கல் உப்பு ஜாடியில், யாருக்கும் தெரியாமல், பெண்கள் இந்த 1 பொருளை மறைத்து வைத்தால், உங்கள் கஷ்டங்களும் யாருக்குமே தெரியாமல் மறைந்து போகும்.

uppu

ஏதாவது ஒரு பரிகாரத்தை செய்தால், நம்முடைய கஷ்டங்கள் கண்ணுக்குத் தெரியாமல் காணாமல் போய் விடாதா என்ற ஏக்கத்தோடு இருப்பவர்களுக்கு இந்த பதிவு மிகவும் உபயோகமானதாக இருக்கும். நம்பிக்கையோடு செய்தால், எந்த பரிகாரமும் பலன் இல்லாமல் போவதற்கு வாய்ப்பே கிடையாது. அந்த வரிசையில் நம்பிக்கையை மட்டுமே மூலதனமாக வைத்து, உப்பு ஜாடியில் இந்த ஒரு பொருளை வீட்டில் இருக்கும் பெண்கள், அவர்கள் கையில் வைத்தாலே போதும். எல்லா நல்லதுமே உங்கள் வசமாகும் என்பதில் ஒரு துளி அளவும் சந்தேகம் கிடையாது. நிச்சயமாக அந்த வீட்டில் இருக்கும் பெண்கள் தான் இந்த பொருளே கல் உப்புக்கு நடுவே மறைத்து வைக்க வேண்டும்.

salt

கல் உப்பை நிரம்ப உப்பு ஜாடியில் கொட்டி வைத்தால், வீட்டில் செல்வ செழிப்பு இருக்கும் என்பது நாம் எல்லோரும் அறிந்த உண்மை. ஆனால் வெள்ளிக்கிழமைதோறும் கலப்பை வாங்கியும் உங்களுடைய வீட்டில் கஷ்டம் குறையவில்லை என்றால், கல் உப்பில் இருக்கக்கூடிய வசிய தன்மையை அதிகப்படுத்த வேண்டும். நேர்மறை ஆற்றல்களை நன்மைகளை, ஈர்க்கக்கூடிய ஈர்ப்பு தன்மையை, வசிய தன்மையை அதிகரிக்க கூடிய பொருள் என்றால் அது வசம்பு.

பொதுவாகவே வசம்பை வீட்டில் வைத்திருந்தால், ஒரு வசிய தன்மை ஏற்படும். காத்து கருப்பு அண்டாது. வீட்டில் எதிர்மறை ஆற்றல் தங்காது. ஆகவே தான் இந்த வசம்பை நெருப்பில் நன்றாக சுட்டு, தேங்காய் எண்ணெயில் குழைத்து குழந்தைகளுக்கு கூட நெற்றியில் பொட்டாக இட்டு விடும் வழக்கம் உள்ளது. குழந்தைகளின் கையிலும் காலிலும் கூட எதிர்மறை ஆற்றல் தாக்காமல் இருக்க வசம்பை கட்டி வைத்து இருப்பார்கள்.

உங்களுடைய வீட்டில் உப்பு ஜாடியில் முதலில் ஒரு வசம்பை போட்டுவிட்டு, அதன் பின்பு அந்த வசம்பு, தெரியாத அளவிற்கு எப்போதுமே கல் உப்பை நிரப்பி வைத்திருக்க வேண்டும். இப்படி செய்து வரும் பட்சத்தில் உங்கள் வீட்டில், நீங்கள் தொடங்கும் எந்த செயலாக இருந்தாலும், அது உங்களின் வசமாகும். லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்கும்.

- Advertisement -

வீட்டுப் பெண்கள் மகாலட்சுமியின் அம்சமாக சொல்லப்பட்டு இருப்பதால், வீட்டில் இருக்கும் பெண்களின் கைகளால் இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம், அந்த வீடே ராசியாக மாறும். குடும்ப கஷ்டம் தீரும். மன நிம்மதி பிறக்கும். வசம்பை அடிக்கடி மாற்ற வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. நீண்ட நாட்களுக்கு வசம்பு அப்படியேதான் இருக்கும்.

mahalashmi3

கல் உப்பை வைத்து நிறைய பரிகாரங்களை செய்தும் பலன் அளிக்காமல் இருக்கும்பட்சத்தில், வசம்பை போட்டு கொட்டி வைத்திருக்கும் கல் உப்பை எடுத்து அந்த பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள். அந்த பரிகாத்தின் பலன் சீக்கிரமே நல்ல பலனை அடையலாம் என்பதும் உறுதியான விஷயம் தான். இதேபோல் வசம்புடன் சேர்ந்த இருக்கும் கல் உப்பை வைத்து, திருஷ்டி கழித்தாலும் சரி, திருஷ்டியானது சுத்தமாக நீங்கி விடும் என்பது உறுதி.

uppu jaadi

ஒரே ஒரு வசம்பை கல்லுப்பு சேர்த்து சிறிய மஞ்சள் துணியில் கட்டி, வீட்டின் நில வாசப்படியில் கட்டி வைத்தாலும் வீட்டிற்குள் மூதேவி நுழைய மாட்டாள். ஸ்ரீதேவி நிரந்தரமாக உங்கள் வீட்டில் தங்குவாள் என்பதும் நிதர்சனமான உண்மை. நீங்கள் முயற்சி செய்து பாருங்கள். நம்பிக்கையோடு செய்யும் பட்சத்தில் நல்ல பலனை பெற முடியும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
திருமணம் ஆன பின்பு தான் ‘எனக்கு வாழ்க்கையில் கஷ்டமே ஆரம்பித்தது’ என்ற எண்ணம் உங்களில் யாருக்காவது உள்ளதா? 48 நாட்களில் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க இந்த ஒரு பரிகாரம் போதுமே!

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.