தொட்டு பேசும் தென்றலே – காதல் கவிதை

Love kavithai

தொட்டு பேசும் தென்றலே
தூரம் தள்ளி போகாதே..
இமைகள் மூடிய மறுகணமே
என் இரவின் நிலவு நீ தானே..

kadhal kavithai image
kadhal kavithai image

மைவிழி பைங்கிளியே என்
மனதின் கவி ஊற்றே..
முற்கள் அற்ற ரோஜாவே
என் முகம் பார்த்து பேசும்
முழு நிலவே…

பாலைவனத்தின் சோலை மலரே
நான் பார்த்த முதல் அழகியே..
என் ஜீவன் முழுக்க நீ தானே
உனை நினைத்து வாடுகிறேன்
நான் தானே..

Love kavithai image
Love kavithai image

இதையும் படிக்கலாமே:
விழியிலே மலர்ந்து உயிரிலே கலந்த – காதல் கவிதை

காதலிக்கும் சமயத்தில் காதலர்கள் இருவருக்குள்ளும் சின்ன சின்ன ஊடல்கள் இருக்கும். சில நேரங்களில் இருவரும் காரணம் இன்றி சண்டைபோட்டு சில மணி நேரங்கள் பேசாமல் தங்கள் மனதை தாங்களே சிறைப்படுத்துவர். அப்போது இருவரும் ஒருவரை ஒருவர் நினைத்து தவிப்பர். அப்படி பட்டவர்களுக்கு இந்த கவிதை சமர்ப்பணம்.

இது போன்ற மேலும் பல காதல் கவிதைகள், காதல் சோக கவிதைகள் என பல கவிதைகளை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.