வீட்டில் சுப காரிய தடை விலக வேண்டுமா? உங்கள் கையால் இந்த ஒரு புண்ணிய காரியத்தை செய்யுங்கள். நடக்க வேண்டிய நல்ல காரியம் உங்க வீட்டில் தானாகவே நடக்கும்.

- Advertisement -

வீட்டில் சுப காரிய தடைகள் இருக்கும். சில நல்ல விஷயங்களை நம்மால் ஆரம்பிக்கவே முடியாது. மருத்துவ செலவுகள் ஏராளமாக வந்து கொண்டே இருக்கும். ஆரோக்கியமாக வாழ முடியாமல் கஷ்டப்பட்டு வருவோம். இப்படிப்பட்ட பிரச்சனைகள் உள்ள வீடுகளில் சில புண்ணிய காரியங்களை செய்ய வேண்டும். புண்ணிய காரியங்கள் என்றால் என்ன. பிரதிபலன் எதிர்பார்க்கக் கூடாது. ஆனால் அடுத்தவர்களுக்கு மனதார உதவியை செய்ய வேண்டும். எப்படிப்பட்ட உதவிகளை செய்யலாம் என்பதை பற்றிய சின்ன சின்ன சில புதிய குறிப்புகளை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

நம்மிடம் இருக்கக்கூடிய ஒன்றை, மனதார இல்லாதவர்களுக்கு தானம் செய்ய வேண்டும். எதுவாக இருந்தாலும் சரி, ஒரு மூட்டை அரிசி வாங்குறீங்க. அதில் குறைந்தது 2 கிலோ அரிசியையாவது இல்லாதவர்களுக்கு தானம் கொடுக்க வேண்டும். உங்க வீட்டில் இருப்பவர்களுக்கு 10 பேருக்கு புதிய ஆடை எடுக்கிறீர்கள். பத்தாயிரம் செலவாகிறது என்று வைத்துக் கொள்வோம். அதில் ஆயிரம் ரூபாய்க்காவது ஒரு இல்லாத ஏழை குழந்தைக்கு புது துணியை வாங்கி கொடுக்கலாம்.

- Advertisement -

இன்னொரு விஷயமும் செய்யலாம். நம் வீட்டில் சுப காரியத்தை விலக வேண்டும் என்றால் நம் கையால் அடுத்தவர்களுடைய வீட்டில் ஒரு சுப காரியத்தை நடத்தி வைக்கலாம். கஷ்டப்படும் குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண்ணுக்கோ ஆணுக்கும் திருமணத்திற்கு தேவையான பட்டு துணிகளை தானமாக கொடுக்கலாம். அது எப்படி தெரியுமா.

கோவிலில் இறைவனுக்கு சாத்திய வஸ்திரங்களை ஏலம் விடுவார்கள். கொஞ்சம் விலை உயர்ந்த பட்டு புடவை, விலை குறைவாக கிடைக்கும். பட்டு வேட்டிகள் கூட கொஞ்சம் மலிவான விலையில் ஏலம் எடுக்க முடியும். இப்படிப்பட்ட பட்டு வேட்டி பட்டுப்புடவையை வாங்கி திருமணம் ஆகாத ஏழை பெண்ணுக்கு ஆணுக்கும் தானமாக கொடுப்பது நல்ல பலனை கொடுக்கும்.

- Advertisement -

நாம் ஏலம் எடுத்த துணிமணிகளை, நாமுன் நம் வீட்டில் இருப்பவர்களும் உடுத்திக் கொண்டாலும் கூட தவறு கிடையாது. சிலருக்கு இதில் நிறைய சந்தேகங்கள் இருக்கிறது. கோவிலில் ஏலம் விடக்கூடிய புடவையை வாங்கலாமா. வேண்டாமா, அப்படி வாங்கினால் அந்த புடவையை நாம் உடுத்திக் கொள்ளலாமா என்ற சந்தேகம் தான் அது. தாராளமாக கோவிலில் ஏலம் விடும் புடவையை வேட்டியை நாம் வாங்கலாம். தவறு கிடையாது அதை நாமும் உடுத்திக் கொள்ளலாம். இல்லாதவர்களுக்கு தானமாக கொடுப்பது இன்னும் இன்னும் சிறப்பான பலனை கொடுக்கும்.

சில பேர் தங்களுக்கு இருக்கக்கூடிய தோஷம் விலக பரிகாரத்திற்காக கூட அங்கவஸ்திரம், வேட்டி புடவையை கோவிலில் உள்ள சுவாமிக்கு தானமாக கொடுப்பார்கள். இருக்கட்டும். அது இறைவனின் பாதங்களை போய் சேர்ந்து விட்டால் அது இறைவனின் வஸ்திரமாகிவிட்டது. நாம் இறைவனிடம் இருந்துதான் அந்த பொருளை வாங்க போகின்றோம். ஆகவே வேண்டிக் கொண்டு தானம் செய்தவர்களுடைய தோஷமும், அவர்களுடைய கஷ்டமும் நம்மை வந்து தொற்றிக் கொள்ளும் என்ற பயம் கூட உங்களுக்கு தேவை கிடையாது.

எந்த ஒரு விஷயத்தை செய்வதாக இருந்தாலும் மனநிறைவோடு தான் செய்ய வேண்டும். இப்படி கோவிலில் இருந்து ஏலம் எடுக்கக்கூடிய பொருட்களை, வாங்குவதில் உங்களுக்கு மனநிறைவு கிடையாது எனும் பட்சத்தில் அதை நீங்க செய்யாதீங்க. ஆனால் யாராவது அதை ஏலம் எடுக்கப் போகிறார்கள் என்றால் அவர்களிடம் ஏதாவது சொல்லி குழப்பி அவர்கள் செய்யக்கூடிய அந்த நல்ல காரியத்தை தடுக்காதீர்கள் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -