5 நிமிடத்தில் புதுசாக வாங்கிய தோசை கல்லை பழகுவது எப்படி? இந்த டிப்ஸை ட்ரை பண்ணா, புது தோசைக்கல்லை வாங்கியதும் மொறு மொறு தோசை சுட்டு சாப்பிடலாம்.

dosa-kal
- Advertisement -

பொதுவாகவே தோசைக்கல்லை புதியதாக வாங்கினால் அந்த கல் பழகும் வரை அதில் தோசை வார்ப்பது ரொம்ப ரொம்ப கஷ்டம். சில பேர் 5 லிருந்து 6 நாட்கள் வரை அந்த தோசை கல்லின் மேலே அரிசி வடித்த கஞ்சி தண்ணீரை ஊற்றி ஊற வைப்பார்கள். அதன் பின்பு நல்லெண்ணெய் தடவி வைப்பார்கள். ஒரு வாரம் ஆனாலும் தோசை வந்த பாடாக இருக்காது. இனி புதிய இந்தோனிய தோசைகள் வாங்கினாலும் கவலை இல்லை‌. இரும்பு தோசைக்கல் வாங்கினாலும் கவலை இல்லை. இந்த முறையில் பழகிக் கொள்ளலாம். வெறும் 5 நிமிடத்தில்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து முதலில் நன்றாக சூடு செய்து கொள்ளுங்கள். அதன் பின்பு 2 ஸ்பூன் சமையல் எண்ணெயை தோசைக்கல்லில் ஊற்றி விடுங்கள். 1 டேபிள்ஸ்பூன் கல் உப்பை அந்த எண்ணெயில் போட்டு தோசை கரண்டியை வைத்து, கல் உப்பை தோசைக்கல்லில் எல்லா இடங்களிலும் படும்படி தள்ளித்தள்ளி வறுத்து விடவேண்டும். 5 நிமிடம் கழித்து கல் உப்பை மட்டும் எண்ணெயிலிருந்து வடித்து எடுத்துவிடுங்கள்.

- Advertisement -

ஒரு சிறிய துண்டு வெங்காயத்தை எடுத்துக்கொள்ளுங்கள். தோசைக்கல்லில் மீதமிருக்கும் எண்ணெயிலேயே அந்த வெங்காயத்தை நன்றாக தேய்க்க வேண்டும். (தேவைப்பட்டால் இன்னும் ஒரு ஸ்பூன் எண்ணெய் கூட ஊற்றிக் கொள்ளுங்கள்.) வெங்காயம் வெட்டப்பட்ட பகுதி தோசை கல்லில் நன்றாக தேய்க்க வேண்டும். மீண்டும் அதே எண்ணெயில் 2 ஸ்பூன் கல் உப்பைப் போட்டு 5 நிமிடம் போல தோசை கல்லில் நன்றாக எல்லா இடங்களிலும் படும்படி வறுத்து விட்டு, அந்த உப்பையும் தூக்கி போட்டு விடுங்கள்.

மீண்டும் வெங்காயம் தேய்க்க வேண்டும். அதன் பின்பு தோசைக் கல்லில் இருக்கும் எண்ணெயில் மொத்தமாக ஒரு கல் தோசை ஊற்றுங்கள். தோசை ஓரளவுக்கு முதல்முறை ஒட்டாமல் வந்துவிடும். அதன்பின்பு மொத்தமாக சுட்ட அந்த கல் தோசையை நம்மால் சாப்பிட முடியாது உப்புக்கரிக்க தான் செய்யும். அதை தூக்கி போட்டு விடுங்கள்.

- Advertisement -

அதன் பின்பு தோசைக்கல்லில் வெங்காயத்தை வைத்து மீண்டும் நன்றாக தேய்த்துக் கொடுங்கள். தோசைக்கல் முழுவதும் இந்த வெங்காயம் நன்றாக பட வேண்டும். அதன் பின்பு எப்போதும் போல மெல்லிசாக தோசை வார்த்துப் பாருங்கள். தோசை ஒட்டாமல் சூப்பராக வரும். (கல் உப்பை எண்ணெயில் போட்டு வறுக்கும் போதும், அந்த கல்லுப்பு தோசை கல்லின் நடுப் பக்கத்தில் மட்டும் வறுக்கக் கூடாது. தோசைக்கல்லில் ஓரங்கள் எல்லாம் படும்படி வறுத்து எடுக்க வேண்டும். அப்போதுதான் தோசை கல்லின் ஓரங்களில் கூட தோசை ஒட்டாமல் அழகாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.)

ஒருமுறை கல்லுப்பு வறக்கணும். ஒரு முறை வெங்காயம் தேய்க்கணும். இதேபோல இரண்டு முறை செய்ய வேண்டும். ஊற்றக்கூடிய எண்ணெயை கொஞ்சம் தாராளமாக ஊற்ற வேண்டும். ஒருவேளை உங்களுக்கு அப்படியும் தோசை நன்றாக வரவில்லை. தோசைக்கல்லில் மாவு ஒட்டிக் கொண்டால், மீண்டும் ஒருமுறை இதே போல செய்யுங்கள். கட்டாயம் தோசை ஒட்டாமல் வரும். உங்க வீட்டில தோசைக்கல் வாங்குனா இந்த மெத்தெட் ஒரு வாட்டி ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -