கடவுளின் மீது சத்தியம் செய்வதும், கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்வதும் குடும்பத்திற்கு நல்லதா? கெட்டதா? அடிக்கடி நீங்கள் இப்படி சத்தியம் செய்பவர்களாக இருந்தால் இந்த ஒரு விஷயத்தை மட்டும் தெரிஞ்சுக்கோங்க.

sathiyam
- Advertisement -

நம் பக்கம் இருக்கக்கூடிய நியாயத்தை அடுத்தவர்களுக்கு புரிய வைக்க வேண்டும் என்பதற்காக சிலர் இப்படி அடிக்கடி சத்தியம் போடுவார்கள். கடவுள் மீது சத்தியம், கற்பூரத்தை அணைத்து சத்தியம் செய்கிறேன். என் பக்கம் தவறே இல்லை என்று சாதிப்பார்கள். இப்படி கடவுளின் மீதும், கற்பூரத்தின் மீதும் சத்தியம் செய்வது நல்லதா? கெட்டதா? இப்படி சத்தியம் செய்வதன் மூலம் குடும்பத்திற்கு எப்படிப்பட்ட பிரச்சனைகள் வரும் என்பதைப் பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலைத்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

சத்தியம் செய்வது நல்லதா? கெட்டதா?
முதலில் கடவுளின் மீதும், கற்பூரத்தின் மீது சத்தியம் செய்வது ரொம்ப ரொம்ப தவறு. அப்படி ஒரு சத்தியத்தை மனிதர்கள் செய்யவே கூடாது. கற்பூரத்தை அனைத்து நாம் சத்தியம் செய்யவில்லை. கற்பூரத்தில் எரிந்து கொண்டிருக்கும் அக்னி பாவாகவானின் தலையில் கை வைத்துதான் சத்தியம் செய்கின்றோம். அப்படி செய்த சத்தியத்தை நாம் மீறினால் அந்த அக்கினி பகவான் நம்முடைய ஏழேழு தலை முறையையும் பொசிக்கி விடுவார் என்று சொல்கிறது சாஸ்திரம்.

- Advertisement -

நாம் எதோடு வேண்டுமென்றாலும் விளையாடலாம். ஆனால், நெருப்புடன் விளையாடக் கூடாது என்று சொல்லுவார்கள். அதற்கு ஒருவகையில் இதுவும் தான் ஒரு அர்த்தம். விளையாட்டுத்தனமாக நெருப்பின் மேல் கையை வைத்து அடித்து, விளையாட்டாக கூட யாரும் சத்தியம் செய்து விடாதீர்கள். அப்படி நீங்கள் அந்த சத்தியத்தை செய்து விட்டால், கடைசி வரைக்கும் அதை நீங்கள் மீறக் கூடாது. நெருப்பில் இறங்கி தங்கள் பக்கம் நியாயம் இருப்பதை நிரூபித்த புராணக் கதைகள் உண்டு. இப்படி நெருப்போடு சத்தியம் செய்து, நெருப்பில் இறங்கி தன்னை நிரூபித்த மனிதர்கள் எல்லாமே, இறைவன் அவதாரங்கள் தான். இதையும் மீறி நான் நெருப்பில் அடித்து சத்தியம் செய்வேன் என்றால் நீங்கள் அந்த கடவுளுக்கு இணையான, ரிஷிகளுக்கு இணையான, அதிஉத்தமமான மனிதர்களாக இருக்க வேண்டும். நிச்சயமாக சாதாரண மனிதராலுக்கு இது சாத்தியம் கிடையாது.

‘நெருப்பு என்றால் சுட்டுவிடுமா’ என்று பல பேர் சொல்லி இந்த வாக்கியத்தை கேள்விப்பட்டிருப்போம். நெருப்பின் மீது சத்தியம் செய்கின்றேன் என்று வாயில் வார்த்தைகளாக உச்சரிக்கும் போது, அது நம்மை சுடாது. ஆனால் அந்த வாக்கை நாம் மீறி நடக்கும் போது அந்த நெருப்பு நம்மை நிச்சயம் சுடும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே எக்காரணத்தைக் கொண்டும் ஒரு பேச்சுக்காக கூட கடவுள் மீது சத்தியம் செய்கிறேன் நெருப்பின் மீது சத்தியம் செய்கிறேன் என்று சொல்லவே சொல்லாதீங்க. இப்படி சத்தியம் செய்வது நம்மை தற்காலிகமாக பிரச்சினையில் இருந்து காப்பாற்றி விடும். ஆனால் அதற்கு பின்னால் இந்த குற்ற உணர்ச்சி, நீங்கள் செய்த பாவமும் உங்களுடைய தலைமுறைக்கு பாவமாக மாறிவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது.

- Advertisement -

ஒவ்வொரு நிமிடமும் மனிதர்கள் பேசக்கூடிய சொல்லுக்கும் செயலுக்கும் சாட்சியாக அந்த சூரிய பகவான் இருக்கின்றார். யாரும் பார்க்கவில்லை என்று, எந்த சூழ்நிலையிலும் உங்கள் மனதறிந்து எந்த தவறையும் செய்யாதீங்க. எல்லாவற்றையும் மேலே இருக்கக்கூடிய இறைவன் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான். ஆகவே சத்தியம் செய்து தான் உங்களை நிரூபிக்க வேண்டும் என்ற அவசியம், எந்த இடத்திலும் கிடையாது.

இதையும் படிக்கலாமே: எந்நேரமும் சண்டையும் சச்சரவுமாக இருக்கும் வீட்டை கூட அமைதி பூங்காவை போல் மாற்றிட, இதை தவறாமல் செய்தாலே போதும்

நீங்கள் தவறு செய்யவில்லை. ஆனாலும் பழிச் சொல்லும் பாவமும் உங்களை வந்து சேர்ந்து அடைகிறதா. ஏதோ ஒரு கர்மா கழிய போகிறது என்று நினைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் இன்னொரு மனிதருக்கு உங்களை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக, இப்படி அக்கினியின் மீது சத்தியம் செய்து, உங்கள் குடும்பத்திற்கு ஒருபோதும் பாவத்தை சேர்த்து விடாதீர்கள். சத்தியம் செய்தால் தான் நீங்கள் நல்லவராக இருக்க முடியும் என்று எந்த இடத்திலேயுமே நமக்கு முன்னோர்கள் சொல்லி வைக்கவில்லை. ஆகவே இப்படி ஒரு பழக்கம் உங்களிடம் இருந்தால் அதை இன்றோடு மாற்றிக் கொள்ளுங்கள். நிச்சயமாக நல்லது நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -