ஜாரில் இவை அனைத்தையும் சேர்த்து சிறிதளவு மட்டுமே தண்ணீர் ஊற்றி துவையல் பதத்திற்கு வரும் அளவிற்கு நன்றாக அரைக்க வேண்டும். பிறகு இதை ஒரு கிண்ணத்தில் மாற்றி விடலாம். தேவைப்பட்டால் இதில் கடுகு உளுந்து கருவேப்பிலை தாளித்து சேர்த்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் நெல்லிக்காய் துவையல் தயாராகிவிட்டது.

- Advertisement -

இந்த துவையலை நாம் சாதத்திற்கு பயன்படுத்தலாம். மேலும் இட்லி, தோசை, சப்பாத்தி என்று அனைத்து டிபன் வகைகளுக்கும் சைடு டிஷ் ஆகவும் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: சப்பாத்தி பூரி இதுக்கெல்லாம் எப்பவும் போல இல்லாம கொஞ்சம் வித்தியாசமா ரொம்பவே சிம்பிளான இந்த உருளைக்கிழங்கு பால் கறியை ஒரு முறை செஞ்சி பாருங்க டேஸ்ட் வேற லெவல்ல இருக்கும்.

பல சத்துக்கள் நிறைந்த இந்த நெல்லிக்காயை எப்படியாவது உணவில் ஏதாவது ஒரு வகையில் சேர்த்து அனைவரின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.

- Advertisement -