New Year greetings Tamil : 2020 புத்தாண்டு வாழ்த்துக்கள், sms, messages

new year
- Advertisement -

புத்தாண்டை வெறும் அடுத்த ஆண்டின் துவங்கமாக எண்ணி நாம் கடந்து போக முடியாது. அனைவரும் கூடி, மகிழ்ந்து, அன்பை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான நாளே புத்தாண்டு. இது உலகம் முழுக்க கொண்டாப்படும் ஒரு நாளாகும். நள்ளிரவு பனிரெண்டு மணிமுதல் நமது கைப்பேசிகளில் வாழ்த்து செய்திகள் நிறையும். அதை படித்து நமது மனமும் நிறையும்.புத்தாண்டில் ஒவ்வொருவருக்கும் ஒரு திட்டம் இருக்கும். அதே போல சில தீயவைகளை இனியும் தொடரக்கூடாது என்றொரு எண்ணமும் இருக்கும். இப்படி பலரது மனதில் பல எண்ணங்கள் புத்தாண்டின் முதல் நாளில் ஓடும். இந்த பதிவில் நாம் புத்தாண்டு வாழ்த்துக்கள் பலவற்றை பார்ப்போம் வாருங்கள்.

New year greeting wishes

அத்தனை கனவுகளும் நினைவாக
சொந்தங்கள் அனைத்தும் கூடி வர
என்னா உயரத்தை ஏறி பிடிக்க
பகைகள் நீங்கி நட்பு மலர
துவங்கட்டும் இந்த புத்தாண்டு.

- Advertisement -

ஏழ்மை காற்றில் இன்றே பறந்திட,
பாழ்நிலம் முழுவதும் பசுமை அடைந்திட
சபலங்கள் நீங்கி மானுடர் வாழ்த்திட,
சங்கடம் அனைத்தும் சாம்பலாய் எறிந்திட
பூமியின் வயதை ஒன்று கூட்டிட வாராய் புத்தாண்டே

New year greeting wishes

செல்வம் பெறுக, வறுமை நீங்க ,
சோகம் மறைந்து வளமை பிறக்க,
அறிவும், துணிவும் அனைவரும் பெற்றிட
நல்லோர் பெருகி உலகம் செழித்திட
நடு இரவில் உதித்தெழுவாய் புத்தாண்டே…

- Advertisement -

New year greeting wishes

புதிய எண்ணங்கள்,
புதிய முயற்சிகள்,
புதிய உறவுகள்,
புதிய உணர்வுகள்,
புதிய நம்பிக்கை,
என என அனைத்தும் புதிதாய்
பழைய சொந்தங்களோடு
மலரட்டும் இந்த புத்தாண்டு..

ஒவ்வொன்றாய் கிழிக்கப்பட்டு
ஒரே ஒரு காகிதத்தோடு இன்று
ஓரமாய் தொங்கிக்கொண்டிருந்தது
பழைய நாள்காட்டி..
நம் வாழ்வில் வேகமாய்
ஓடிய நாட்களுக்கு இன்று
அதுவே சாட்சி..

- Advertisement -

New year greeting wishes

மதங்கள் அற்ற ஒரு மாதம் பிறக்கட்டும்
சாதிகள் அற்ற ஒரு சகாப்தம் பிறக்கட்டும்
பெண்ணையும் ஆணையும் சமமாய் போற்றும்
சரித்திர ஆண்டாய் இந்த புத்தாண்டு பிறக்கட்டும்

New year greeting wishes

இனி வரும் நாட்கள் எல்லாம்
உனக்கான நாட்களே
அதை அற்புதமாக மாற்றுவதும்
அகோரமாக மாற்றுவதும்
உன் கையிலே உள்ளது.
மலரட்டும் புத்தாண்டு
செழிக்கட்டும் உன் வாழ்வு..

New year greeting wishes

நல்லவற்றை நினைப்போம்,
உதவிகள் பல செய்வோம்,
மனித நேயத்தை காப்போம்,
பொல்லாத காலம் எல்லாம்
போனது என்று எண்ணி
இனி வரும் புத்தாண்டை
இனிமையாய் கழிப்போம்.

New year greeting wishes

உலகம் முழுக்க இந்த புத்தாண்டை
உன்னதமாக கொண்டாடுகிறது
ஆனால் நானோ,
என் சொந்தங்களை பிரிந்து
சோகத்தில் வாடுகிறேன்
வேறொரு நாட்டில்.

New year greeting wishes

English Overview:
Here we have 2020 new year greetings, 2020 new year wishes, new year sms, happy new year message and 2020 happy new year kavithai in Tamil, happy New year quotes in Tamil.

- Advertisement -