வீட்டில் நீங்கள் செய்யும் இந்த ஒரு தவறு மன்னிக்க முடியாத தவறாக சாஸ்திரம் கூறுகிறது! இந்த தவறை செஞ்சா தரித்திரம் தாண்டவம் ஆடுமாம் தெரியுமா?

vasal-kathavu-kuladheivam
- Advertisement -

நாம் வீட்டில் செய்யும் ஒவ்வொரு விஷயமும், நம்முடைய வாழ்க்கையுடன் ஒன்றி இருக்கிறது. நாம் செய்யும் செயலுக்கும், ஆன்மீகத்திற்கும் நிறையவே தொடர்பு உண்டு. நல்லதை செய்தால் புண்ணியமும், கெட்டவை செய்தால் பாவமும் வந்து சேர்வது போல, வீட்டில் நாம் அறியாமல் தெரியாமல் செய்யும் இந்த செயல்களும் தரித்திரத்தை ஏற்படுத்தி விடுகிறது. அந்த வகையில் இந்த ஒரு செயலும் மன்னிக்கவே முடியாததாக சாஸ்திரங்கள் குறிப்பிடுகிறது? அப்படியான ஒரு தவறு என்ன? ஏன் அதை செய்யக் கூடாது? என்பது போன்ற சுவாரஸ்ய ஆன்மீக தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

நிலைவாசல் படி என்பது குலதெய்வம் குடியிருக்கும் ஒரு கோவிலாகவே கருதப்படுவது வழக்கம். இதனால் தான் நிலை வாசல் படி முதன் முதலில் அமைக்கப்படும் பொழுது, அதற்கென தனி பூஜை முறைகள் கையாளப்படுகின்றன. படி பூஜை செய்த பின்பே வாசல் படி அமைக்கப்படுகிறது. குலதெய்வம் வாசம் செய்யும் இந்த வாசல் படியை எப்பொழுதும் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும், அதற்கு மஞ்சள், குங்குமம் இட்டு வழிபட வேண்டும் என்றும் இதனால் தான் கூறப்பட்டு வருகிறது.

- Advertisement -

மேலும் குலதெய்வம் வாசம் செய்யும் நிலை வாசல் கதவை கீச்சிடும்படி வைக்க கூடாது. அதாவது சத்தம் போடக்கூடாது. குழந்தைகள் தாழ்பாளை ஆட்டி ஆட்டி விளையாடுவது உண்டு அல்லது அதன் மீது ஏறி விளையாடுவதும் உண்டு, இது போன்ற செயல்கள் செய்யக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியதன் பின்னணியும் இது தான்! தாழ்பாளை ஆட்டுவது, விளையாடுவது போன்ற செயல்களை செய்வது குலதெய்வத்தை அவமதிப்பது போன்றதாகும்.

இத்தகைய நிலை வாசல் படியை நீங்கள் ஒவ்வொரு முறை தாண்டும் பொழுதும் அதற்கு உரிய மரியாதை செலுத்த வேண்டும் என்று கூறப்படுகிறது. சிலர் வீட்டில் இருப்பவர்கள் கோவணம் கூட அணியாமல் இருக்க வாய்ப்புகள் உண்டு. இந்த மாதிரி கோவணம் அணியாத சமயங்களில் நிலை வாசல் படியை தாண்ட கூடாது என்கிற ஒரு சாஸ்திரம் உண்டு. உடலில் உள்ளாடை எதுவும் இல்லாமல் நிலை வாசல் படியை தாண்டினால் அங்கு தரித்திரம் தாண்டவம் ஆடுவது உறுதி என்று நம்பப்பட்டு வருகிறது. இதனால் இந்த தவறை செய்பவர்களுக்கு மன்னிக்கவே முடியாத குற்றமாக கருதி அவர்களுக்கு பல்வேறு விதமான இன்னல்களும், பிரச்சனைகளும் வரும் என்பது ஐதீகம்.

- Advertisement -

எந்த ஒரு சூழ்நிலையிலும், 9 வயதிற்கு மேல் எந்த வயதினராக இருந்தாலும் உங்களுடைய வீட்டில் நீங்கள் நிலைப்படியை தாண்டும் போது இந்த ஒரு தவறான செயலை செய்யவே கூடாது என்று எச்சரிக்கிறது ஆன்மீகம். அது போல நிலை வாசல் உடைந்து இருக்கக் கூடாது. விரிசல்கள், கீறல்கள் அல்லது உடைசல்கள் இருந்தால் அதை உடனுக்குடன் சரி செய்து விட வேண்டும். இதனால் குடும்பத்தில் எப்பொழுதும் குலதெய்வ வாசம் என்பது வீசும். இதனால் நிம்மதியும், மகிழ்ச்சியும் எப்பொழுதும் நீடிக்கும்.

இதையும் படிக்கலாமே:
சண்டிகேஸ்வரருக்கு இப்படி செஞ்சா ஏழேழு தலைமுறைக்கும் வறுமையே வராதாம் தெரியுமா? இது தெரிஞ்சா இனி சண்டிகேஸ்வரரிடம் இப்படி தெரியாம கூட செய்யவே மாட்டீங்க!

அப்படி அல்லாமல் நிலை வாசல் படியில் நீங்கள் செய்யும் சிறு சிறு தவறுகளும் உங்களுடைய வாழ்க்கையில் பெரும் பிரச்சனைகளை உண்டு பண்ணி கொண்டிருக்கும் என்கிறது மறைமுகமான ஆன்மீகம். இவ்வளவு விஷயங்களை உள்ளடக்கியுள்ள நிலைவாசல் படியில் தினமும் அல்லது வாரம் ஒரு முறை வெள்ளிக் கிழமையில் இருபுறமும் விளக்கு ஏற்றி வழிபட்டு வாருங்கள், சகல நன்மைகளும், 16 செல்வங்களும் உங்களை வந்தடையும்.

- Advertisement -