பெண்கள் தங்கள் மனதில் நினைத்ததை சாதித்துக் கொள்ள, தினமும் இப்படி கோலம் போடுங்கள். இந்த கோலம் போடும்போது நீங்கள் என்ன நினைத்தாலும் அது உடனே நடக்கும்.

women3
- Advertisement -

ஒரு வீட்டில் இருக்கக்கூடிய பெண் மகாலட்சுமியின் அம்சம் பொருந்தியவள். ஆக வீட்டில் இருக்கும் பெண்கள் மன கசப்போடு, மனக்கஷ்டத்தோடு, மன அழுத்தத்தோடு, இருக்கக் கூடாது. பெண்களின் மனது எப்போதும் சந்தோஷமாகத்தான் இருக்கனும். அப்போதுதான் அந்த வீட்டில் சுபிட்சம் நிறைவாக இருக்கும். வீட்டில் இருக்கும் அம்மா, மனைவி, அக்கா, தங்கை, பெண் குழந்தைகள் என்று இப்படி எல்லா விதமான பரிமாணத்தில் இருக்கும் பெண்களுக்கும் இந்த விஷயம் பொருந்தும். எந்தப் பெண்ணையும் அனாவசியமாக கண்கலங்க வைக்காதீர்கள். அந்தப் பாவமே நம்முடைய குடும்பத்திற்கு பெரிய பாவமாக வந்து சேர்ந்துவிடும். ஒரு பெண், இன்னொரு பெண் மனது நோகும் படி கூட பேசவே கூடாது.

நினைத்தது நடக்க பெண்கள் போட வேண்டிய கோலம்
தினமும் பெண்கள் தங்களுடைய வீட்டில் வாசல் தெளித்து கோலம் போட வேண்டும். பூஜையறையில் கோலம் போட வேண்டும். சமையல் அறையில் கோலம் போட வேண்டும், என்று நம்முடைய சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அது ஏன் தெரியுமா. அதற்கான விளக்கத்தையும் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். தண்ணீர் தெளித்து அரிசி மாவு கோலம் போட வேண்டும் என்றுதான் சாஸ்திரம் சொல்லி வைத்திருக்கின்றது. (இன்று கோலப்பொடியில் கோலம் போடுகின்றோம்).

- Advertisement -

மனது சார்ந்த எந்த ஒரு பிரச்சனைக்கும் தீர்வு தரக்கூடிய கிரகம் சந்திரன். சந்திரனுக்கு உரியது நீர், சந்திரனுக்கு உரியது பச்சரிசி. ஆகவே தான் பெண்களை தினமும் காலையில் தண்ணீர் தெளித்து பச்சரிசி மாவால் கோலம் போட வேண்டும் என்று சொல்லி வைத்துள்ளார்கள். காலையில் எழுந்ததும் இந்த வேலையை பெண்கள் செய்யும் போது அவர்களுடைய மனது தெளிவு பெறும். தினமும் காலையில் எழுந்து வாசல் தெளித்து கோலம் போடும்போது உங்களுடைய குடும்பம் சுபிட்சமாக இருக்க வேண்டும் என்று நினைத்து கோலம் போட்டு பாருங்கள். உங்கள் வீட்டில் பெரிய அளவில் எந்த கஷ்டமும் வராது.

பூஜை அறையை துடைத்து சுத்தம் செய்துவிட்டு, அந்த பூஜை அறையில் பச்சரிசி மாவால் கோலம் போடும்போது, உங்களுக்கு எது தேவையோ அந்த வேண்டுதலை வைத்து பாருங்கள். அந்த வேண்டுதல் நிச்சயம் பலிக்கும். இதே போலத்தான் சமையலறையில் கோலம் போடும் போதும் உங்களுடைய மனதில், உங்களுடைய குடும்பம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு கோலம் போட்டால் அந்தப் பிரார்த்தனை பலிக்கும். ஆனால் இந்த வேண்டுதல் எல்லாம் பலிக்க வேண்டும் என்றால் நீங்கள் வெறும் பச்சரிசி மாவை அரைத்துத்தான் கோலம் போட வேண்டும். கோலப்பொடியை கலந்தோ அல்லது கோலப்பொடியிலோ அல்லது சாக்பீஸிலோ கோலம் போடக்கூடாது.

- Advertisement -

இதே போல வீட்டில் இருப்பவர்களுக்கு நவகிரகங்களால் பிரச்சனை, ஜாதகத்தில் கட்டம் சரியில்லை, தோஷம் இருக்கிறது, திருமணம் நடக்கவில்லை, நல்ல வேலை கிடைக்கவில்லை, படிப்பு சரியாக வரவில்லை, இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் ஜாதகத்தை சார்ந்து அமைந்திருக்கிறது.

இதையும் படிக்கலாமே: கடவுளின் மீது சத்தியம் செய்வதும், கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்வதும் குடும்பத்திற்கு நல்லதா? கெட்டதா? அடிக்கடி நீங்கள் இப்படி சத்தியம் செய்பவர்களாக இருந்தால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் தெரிஞ்சுக்கோங்க.

அதை சரி செய்ய தினம் தோறும் பூஜை அறையில் நவகிரகங்களுக்கு உண்டான கோலத்தை போட வேண்டும். சனி ஞாயிறு திங்கள் என்று வரக்கூடிய அந்த 7 நாட்களுக்கு, 7 கோலங்கள் உள்ளது. அதை தேர்ந்தெடுத்து பூஜை அறையில் போட்டு வந்தால், கிரகத்தின் மூலம் வரக்கூடிய தோஷங்கள் விலகும் என்பது குறிப்பிடத்தக்க ஒரு விஷயம். ராகு கேது நிழல் கிரகங்கள். அவைகளுக்கு தனியாக கோலங்கள் கிடையாது. மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்களில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -