இந்த கயிறை நிலை வாசல்படியில் இப்படி கட்டினால், நம் வீட்டு மகாலட்சுமி நம் நில வாசல்படியை தாண்டி வெளியே போகவே மாட்டாள்.

nilai-vasal
- Advertisement -

நம்ப வீட்டு மகாலட்சுமியை நம் வீட்டை விட்டு வெளியே செல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டியது நம்முடைய கடமை. இதற்காக நம் வீட்டில் செய்யக்கூடிய பூஜை புனஸ்காரங்களை சரியான முறையில் செய்ய வேண்டும். நிலை வாசல் படியை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வாரத்தில் இரண்டு முறையாவது வாசல் படியை பன்னீர் கொண்டு துடைத்து மஞ்சள் குங்குமப் பொட்டு வைத்து வாசனை நிறைந்த பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். குறிப்பாக மாவிலை தோரணம், அழகான வண்ணம் மிகுந்த வாசனை மிகுந்த பூக்களைத் தொடுத்து நிலைவாசலில் கட்டி வைப்பது லக்ஷ்மி தேவிக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம்.

பொதுவாகவே இது நாம் எல்லோருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு உள்ளது. இருப்பினும் நிறைய பேர் மேல் சொன்ன விஷயங்களை கடைபிடிப்பது கிடையாது. இதற்கு நேரம் இன்மை ஒரு காரணமாக இருக்கலாம். சில பெண்களுக்கு உடல் நல பிரச்சனை காரணத்தினாலும் இப்படிப்பட்ட வேலைகளை கவனிக்க முடியாத சூழ்நிலை ஏற்படலாம்.

- Advertisement -

எந்த பிரச்சினையாக இருந்தாலும் வாரம் ஒருமுறை வெள்ளிக்கிழமை மட்டுமாவது நிலை வாசப்படியை மங்களகரமாக இருக்கும்படி வைத்துக் கொள்ள வேண்டியது ஒரு பெண்ணினுடைய கடமையாக சொல்லப்பட்டுள்ளது. சரி நம் வீட்டு மகாலட்சுமி நம் நிலை வாசல் படியை விட்டு தாண்டாமல் இருக்க வேண்டும் என்றால் மேல் சொன்ன விஷயங்களோடு சேர்த்து இன்னும் சக்தி வாய்ந்த பரிகாரத்தை நம்மால் செய்ய முடியுமா என்று கேட்டால், நிச்சயம் முடியும்.

thoranam

சுக்கிரனின் அம்சம் இருந்தால் வீட்டில் நிச்சயமாக மகா லட்சுமி வாசம் செய்வாள். சுக்கிரனின் அம்சம் பொருந்தியது வெள்ளி. வெள்ளியினால் செய்யப்பட்ட ஏதாவது ஒரு பொருளை, நம் நிலை வாசப்படியில் கட்டினால் நம் வீட்டில் லட்சுமி தேவி நிரந்தரமாகக் குடி கொள்வாள். வெள்ளி வாங்குவதற்கு கொஞ்சம் காசு செலவு ஆகத்தான் செய்யும். எத்தனையோ விஷயங்களுக்கு அனாவசியமாக செலவு செய்கின்றோம். நம் வீட்டில் லட்சுமி கடாட்சத்திற்காக கொஞ்சம் காசு செலவு பண்ணி வெள்ளி பொருளை வாங்கினால் அதன் மூலம் நமக்கு நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்பு கிடையாது.

- Advertisement -

வெள்ளிப் பொருட்களை வாங்க வாங்க, நீங்கள் செலவு செய்யும் பணம் நிச்சயமாக உங்களுக்கு இரட்டிப்பாக திரும்பவும் வந்துவிடும். ஒரு லட்சுமி நாணயத்தை வாங்கி நிலை வாசலின் மேல், அதாவது வாசல் கால் மரம் இருக்கும் அல்லவா? அந்த மரத்தின் மேல் பக்கத்தில் நடுப்பக்கத்தில் வெள்ளியினால் செய்யப்பட்ட லட்சுமி நாணயத்தை ஏதாவது ஒரு பேஸ்ட் போட்டோ அல்லது டேப் போட்டு ஒட்டி விடலாம்.

velli-kambi

அப்படி இல்லை என்றால் உங்களால் மெல்லிய வெள்ளிக் கம்பி வாங்க முடியுமென்றால் நிலை வாசப்படிக்கு இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் மரத்தின் மேல் ஆணி அடிக்க கூடாது. சுவற்றில் ஆணி அடித்து வெள்ளிக் கம்பியை கட்டி வைத்தாலும், நம் வீட்டு மகாலட்சுமி நம் வீட்டிற்குள் நிரந்தரமாக குடி இருப்பாள்.

- Advertisement -

வீட்டிற்குள் இருக்கும் ஐஸ்வர்யம் இந்த வெள்ளிக் கம்பியை தாண்டி உங்கள் வீட்டை விட்டு வெளியே செல்லாது என்பது மட்டும் உறுதி. வெளியே இருக்கும் ஐஸ்வர்யத்தை ஈர்க்கும் தன்மையும் இந்த வெள்ளி உலோகத்திற்கு உண்டு. நம் வீட்டின் ஐஸ்வர்யத்தையும் மேலும் மேலும் உயர்த்தி தரும். லட்சுமி கடாட்சத்தை நம் வீட்டில் நிலைநிறுத்த சுலபமான சுபிட்சமான பரிகாரம் இது. நம்பிக்கையுள்ளவர்கள் முயற்சி செய்து பார்க்கலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
இந்த கோவிலுக்கு ஒரு முறை சென்று வந்தால் கூட போதும். கணவன் மனைவிக்குள் ஆயுசு முழுக்க பிரச்சினை வருவதற்கு வாய்ப்பே கிடையாது.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -