என் நெஞ்சில் நீயோ பனி துளி – காதல் கவிதை

Love kavithai

நிலவொன்று நடந்தது சுவடுகள்
நிழலாக பதிந்தது மனதிலே..
மழை ஒன்று சாரல் துளியாய்
சில் என்று நனைக்குது மனதிலே ..

Kadhal kavithai image
Kadhal kavithai image

விழியிலே தெரிகிறாள்
யார் அந்த தாமரை…
செவியில் நுழைகிறாள்
யார் இந்த கொலுசொலி..

அடி காதலியே, என் கண்மணியே
உன் நினைவே எந்தன் உயிர் துளி..
என் நெஞ்சில் நீயோ பனி துளி
கோடி சூரியன் வந்தாலும்
என் உயிர் கொடுத்து
நான் உனை காப்பேன்..
மாலை வேலையில் உன் மடியில்
மழலை குழந்தையாய் நான் ஆவேன்..

Love kavithai image
Love kavithai image

இதையும் படிக்கலாமே:
தொட்டு பேசும் தென்றலே – காதல் கவிதை

பலருக்கு முதல் காதல் தோல்வியில் முடியலாம். ஆனால் அதற்காக காதலிக்காமல் இருப்பது கிடையாது. முதல் காதலின் சுவடுகள் நெஞ்சத்தில் நிழலாடினாலும் இன்னொருகாதல், மனதிற்கு மருந்து போட்டு காதலை புதுப்பிக்கும். காதல் என்றும் அழிவதில்லை. காதலர்கள் என்றும் வீழ்வதில்லை. உலகெங்கும் உள்ள காதலர்களுக்கு இந்த கவிதை சமர்ப்பணம்.

இது போன்ற மேலும் பல காதல் கவிதைகள், நெஞ்சை கொஞ்சும் அனுபவ கவிதைகள் என பல அற்புதமான கவிதை தொகுப்புகளை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.