நிலைவாசல் படியில் இந்த 1 பொருள் இருப்பதை பார்த்து விட்டால் போதும். உங்களுக்கு கெடுதல் செய்ய வேண்டும் என்று வீட்டிற்குள் வருபவர்கள், அப்படியே தலை தெறிக்க திரும்பி ஓடி விடுவார்கள்.

koyya
- Advertisement -

நம்மை சுற்றி இருப்பவர்கள் நமக்கு நல்லது கூட செய்ய வேண்டாங்க. ஆனால் கெடுதல் நினைக்காமல் இருந்தால் போதும். நாம் நன்றாக வாழ்வதை பார்த்து பொறாமை படக்கூடிய அந்த நாலு பேரை சமாளிப்பதற்காக இந்த பதிவு. சில பேர் வருவார்கள். நாம் எப்படி சாப்பிடுகின்றோம். எப்படி வீட்டில் வேலை செய்கின்றோம். எப்படி ஆடை அணிந்து கொள்கின்றோம். எப்படி நம் குழந்தைகளை பார்த்துக் கொள்கின்றோம். நம்முடைய வீட்டை எப்படி பராமரிக்கின்றோம். நமக்கு எப்படி வருமானம் வருகின்றது. இவர்கள் மட்டும் எப்படி இவ்வளவு சந்தோஷமாக வாழ்கிறார்கள் என்பதை நோட்டமிடுவதற்காகவே சில பேர் நம் வீட்டிற்குள் நுழைவார்கள்.

வயிற்றெரிச்சல் கொண்டவர்களும், பொறாமை திருஷ்டி பார்வை கொண்டவர்களும், நம் வீட்டிற்குள் வந்து சென்றால், வீட்டில் பெரிய பிரச்சனை வந்துவிடும். சந்தோஷமாக இருந்த குடும்பத்தில் சண்டை வந்துவிடும். இந்த பிரச்சனையில் இருந்து எப்படி தான் தப்பிப்பது. இவர்களை வீட்டிற்குள் வரவிடாமல் செய்ய என்ன செய்யலாம். அதற்கான ஆன்மீகம் சொல்லும் ஒரு எளிய தாந்திரீக பரிகாரம் தான் இது.

- Advertisement -

கண் திருஷ்டியை விரட்டும் சிவப்பு கொய்யா:
இந்த பரிகாரத்திற்கு நமக்கு சிவப்பு கொய்யா தேவை. அதாவது வெட்டினால் உள் பக்கம் சிவப்பாக இருக்கும் அல்லவா. அந்த கொய்யாப்பழம் தேவை. பொதுவாகவே நாம் எல்லோர் வீட்டிலும் எலுமிச்சம் பழத்தில் தானே சிவப்பு குங்குமம் பூசி வைப்போம். ஆனால் இப்படி உள்ளே சிவப்பாக இருக்கும் கொய்யாப்பழத்தை இரண்டாக வெட்டி நிலை வாசல் படியில் இரண்டு பக்கமும் வைத்து பாருங்கள். அதனுடைய வைப்ரேஷனே வேற.

சிவப்பு நிறத்தில் இருக்கும் கொய்யாப்பழத்தை வெட்டி வைத்ததை, பார்த்த உங்கள் எதிரிகள், உங்கள் வீட்டிற்குள் நுழைய கூட மாட்டார்கள். அட என்னடா இது, எல்லோர் வீட்டிலும் எலுமிச்சம் பழம் தான் இருக்கும். இவர்களுடைய வீட்டில் கொய்யாப்பழம் இருக்கிறதே. நம்மை போன்ற கெட்ட எண்ணம் கொண்டவர்கள் வீட்டிற்குள் வரக்கூடாது என்பதற்காக என்ன செய்து வைத்து விட்டார்களோ, என்று பயந்தே அவர்கள் வீட்டிற்குள் வராமல் தலை தெரிக்க ஓடிவிடுவார்கள்.

- Advertisement -

நமக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் எதை பார்த்தும் பயப்பட மாட்டார்கள். நிச்சயம் வீட்டிற்குள் வருவார்கள். அப்படியே கொய்யாப்பழத்தைப் பார்த்துவிட்டு பொறாமை குணத்தோடு, நமக்கு கெடுதல் செய்ய வேண்டும் என்று சிலர் நம் வீட்டிற்குள் வந்தாலும், அவர்களுடைய எதிர்மறை ஆற்றலை இந்த சிவப்பு கொய்யாப்பழம் தன்னுள்ளே ஈர்த்துக் கொள்ளும்.

ஞாயிற்றுக்கிழமை தினத்தில் இந்த பரிகாரத்தை செய்யலாம். அமாவாசை தினத்தில் இந்த பரிகாரத்தை செய்யலாம். செவ்வாய்க்கிழமை தினத்திலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். உங்க வீட்டில பெரிய விசேஷம் ஏதாவது வைத்திருக்கிறீர்கள். வீட்டில் விருந்தினர்களின் வருகை இருக்கும் என்றாலும் அந்த சமயத்தில் இந்த பரிகாரத்தை செய்யலாம். கொய்யா பழத்தை வெட்டி ஒரு பாதி இடது பக்கம் வைக்கவும். ஒரு பாதி வலது பக்கம் வைக்கவும். எலுமிச்சம் பழம் வைப்பது போலவே தான் கொய்யா பழத்தையும் வைக்க வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இழந்ததை எல்லாம் திரும்பவும் மீட்டு தரும் இலந்தை பழம்! இனிமேலாவது உங்கள் கையில் இருக்கும் பணம், நகை, சொத்து சுகம், இவைகளை எல்லாம் இழக்காமல் இருக்க இதை மட்டும் செய்யுங்கள் போதும்.

கொய்யாப்பழத்தை வைத்த அடுத்த நாளோ அல்லது அதற்கு மறுநாளோ அந்த பழம் வாடிவிடும். அதை உடனடியாக எடுத்து குப்பை தொட்டியில் போட்டு விடுங்கள். அவ்வளவுதான். உங்கள் வீட்டை பிடித்த திருஷ்டி கழிந்து விடும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன இந்த எளிமையான பரிகாரத்தை செய்து பார்த்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -